மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை சிபிஎஸ்இ மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பம் பெறப்படுகிறது. இதில் பல்வேறு பாடங்களில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஆசிரியர் பதவிகளில் மட்டும் 13,025 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதில் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கும் காலிப்பணியிடங்கள் உள்ளன.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தகுதிகள்: முதுகலை பட்டதாரியாக இருத்தல் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரை
தமிழ் பாடத்தில் பிஎட் படித்து முதுகலை பட்டப்படிப்பு படித்து 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். M.Ed முடித்திருக்கலாம்.
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்போர்:
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பிஎட் படிப்பு அல்லது முதுகலை டிகிரியுடன் பிஎட் , எம்எட் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்போருக்கு கணினியை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரங்கள்
முதுகலை ஆசிரியர் பதவி (நிலை 8)- மாதம் ரூ 47,600 முதல் ரூ 1,51,100 வரையாகும்.
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு (நிலை 7)- மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை.
தேர்வு செய்யப்படும் முறை
2 கட்டத் தேர்வு நடத்தப்பட்டு நேர்காணல் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
முதல் நிலைத் தேர்வு
ஓஎம்ஆர் தாளில் 100 கேள்விகளுடன் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் மொழி திறன் பகுதி இடம் பெறும்.
இரண்டாம் கட்டத் தேர்வு
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழ் மொழி தேர்வு நடைபெறும். இதில் 60 கொள்குறி வகை கேள்விகள் (Multiple choicequestion), 10 விரிவான விடையளிக்கும் கேள்விகளும் இடம் பெறும். இதையடுத்து நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
மத்திய அரசு இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
https://www.cbse.gov.in/,
https://kvsangathan.nic.in/,
https://navodaya.gov.in/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்
தேர்வு கட்டணம் 1500 ரூபாய், விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ 500 செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, PWBD பிரிவினர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு ஆகும்.
KV / NV RECRUITMENT NOTIFICATION 2025 BOTH TEACHING AND NON TEACHING STAFF
KV / NV RECRUITMENT NOTIFICATION 2025 BOTH TEACHING AND NON TEACHING STAFF
👇👇👇
Download here
கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணி வாய்ப்பு - டிச., 4 வரை விண்ணப்பிக்கலாம். Teacher job vacancy at Kendriya Vidyalaya - Applications can be made till Dec. 4.
கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணி வாய்ப்பு
மத்திய கல்வி அமைச் சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்க ளுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது.
தன்னாட்சி அதிகாரத் துடன் செயல்படும் இப் பள்ளிகளில், மத்திய அரசு பணியாளர்களின் குழந் தைகள் அதிகம் சேர்க்கப் படுகின்றனர். பல்வேறு மாநிலங் களில், போதிய அளவு பள்ளிகள் இல்லாததால், இளம் வயதினர் பயங்கர வாதிகளின் பிடியில் செல் கின்றனர். அவ்வாறான 17 யூனியன் பிரதேசங்களில், புதிதாக, 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிதாக திறக்கப்பட உள்ள பள்ளிகளுக்கு, தகுதியான ஆசிரியர் களை நியமிக்க வேண்டி உள்ளது.
மேலும், ஏற்கனவே செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பா லான நிரந்தர ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாலும், ஓய்வு பெற உள்ளதாலும், புதிதாக ஆசிரியர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
எனவே, பல்வேறு நிலை ஆசிரியர்கள் மற் றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, இன்று முதல் டிச., 4 வரை, https://www.cbse.gov. in/, httips://kvsangathan.nic.in/, https://navodaya.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணியிட விபரங் கள் இன்று வெளியிடப் படும்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. தகுதியான ஆசிரியர்களை நியமிக்க இன்று முதல் டிசம்பர் வரை https://www.cbse.gov.in/, https://kvsangathan.nic.in/, https://navodaya.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
Teacher job opportunities in Kendriya Vidyalaya
Selection of candidates for teacher posts in Kendriya Vidyalaya and Navodaya schools under the Central Education Ministry is underway. Applications for various level teacher and non-teacher posts can be submitted through the websites https://www.cbse.gov.in/, https://kvsangathan.nic.in/, https://navodaya.gov.in from today until December.



No comments:
Post a Comment