பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - மதுரையில் 3 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு - TNTeachersTrends

Latest

Sunday, November 9, 2025

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - மதுரையில் 3 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு

Sexual harassment of schoolgirls - POCSO case against 3 teachers in Madurai - பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மதுரையில் 3 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு

மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

மதுரை வசந்தநகர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஆசிரியர் ஜெயராம் 9-ம் வகுப்பில் பாடமெடுக்கும்போது மாணவிகளிடம் ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் பொற்கொடி, உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி ஆகியோரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், ஜெயராம் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் 9-ம் வகுப்பு மாணவிகள் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், "ஆசிரியர் ஜெயராம் மாணவி களை தவறான இடங்களில் தொட்டுப் பேசுகிறார். மாணவர்களிடமும் ஆபாசமாக பேசுகிறார். ஜெய ராமுக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியரும் செயல்படுகின்றனர். இரு சக்கர வாகனத்தில் பாஜக கொடியுடன் வரும் ஜெயராமை தலைமை ஆசிரியர் பொற்கொடி கண்டிக்கவில்லை. அவரது கணவரும் அக்கட்சியில் இருப்பதால், அவர் எங்களைத்தான் மிரட்டுகிறார்" என்று தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராம், பொற்கொடி, கிருஷ்ணவேணி ஆகி யோர் மீது மதுரை தெற்கு மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.

No comments:

Post a Comment