Future Ready - 1 - 9th Std - Question Paper Download செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் குறித்த தகவல் - Step By Step Procedure
Future Ready Question Paper Download செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் குறித்த தகவல்
6 முதல் 9 ஆம் வகுப்புக்கான FUTURE READY வினாத்தாள்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாநில மதிப்பீட்டுப் புலம் https://exam.tnschools.gov.in/#/ என்ற இணையத்தளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
FUTURE READY வினாத்தாள்களை 27.10.2025 முதல் 31.10.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
FUTURE READY மாதாந்திர பயிற்சி மதிப்பீட்டுப் புலம்
மாநில மதிப்பீட்டுப் புலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர FUTURE READY பயிற்சி வினாக்கள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வினாக்கள் வழங்குதல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்குதல்
👉 1 முதல் 5 ஆம் வகுப்பு களுக்கான FUTURE READY வினாத்தாள்களை ஆசிரியர்கள் EMIS login வழியாக CMS வலைதளம் மூலம் அணுகலாம்
👉 6 முதல் 9 ஆம் வகுப்புக்கான FUTURE READY வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in/#/ என்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
FUTURE READY வினாத்தாள்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ் வினாத்தாள்கள் அக்டோபர் 2025 முதல் மாதம் தோறும் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
👉 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் உள்ள Smart Board இல் EMIS Login வழியாக CMS Portal லிருந்து FUTURE READY கேள்விகளை காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்
👉 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் இவ்வினாத்தாள்கள் எண்ணும் எழுத்தும் செயல்பாடாகவும்
👉 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாகவும் பயன்படுத்த வேண்டும்
. 👉 1 முதல் 5 வகுப்புகள் வரை வினாத்தாள்கள் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதனை பதிவிறக்கம் செய்து, தேவையான எண்ணிக்கையில் பிரதி எடுத்து, பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
👉மாதத்தின் முதல் வாரம் (November 2025) பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை கொண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
👉 தற்பொழுது 6 முதல் 8 வகுப்புகளுக்கான வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
💧1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாக பயிற்சி அளிக்க வேண்டும்.
*1 முதல் 5 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.
https://emis.tnschools.gov.in
⬇️
Class Teacher Id & Password
⬇️
Go to CMS PORTAL
⬇️
My courses
⬇️
*Future Ready Question 2025*
*6 முதல் 9 ஆம் வகுப்பு வரை -வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை*
https://exam.tnschools.gov.in
⬇️
HM login
⬇️
Descriptive
⬇️
Download QP
அனைத்து அரசு தொடக்க,நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது
Future Ready Practice Questions Guidelines for Students of Classes 1 to 9 - Joint Processes of SPD, DSE & SCERT Director! - 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!
மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண்.1602118/ G4/2025, நாள்.24.10
பொருள்:
பள்ளிக் கல்வி - மாநில மதிப்பீட்டுப் புலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் வழிகாட்டு மாணவர்களுக்கான மாதாந்திர Future Ready பயிற்சி வினாக்கள் நெறிமுறைகள் மற்றும் வினாக்கள் வழங்குதல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்ந்து.
பார்வை: 1.
.10.2025 மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான G.O. (Ms) No.155, School Education (ERT) Department, dated 16.11.2021 சென்னை-06, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டக்குறிப்பு நாள்: 11.07.2025,19.08.2025
தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம்" பார்வை (1)-ல் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பார்வை (2)ல் காணும், மாநிலத்திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்களின் கூட்டக்குறிப்பின்படி, மாணவர்களிடம் அடைவுத் தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு Future- ready” திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் பாடம் சார்ந்த பொது அறிவு போன்றவற்றில் மாணவர்கள் பயின்ற கற்றல் விளைவை ஒட்டிய உயர் சிந்தனை வினாக்கள் தயாரிக்கப்பட்டு தற்போது மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வினாக்களை இனி வரும் காலங்களில் CMS வலைத்தளம் வழியாக பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி 'Future-ready' வினாத்தாள்களை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இவ்வினாக்களைப் பதிவிறக்கம் செய்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட அறிவுறுத்தப்படுகிறது.
1 முதல் 5 ஆம் வகுப்புக்கான Future-ready' வினாத்தாள்களை ஆசிரியர்கள் CMS வலைத்தளம் வழியாக அணுகலாம். 6 முதல் 9 ஆம் வகுப்புக்கான Future-ready' வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
3 Future-ready' வினாத்தாள்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் முழுவதும் அனைத்து அரசுப் செய்ய பதிவிறக்கம்
வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் (இவ்வினாத்தாள்கள் அக்டோபர், 2025 செய்யப்பட்டுள்ளது) முதல் மாதந்தோறும் பதிவிறக்கம் செய்ய வழிவகை 14417 என்ற 4. வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
5. ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் பாடம் சார்ந்த பொது அறிவு வினாக்களுக்கு மாணவர்கள் தாங்களே விடையளிக்கும் கலந்துரையாடி, மாணவர்கள் தாங்கள் கற்றறிந்து புரிந்துகொண்ட பாடப்பொருளின் அடிப்படையில் விடைகளைக் கண்டறியும் வாய்ப்பினை அளிக்க வேண்டும்.
வகையில் பாட ஆசிரியர்கள் மாணவர்களுடன் 6. இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாட வேண்டும். அனைத்து 1 முதல் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களும் இணைப்பு - 1ல் உள்ள வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து 6 முதல் 9 ஆம் வகுப்பு ஆசிரியர்களும் இணைப்பு 2 ல் உள்ள வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். 9. 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளிலுள்ள Smart Board-இல், CMS Portal-லிலிருந்து Future Ready கேள்விகளை காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
10. மேற்கண்ட செயல்பாடுகள் சிறந்த முறையில் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஒவ்வொரு தலைமையாசிரியரும் கண்காணிக்க வேண்டும்.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் இவ்வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாகவும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் இவ்வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறைச் செயல்பாடாகவும் பயன்படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் இணைப்பிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணைப்பு-1 வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பு 1முதல் 5 - EMIS தளத்திலிருந்து CMS Portal - ஐ அணுகும் வழிமுறைகள்
படி1: EMIS போர்ட்டலில் உள்நுழையவும்
https://emis.tnschools.gov.in இணையதளத்திற்குச் சென்று ஆசிரியர் தங்களது EMIS பதிவெண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும்.
படி 2: CMS Portal - க்கு செல்லுதல்
உள்நுழைந்த பிறகு, பக்கத்தின் மேல் வலது புறம் அமைந்துள்ள உங்கள் சுயவிவரப் பெயரைக் (profile name) கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் தோன்றும் பெட்டியலிருந்து, Go To CMS என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3:உங்கள் coursesகளை அணுகவும்
தாங்கள் தற்பொழுது CMS தளத்திற்குள் செல்வீர்கள். அதன்பின், அனைத்து courses-களையும் காண, navigation bar-ல் உள்ள My courses என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 4: குறிப்பிட்ட Course-ஐ தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து Course-களின் தொகுப்பையும் தற்பொழுது காணலாம். அதன் பிறகு, Future Ready Questions 2025 மீது கிளிக் செய்யவும்.
படி 5:உங்கள் Courses களை தேர்ந்தெடுக்க .
ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கண்டறிய, More Filters பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்களுக்குத் தேவையான பாடம் (Subject), பயிற்று மொழி (Medium), மற்றும் வகுப்பை (Class) தேர்ந்தெடுக்க கீழ்தோன்றும் மெனுக்களைப் பயன்படுத்தவும். தங்கள் தேர்வுகளைத் தேர்வு செய்த பிறகு, நீல நிறத்தில் உள்ள Filter பொத்தானைக் கிளிக் செய்யவும். தொடங்குவதற்கு, விரும்பிய பாடத்தினை கிளிக் செய்யவும்.
இணைப்பு - 2 வழிகாட்டு நெறிமுறைகள்-வகுப்பு 6 முதல் 9 - வினாத்தாள் பதிவிறக்கம்:
வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in() என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும். கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட https://exams.tnschools.gov.in (X) என்னும் EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது.
2. இந்த இணையதளத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளும் தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத அரசுப் பள்ளிகள் வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்தலாம். வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத அரசுப் பள்ளிகள் UDISE பதிவெண்ணையும் அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம்.
உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. அதன்பின் Download Question Paper பகுதியில் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5. பதிவிறக்கம் செய்த PDF வினாத்தாள்களில் பள்ளியின் UDISE எண் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
6. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் உடனடியாக 14417 எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். மேலும் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
7. வினாத்தாள்களை அச்சிடுவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்புடைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் (District Coordinators - Samagra Shiksha) வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்களையும் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
Future Ready Proceedings - Click Here To Download PDF
No comments:
Post a Comment