10.11.2025 இன்று தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் & ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 சார்பான கூட்டம் நடைபெறுதல் - செயல்முறைகள் - TNTeachersTrends

Latest

Sunday, November 9, 2025

10.11.2025 இன்று தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் & ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 சார்பான கூட்டம் நடைபெறுதல் - செயல்முறைகள்

தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 சார்பான கூட்டம் 10.11.2025 அன்று நடைபெறுதல் சார்பு - CEO செயல்முறைகள் Meeting for Head Teachers and Teacher Eligibility Test Paper 1 and 2 to be held on 10.112025 - CEO Processes

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

முன்னிலை திருமதி.ரா.சங்கீதா சின்ன ராணி எம்.எஸ்.சி.எம்.ஏ.பி.எட்,

ந.க.எண் 7002/அ6/2025 நாள் 08.112025

பொருள்

கூட்டம் பள்ளிக்கல்வி தூத்துக்குடி மாவட்டம் - அரசு / அரசு உதவிபெறும் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 சார்பான கூட்டம் 10.112025 அன்று நடைபெறுதல் சார்பு.

தூத்துக்குடி மாவட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 10.11.2025 (திங்கள் கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணிக்கு தூத்துக்குடி . சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மட்டும் உரிய நேரத்தில் கலந்து கொள்ளத் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அதே கூட்ட அரங்கில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 சார்பான கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

தூத்துக்குடி

பெறுநர்

1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக்கல்வி), தூத்துக்குடி / கோவில்பட்டி.

2. தலைமை ஆசிரியர்கள். அரசு / அரசு உதவிபெறும்/ உயர்நிலை / அரசு மேல்நிலைப் பள்ளிகள்.

3. தலைமை ஆசிரியர்.

சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தூத்துக்குடி கூட்ட அரங்கினை தயார் செய்திடும் பொருட்டு,

4. சம்பந்தப்பட்ட முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள்

No comments:

Post a Comment