The CDS (Combined Defence Services) exam is a national-level entrance test conducted by the Union Public Service Commission (UPSC) for admission to the Indian Military Academy, Indian Naval Academy, Air Force Academy, and Officers' Training Academy. It involves a written exam covering English, General Knowledge, and Mathematics, followed by a Services Selection Board (SSB) interview for those who clear the written test. The exam is held twice a year, typically in April and September, and is the gateway for becoming a commissioned officer in the Indian Armed Forces. Key details about the CDS exam
What it is: A competitive exam for officer recruitment into the Indian Army, Navy, and Air Force.
Conducting body: Union Public Service Commission (UPSC).
Frequency: Conducted twice a year.
Selection process: A two-stage process involving:
An objective-based written test.
A Services Selection Board (SSB) interview.
Document verification and medical examination also follow the interview stage.
Subjects covered in the written exam: English, General Knowledge, and Mathematics.
Result: Successful candidates are recruited into their chosen service for training
சி.டி.எஸ். எனும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி தேர்வு - எப்படி விண்ணப்பிப்பது? CDS (Combined Defence Services) Exam - How to apply?
இன்றைய வேலைவாய்ப்பு உலகமானது எண்ணற்ற வாய்ப்புகளுடன் உரிய திறன் பெற்றவர்களை தேடிக் கொண்டிருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு என தமிழக வட்டத்துக்குளே சுற்றும் மாணவர்கள் பலரும் பத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பிட்ட சில இடங்களுக்கு பல லட்சம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் மத்திய அரசின் வேலைவாய்ப்டை பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு போட்டித்தேர்வுதான், ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு (CDS), அதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
சி.டி.எஸ்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பணியாளர் தேர்வாணயம் சார்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. இந்திய ராணுவ அகாடமி (IMA), இந்திய விமானப்படை அகாடமி (AFA). இந்திய கடற்படை அகாடமி (INA) மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA) போன்ற பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இத்தேர்வு உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என இருமுறை நடத்தப்படுகிறது. இந்த தேசிய அளவிலான தேர்வு, ஆயுதப் படைகளில் அதிகாரி பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமாளப்படையில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவு வாயிலாக அமைகிறது.
தகுதி
இந்திய ராணுவ அகாடமிக்கு விண்ணப்பிக்க 19 முதல்24 வயதிற்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்திய கடற்படை அகாடமியில் சோ பொறியியல் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 19-24 வயதுக்குள்
அதேபோல் இந்திய விமானப்படை அகாடமிக்கு விண்ணப்பிக்க 20 முதல் 24 வயது இருக்க வேண்டும்.பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் (12-ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவில் படித்திருக்க் வேண்டும்) அல்லது பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேர அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 19 முதல் 25 வயது உள்ள ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். இந்த தேர்வை பட்டம் பெற்ற அல்லது அவர்களின் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு/செமஸ்டரில் உள்ள மாணவர் களும் பங்கேற்கலாம்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் முதலில் யு.பி.எஸ்.இ. நடத்தும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் தகுதி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு பட்டியலிடப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட நபர்கள், சேவைகள் தேர்வு வாரியத்தால் (SSB) நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இது உளவியல் சோதனைகள், தனிப்பட்ட பண்பு, குழு பணிகள், ஆளுமை போன்ற குணங் களை மதிப்பிடுகிறது. நேர்காணலில் தேர்ச்சி பெற்ற நபர் களுக்கு மருத்துவத் தேர்வு (MEDICAL "EST) நடத்தப்படுகிறது.அனைத்தையும் வெற்றிகாமாக முடித்த பிறகு, யு.பி.எஸ்.இ. எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.பி. நேர்காண லில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் விண்ணப்ப தாரரின் எழுத்து, உளவியல் மற்றும் உடல் திறன்களை மதிப்பிடு கின்றன. ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் அதிகாரி வேலைகள் கிடைக்கின்றன.
மதிப்பெண், தேர்வு மையம்
இந்த தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப் பெண் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான முயற்சிக்கும் 0.33 மதிப்பெண்கள் கழிக்கப்படும். ஒரு கேள்விக்கு இரண்டு பதில் கள் குறிக்கப்பட்டால், அது தவறான பதிப்பெண்ணாக கணக்கிடப்படும். இந்தியாவில் பல இடங்களில் இத்தேர்வுக் கான மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, வேலூர், கோவை, திருச்சி ஆகியநகரங் களிலும், புதுச்சேரியிலும் நடைபெறும்.
பாடத்திட்டம்
இந்திய ராணுவ அகாடமி, இந்திய கடற்படை அகாடமி மற்றும் விமானப்படை அகாடமியில் அதிகாரிகளாக சேர ஆங்கிலம், பொது அறிவு, கணிதம் ஆகியவற்றை பாடத் திட்டங்களாக கொண்ட தேர்வுகளை எழுத வேண்டும். அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேருவதற்கு ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பாடங்களில் நடைபெறும் தேர்வுகளை எழுத வேண்டும். இதற்கான தேர்வுக்கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
1. யு.பி.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் https://upsc.gov.in/examinations/Combined%20Defence%20Services%20Examination%20%28I%29%2C%202025 பார்வையிடவும்.
2. விண்ணப்பப் படிவத்தின் பகுதி I'-ல் உங்கள் விவரங்களை நிரப்பவும்.
3. தனிப்பட்ட தகவல்கள் தொடர்பு விவரங்கள், விண் ணப்பிக்க விரும்பும் அகாடமியை தேர்வு செய்யவும்.
4. அதைச் சமர்ப்பித்தவுடன் பதிவு ஐ.டி .(registarion) உருவாக்கப்படும்.
5. பதிவுச் சான்றுகளுடன் ஆன்லைன் பதிவின் பகுதி II'-ல் உள்நுழையவும்.
6. புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பங்களை தேவையான வடிவத்தில் பதிவேற்றவும்.
7. விண்ணப்பக் கட்டத்தைச் செலுத்தி தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
B. விவரங்களை இருமுறை சரிபார்த்து, பின்னர் "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்யவும்.
9. கிடைத்த விண்ணப்ப எண்ணின் பதிவை பத்திரமாக வைத்திருக்கவும்.
No comments:
Post a Comment