இந்திய ரெயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் "ரெயில்வே தேர்வாணையம் மூலம் 2,569 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர், வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் போன்ற பணிகளுக்கு இந்த ஆட்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பணிக்கு மட்டும் அது சார்ந்த பி.எஸ்சி பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
30-11-2025 அன்றைய தேதிப்படி அனைத்து பதவிகளுக்கும் 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (முதல் நிலை, இரண்டாம் நிலை), ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
31-11-2025 வரை ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment