மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் - DSE& DEE சுற்றறிக்கை - நவம்பர் மாதத்திற்கான தேர்வு 25.11.2025 முதல் 27.11.2026 வரை - TNTeachersTrends

Latest

Sunday, November 9, 2025

மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் - DSE& DEE சுற்றறிக்கை - நவம்பர் மாதத்திற்கான தேர்வு 25.11.2025 முதல் 27.11.2026 வரை

மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் - DSE& DEE சுற்றறிக்கை - நவம்பர் மாதத்திற்கான தேர்வு 25.11.2025 முதல் 27.11.2026 வரை

மாணவர்களுக்கு அடிப்படை கற்றல்

மாணவர்களின்வாசிப்பு திறனுக்காக, உருவாக்கப்பட்ட 'திறன்' இயக்க திட்டத்தில், காலாண்டு தேர்வில் தேர்ச்சி சதவிதம் போதவில்லை என்பதால், இதற்கான கால அவகாசத்தை, நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் (தொடக்க கல்வி) ஆகியோருக்கு,

பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும், மாணவர்களின் மொழிப்பாடத் திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு (THIRAN Tegatel Help For Improving Remediation & dendemic Nurturing) இயக்கம், ஜூலை மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 'திறன்' என்னும் முனைப்பு இயக்கம் துவங்கிய வாரத்திற்கு, அடிப்படை கற்றல் விளைவுகள் கற்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், அடிப்படை சுற்றல் விளைவுகள் (பேசிக் லேர்னிங் அவுட்கம்) பகுதியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற, இன்னும் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்பது, தெளிவாகிறது.

இதனால், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கீழ்கண்ட வழி முறைகளை பின்பற்ற கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும், அடிப்படை கற்றல் விளைவினை அடையும் பொருட்டு. அடுத்த 6 வார காலத்திற்கு அரையாண்டு தேர்வு வரை) திறன் பயிற்சி புத்தகத்தின் முதல் (அடிப்படை கற்றல் விளைவு பி.எல்.ஓ.) பகுதியை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும்.

தினம் ஒரு பாடம் என 20 நிமிடங்கள் 2 பாட வேளை), திறன் பாடவேளையாக கற்பிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள். இதற்கான கால அட்டவணையை மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை பொறுத்து திட்டமிட்டு கொள்ளலாம். இந்த பாட வேளையில் அடிப்படை சுற்றல் விளைவை (பி.எல்.ஓ.) அடையாத மாணவர்களுக்கு திறன் பயிற்சி புத்தகத்தின் முதல் பகுதி, 16 அடிப்படை கற்றல் விளைவு அலகுகள் கற்பிக்கப்பட வேண்டும்.


அடிப்படை கற்றல் விளைவு அடைந்த மாணவர்கள் மற்றும் திறன் அல்லாத மாணவர்களுக்கு, இந்த பாட வேளையில் திறன் பயிற்சி புத்தகத்தின் இரண்டாம் பகுதி இன்றியமையாத கற்றல் விளைவுகள் (சி. எல்.ஓ.) கற்பிக்கப்பட்ட வேண்டும். திறன் இயக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் திறன் மாதாந்திர மதிப்பீட்டில் பங்கு பெற வேண்டும்.

மாதாந்திர மதிப்பீட்டில் பகுதி 1 அடிப்படை கற்றல் விளைவு பகுதியில் இருந்தே, பெரும்பான்மையான கேள்விகள் கேட்கப்படும். நவம்பர் மாதத்திற்கான தேர்வு 25.11.2025 முதல் 27.11.2026 வரை வழக்கமான முறையில் நடக்கும் திறன் மாணவர்களுக்கு, தேர்வினை போன்று காலாண்டு அறவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். திறன் அல்லாத மாணவர்களுக்கு வழக்கமான நடைமுறைப்படி தேர்வுகள் நடத்தப்படும். இதனை வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment