இன்று 21.11.2025 வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் மாவட்டங்கள் Employment camp on Friday, 21.11.2025 - TNTeachersTrends

Latest

Thursday, November 20, 2025

இன்று 21.11.2025 வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் மாவட்டங்கள் Employment camp on Friday, 21.11.2025

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025 வெள்ளிக்கிழமையன்று வெண்ணைமலையில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

கரூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் என்ற இணையதளத்தில் பதிவு (www.tnprivatejobs.tn.gov.in) செய்து கொள்ளலாம். இம்முகாமிற்கு அனுமதி முற்றிலும் இலவசமானது. எந்தவிதமான கட்டணமும் இல்லை. இம்முகாமில் பணிநியமனம் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04324223555 மற்றும் 9345261136 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment