லீவு எடுக்க முன் அனுமதி அவசியம் - சுற்றறிக்கையால் ஆசிரியர்கள் அதிருப்தி Teachers unhappy with circular requiring prior permission to take leave
கோவை. நவ. 10-
கோவை மாநகராட்சி யின் கீழ் இயங்கும் பள் ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், விடுப்பு எடுப்பதற்கு நிர்வா கத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, சுற்றறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களில் பலருக்கும், வாக்குச் சாவடி நிலை அலுவ லர் (பி.எல்.ஓ.,) பணி கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது.
இதனால், கற்பித்தல் பணியுடன் சேர்த்து கூடுதல் பணிச் சுமை ஏற்படுவதாக, ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், மாந கராட்சி கல்விப் பிரிவு சார்பில், அனைத்து பள் ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'பி.எல். பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அப்பணியில் இல்லாத இதர ஆசிரியர்கள் என அனைவரும், எவ்வி தமான விடுப்பு எடுப் பதாக இருந்தாலும், நிர்வாகத்தின் முன் அனுமதியை கட் டாயம் பெற வேண் டும்' என குறிப்பிடப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பி.எல்.ஓ., பணியால் ஏற்படும் சுமையையும் மீறி, மாணவர்களின் கற்பித்தல் பணியில் எவ்வித இடையூனும் ஏற்படாதவாறு செயல் பட்டு வருகிறோம்.
இந்நிலையில், அவ சர தேவைக்கு விடுப்பு எடுப்பதற்குக்கூட, நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண் டும் என்பது, பணிச்சு மையை மேலும் அதிகரிப்பதாகவும், மன உளைச்சலைத் தருவதாகவும் உள்ளது' என்றனர்.

No comments:
Post a Comment