அரசு பள்ளிகளுக்கு Printers & 'A4' பேப்பர் வாங்குவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை - TNTeachersTrends

Latest

Sunday, November 9, 2025

அரசு பள்ளிகளுக்கு Printers & 'A4' பேப்பர் வாங்குவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை



அரசு பள்ளிகளுக்கு பிரின்டர், 'ஏ4' பேப்பர் வாங்குவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை Request for allocation of funds for purchasing printers and 'A4' paper for government schools

அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்படுத்தும்போதே, மாணவர்கள் பயன்பாட்டிற்கு உரிய பொருட்களுக்கும் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கல்வி பொள்ளாச்சி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பருவ, இடைப்பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்க வகுப்புகளுக்கு ஏற்ப, 65 முதல் 120 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, தேர்வின்போது, மாணவர்களே 'ஏ4 சைஸ்' பேப்பர் வாங்கிச் செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் வாங்கிச் செல்லும் பேப்பர், ஒரே இருக்காது மாதிரியாக என்பதால், பள்ளி தலைமையாசிரியர்கள் அல்லது ஆசிரியர்கள் ஏ4 சைஸ்' பேப்பர் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இந்த நிலையை சமாளிக்க, அனைத்து அரசு பள்ளிகளுக்கு பிரின்டர் மற்றும் பேப்பர் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையினர் கூறு பள்ளிகளுக்கும் பிரின்டர் கையில், 'அனைத்து அரசுகள் மற்றும் 'ஏ4 சைஸ்' பேப்பர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக அந்தந்த பள்ளிக்கு இ-மெயிலில் அனுப்பப்படும் வினாத்தாள் பக்கங்களை நகல் எடுத்து, எளிதாக மாணவர்களுக்கு வழங்கலாம்.

அவ்வகையில், வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 'ஏ4 சைஸ் பேப்பர்' வாங்குவதற்கான நிதி ஒதுக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

No comments:

Post a Comment