Calculation of how much salary will increase based on the Eighth Pay Commission - TNTeachersTrends

Latest

Thursday, October 30, 2025

Calculation of how much salary will increase based on the Eighth Pay Commission



எட்டாவது ஊதியக்குழு அடிப்படையில், ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு Calculation of how much salary will increase based on the Eighth Pay Commission

எட்டாவது ஊதியக்குழு அடிப்படையில், ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு :

எட்டாவது ஊதியக்குழு, ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.85, 1.90. 2.24 என பலவித கருத்துகள் இருந்தாலும், ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.90 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம் அறியலாம்.

01.01.2026 அன்று ஒருவர் 100 பைசா (1 ரூபாய் ) அடிப்படை ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தேதியில் அகவிலைப்படி சுமார் 60% ஆக இருக்கலாம். அதாவது 01.07.2025 ல் அகவிலைப்படி 58%, 01.01.2026 ல் அகவிலைப்படி 60% என்ற வகையில் அகவிலைப்படி உயரக்கூடும்.

அப்படியென்றால் 01.01.2026 அன்று அடிப்படை ஊதியம் 100 பைசா பெறுபவர், 60% அகவிலைப்படியுடன் சேர்த்து 160 பைசா ஊதியம் பெறுவார். (Rs.1 and Paise 60)

CLICK HERE TO DOWNLOAD 8 வது ஊதியக்குழு மாதிரிக் கணக்கீடு PDF ஊதிய நிர்ணயக் காரணி உருவாகும் விதம்:

01.01.2026 அன்று அடிப்படை ஊதியம்

-100 பைசா

01.01.2026 / 4 (60%)

60 பைசா

மொத்த ஊதியம்

அதாவது, 160 பைசா

160 பைசா

- 1 ரூபாய் 60 பைசா.

எட்டாவது ஊதியக்குழுவில் அரசு தரும் கூடுதல் ஊதியம் 15% முதல் 20% என்ற வரம்புக்குள் இருக்கலாம்.

15% ល់ 1.60 x 15% = 0.24 / 20%

ល់ 1.60 x 20% = 0.32

மொத்த ஊதியம் 1.60 ரூபாய் + 15% அரசு தரும் கூடுதல் ஊதியம் 0.24 = 1.84 ரூபாய்.

மொத்த ஊதியம் 1.60 ரூபாய் + 20% அரசு தரும் கூடுதல் ஊதியம் 0.32 1.92 ரூபாய்.

எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதியம் நிர்ணயம் செய்ய பயன் படுத்தப்படும் ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி கீழ்க்கண்டவாறு இருக்கக்கூடும்.

Fitment Factor-1.84 முதல் 1.92 க்குள் இருக்கும்.

CLICK HERE TO DOWNLOAD 8 வது ஊதியக்குழு மாதிரிக் கணக்கீடு PDF இதன் அடிப்படையில் ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய ஒரு கணக்கீடு:

ஊதியக்குழு நடைமுறை படுத்தப்படும் முன்பு ஊதியம்: (01.01.2026ல்) அடிப்படை ஊதியம் -. 90,000

60% அகவிலைப்படி -.54,000

மொத்த ஊதியம் -. 1,44,000.

01.01.2026 அன்று நிர்ணயம் செய்யப்படும் ஊதியம்:

01.01.2026 அன்று அடிப்படை ஊதியம் ரூ. 90,000

அரசு 15% ஊதிய உயர்வு அளித்தால், ஊதிய நிர்ணய விவரம்:

பெருக்குக்காரணி 1.84 மூலம், நிர்ணயம் செய்யப்படும்.

យ (15.90,000 x 1.84)

- m. 1,65,600 0.0

அகவிலைப்படி . 1,65,600

மொத்த ஊதியம் வித்தியாசம்(1,65,600 1,44,000)

ரூ.21,600.

அரசு 20% ஊதிய உயர்வு அளித்தால், ஊதிய நிர்ணய விவரம்:

பெருக்குக்காரணி 1.92 மூலம், நிர்ணயம் செய்யப்படும்.

យ (15.90,000 x 1.92) -. 1,72,800

அகவிலைப்படி খ. 1,72,800

மொத்த ஊதியம் (1,72,800-1,44,000) 5. 28,800,

(01.01.2026 முதல் 30.06.2026 வரை மட்டும் அகவிலைப்படி 0 என கணக்கிடப்படும்.)

(எட்டாவது ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்டதால், ரூ.90,000 அடிப்படை ஊதியம் பெறுபவருக்கு ரூ.21,600 முதல் ரூ.28,800 வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. HRA, CCA, MA போன்ற படிகளின் உயர்வு தனி.)

அரசு தரும் 15% / 20% ஊதிய உயர்வு என்பது 01.01.2016 முதல் 31.12.2025 வரை அத்தியாவசிய நுகர்வு பொருள்கள் விலை உயர்வின் சராசரி ஆகும். அரசு தரும் ஊதிய உயர்வு, 15% முதல் 20% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆண்டு ஊதிய உயர்வு வழக்கம்போல் 3% ஊதியம் உயர்த்தி வழங்கப்படலாம்.

இதன் அடிப்படையில் Pay Matrix அட்டவணை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD 8 வது ஊதியக்குழு மாதிரிக் கணக்கீடு PDF

No comments:

Post a Comment