THIRAN - செயல்பாடுகள் பள்ளிகளில் தொடரும் - DSE & DEE Proceedings- THIRAN - Activities will continue in schools - DSE & DEE Proceedings
பொருள்:
பார்வை
பள்ளிக்கல்வி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் -01 அரசு நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு 'திறன்' (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக,
1 2028-26ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் :01
2 சென்னை -6 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், ந.க.எண். 09111 கே 2025, நாள்.03.07.2025
3 மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அனைத்து துறை இயக்குநர்களுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் கூட்டக் குறிப்பு. நாள்: 27.10.2025 2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் "" (THIRAN Targeted Help for Improving Remediation & Academic இயக்கம் ஜூலை மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. Nurturing) பார்வை(2)ல் காணும் செயல்முறைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு THIRAN என்னும் முனைப்பு இயக்கம் தொடங்கிய முதல் 4 வாரத்திற்கு அடிப்படைக் கற்றல் விளைவுகள் கற்பிக்கப்பட்டு, அதனடிப்படையில் காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டது.
முடிவுகளின் அடிப்படையிலும். ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், அடிப்படைக் கற்றல் விளைவுகள் (Basic Learning Outcome) பகுதியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற இன்னமும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது.
இதனை சார்ந்து பின்வரும் வழிமுறைகளை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தி நடைமுறைப்படுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் அடிப்படைக் கற்றல் விளைவினை அடையும் பொருட்டு அடுத்த 6 வார காலத்திற்கு (அரையாண்டுத் தேர்வு வரை) THIRAN பயிற்சிப் புத்தகத்தின் முதல் (அடிப்படை சுற்றல் விளைவு BLO பகுதியைத் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். தினம் ஒரு பாடம் என DO நிமிடங்கள் (2 பாடவேளை) THIRAN பாடவேளையாகக் கற்பிக்கப்பட வேண்டும் தலைமை ஆசிரியர்கள் இதற்கான கால அட்டவணையை மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கைப் பொருத்துத் திட்டமிட்டுக் கொள்ளலாம். இந்த பாடவேளையில் அடிப்படைக் கற்றல் விளைவை (BLO) அடையாத மாணவர்களுக்கு THIRAN பயிற்சிப்புத்தகத்தின் முதல் பகுதி 15 அடிப்படை கற்றல் விளைவு அலருகள் கற்பிக்கப்படவேண்டும்.
அடிப்படைக் கற்றல் விளைவு அடைந்த மாணவர்கள் மற்றும் THIRAN அல்லாத மாணவர்களுக்கு இந்தப் பாடவேளையில், THIRAN பயிற்சிப்புத்தகத்தின் இன்றியமையாத சுற்றல் விளைவுகள் (CLO) இரண்டாம் பகுதி கற்பிக்கப்படவேண்டும்
THIRAN இயக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் THIRAN" மாதாந்திர மதிப்பீட்டில் பங்கு பெற வேண்டும். மாதாந்திர மதிப்பீட்டில் பகுதி 1 அடிப்படைக் கற்றல் விளைவு பகுதியில் இருந்தே பெரும்பான்மையான கேள்விகள் கேட்கப்படும்.
நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர தேர்வு 2512025 முதல் 27.11.2025 வழக்கமான நடைமுறையின்படி நடைபெறும்.
7. காலாண்டுத்தேர்வினைப் போன்று, அரையாண்டுத்தேர்விற்கும் THIRAN இயக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு. பெரும்பான்மையாக THIRAN கையேட்டின் பகுதி-1ல் இருந்து, அடிப்படைக் கற்றல் அடைவுகள் (BLO) சார்ந்த கேள்விகளைக் கொண்ட தனி வினாத்தாள்களைப் பெறுவார்கள்.
8THIRAN மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வினைப் போன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். இந்தப் பாடங்களுக்கான கேள்விகள் முந்தைய வகுப்புகளில் இருந்து மிகவும் எளிமையான. பொதுவான BLO கேள்விகளாக இருக்கும். THIRAN அல்லாத மாணவர்களுக்கு வழக்கமான நடைமுறையின்படி அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும். மீளாய்வு (Review)நடைமுறைகள்:
பள்ளி அளவில் வாரந்தோறும் தலைமையாசிரியர் தலைமையில் மீளாய்வுக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர் வாரம் ஒரு பள்ளியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மாதந்தோறும் SMC கூட்டம் நடைபெறும்பொழுது THIRAN இயக்கத்திலுள்ள மாணவர்களின் முன்னேற்றம் குறித்தும், THIRAN. மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும் 'Report Card" குறித்தும் மாணவர்களுக்கான உளவியல் சார்ந்த வழிகாட்டுதல்களைக் குறித்தும் விவாதிக்க வேண்டும்.
அனைத்துக் கண்காணிப்பு அலுவலர்களும் 'பள்ளிப் பார்வை' செயலி மூலம் THIRAN இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் மாணவர் முன்னேற்றத்தை Spot Assessment மூலம் கண்காணிக்க வேண்டும்.
THIRAN இயக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் கண்காணிப்பு அலுவலர்களின் EMIS login-do "Reports பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
திறன் இயக்கத்தில் மாணவர் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் பொருட்டு Dashboard" உருவாக்கப்பட்டு, அனைத்துக் கண்காணிப்பு அலுவலர்களின் (CEO, DEO BEO & BRTE) மற்றும் பள்ளித் தலைமையாசிரியரின் EMIS Login ல் வைக்கப்படும்.
மேற்கண்ட நடைமுறைகளை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி THIRAN இயக்கத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THIRAN - செயல்பாடுகள் பள்ளிகளில் தொடரும் - DSE & DEE Proceedings PDF
No comments:
Post a Comment