Safety Precautions for a Fun and Safe Cracking Diwali - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - TNTeachersTrends

Latest

Sunday, October 26, 2025

Safety Precautions for a Fun and Safe Cracking Diwali - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

What precautions should be taken during Diwali?

What are the safety measures to avoid fire accidents?

What are the safety advisory for Diwali?

What are the 10 fire safety tips?

தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக. Regarding taking safety precautions to prevent fire accidents during the Diwali festival.



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.

முன்னிலை: முனைவர். ச.கண்ணப்பன்

ந .க. எண். 066717/எம்2/இ2/2025 நாள்: 13.10.2025

பொருள் :

பள்ளிக் கல்வி தீபாவளி 2025 மகிழ்ச்சியாக கொண்டாடுதல் - தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக.

தீபாவளி பண்டிகை 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் சில இடங்களில் கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்பட்டு குடிசைப் பகுதிகளில் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்படுகிறது. மேலும், சிறார்களுக்கு தீக்காயங்களும் சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும் தடுப்பதும் நமது முக்கிய கடமையாகும்.

பட்டாசு தீபாவளி நன்னாளில் சிறியவர்களும், பெரியவர்களும் பயன்படுத்தும் வேளையில் முறையாக, கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். கவனக்குறைவு காரணமாக தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், விபத்துக்கள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிருங்கள். டெரிகாட்டன் / டெரிலின் ஆகிய எளிதில் தீ பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது. பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள். பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம். மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள்.

மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்க செய்யாதீர்கள்.

• ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.

பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்காதீர்கள்.

பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்காதீர்கள்.

• குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.'

நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்காத்தீர்கள்.

விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

• பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பட்டாசுகளை வெடிக்காவோ கொளுத்தவோ அருகாமையில் செய்யாதீர்கள்.

இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பட்டாசுகளை வெடிக்காத்தீர்கள்.

அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையும் பாதிக்கும். காதுகள் செவிடாகக் கூடும். ஒருநாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.

• குழந்தைகள் மற்றும் வயதானோர் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

சென்ற ஆண்டைப் போன்றே இவ்வாண்டும் கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தி மகிழ்ச்சி நிறைந்த விபத்தற்ற தீபாவளியாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

(அ), தலைமையாசிரியர்கள் பள்ளியின் காலை இறைவணக்கத்திற்கு பிறகோ அல்லது அணி திரளும்போதோ தோராயமாக 5 நிமிடங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரைவுயாற்ற வேண்டும்.

(ஆ) மாணவர்களிடையே தீபாவளி பண்டிகையினை விபத்தில்லா வகையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து அவர்களது அறிவுக்கூர்மையை சோதித்து பார்த்தல் வேண்டும்.

(இ) ஒரு குறிப்பிட்ட இடைவெளி தருணத்தில் 5 -லிருந்து 10 நிமிடம் தீ பாதுகாப்பு செய்திகள் குறித்து சிலேடை நிகழ்ச்சி நடத்துதல் வேண்டும்.

(ஈ) தீ பாதுகாப்பு குறித்து வரைபட போட்டி நடத்தி சிறந்தாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரைபடத்திற்கு பரிசளித்தல் வேண்டும்.

(உ)வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

(எ) விவரம் அறியாத இளஞ்சிறார்களை வெடிகளைக் கொளுத்த அனுமதிக்காமல் இருத்தல் வேண்டும்.

தீபாவளி சமயத்தில், மேற்படி நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தீ பாதுகாப்பு குறித்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தான பல நல்ல கருத்தக்களை மனதில் நன்கு பதிய வைத்து 20.10.2025 அன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளியின் போது மாணவ/ மாணவிகள் பாதுகாப்பு வழிமுறைகள்

அவர்களே செயல்படுத்திட ஏதுவாக உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கலாகிறது.

மாணவ மாணவியர் இவ்வாண்டு விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெறுநர்,

பள்ளிக் கல்வி இயக்குநர்

1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

2, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்

நகல்: அரசு முதன்மைச் செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.

பங்கேற்று நடித்தல் Roleplay போட்டி தொடர்பான விவரங்கள்

அட்டவணை 1பங்கேற்று நடித்தல் போட்டி நடத்தப்படவுள்ள மாவட்டங்கள்



அட்டவணை-2 பங்கேற்று நடித்தல் போட்டிக்கான பதினொன்று தலைப்புகள்

1 ஆரோக்கியமான வளர்ச்சி

2. மனவெழுச்சி நலவாழ்வும் மனநலமும்

3. ஒருவருக்கொருவருடனான உறவு

4. விழுமியங்களும் பொறுப்புள்ள குடியுரிமையும்

5. பாலின சமத்துவம்

6. ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம்

7. போதைப் பொருள்களின் பயன்பாட்டினைத் தடுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல்

8. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல்

9. இனப்பெருக்க சுகாதார மற்றும் எச்ஐவி தடுப்பு முறைகள்

10. வன்முறை மற்றும் காயங்களிலிருந்து கவனம் மற்றும் பாதுகாப்பு

11. இணையம், சாதனங்கள் மற்றும் ஊடகத்தின் பாதுகாப்பான பயன்பாட்டை மேம்படுத்துதல்

பங்கேற்று நடித்தல் (Roleplay)க்கான நேரம் -5-6 நிமிடங்கள் மட்டும்

அட்டவணை 3 போட்டிகளுக்கான கால அட்டவணை





பங்கேற்று நடித்தல் போட்டிக்கான தலைப்புகள் மற்றும் சூழ்நிலைகள்

தலைப்பு-1 ஆரோக்கியமானவளர்ச்சி

சூழ்நிலை-1

பூஜா, சுஜாதா, அபிதா மற்றும் ராதாஆகியோர் நெருக்கமான தோழிகள். அனைவருக்கும் 13 வயது ஆகிறது. அவர்கள் ஒன்றாக நேரத்தைச் செலவிடுவார்கள். அவர்கள் புதிய திரைப்படம், புதிய ஆடை, வீட்டுப்பாடம், வகுப்பில் உள்ள மாணவர்கள் என எல்லாவற்றையும் குறித்துப் பேசக் கூடியவர்கள். நேற்று, ராதாவுக்கு உடலில் ஏதோசங்கடமாகத் தோன்றியது. அவளுக்கு மாதவிலக்குக்கு ஏற்பட்டுள்ளதால் அவளின் சீருடையில் கறை படிந்து விடுமோ என்று கவலைப்பட்டாள். சென்ற மாதம், சுஜாதா பருவமடைந்ததைத் தொடர்ந்து அவள் வீட்டில் அதனைப் பெரிய விழாவாகக் கொண்டாடினர். மூன்று மாதங்களுக்கு முன்பு அபிதா பள்ளியில் பருவமடைந்ததால் தன் ஒன்று விட்ட அக்காவிடம் சானிடரி நாப்கின் வாங்கிப் பயன்படுத்தியதைப் பூஜா நினைவு கூர்ந்தாள். பூஜாவைத் தவிர மற்ற தோழிகள் அனைவரும் பருவமடைந்திருந்தனர். இதனால் பூஜாவிடம் ஏதேனும் குறை உள்ளதா?

சூழ்நிலை-2

பள்ளியின் ஆண்டு விழாவிற்கு 8ஆம் வகுப்பில் படிக்கும் ஷாலினியும் அவள் தோழிகளும் தயாராகி வந்தனர். அவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருந்தனர். ஷாலினி பரதநாட்டியத்தில் பங்கேற்க இருந்தாள். அவளது வகுப்புத் தோழிகள் அனிதா மற்றும் உமா ஆகியோர் நாடகத்தில் பங்கேற்றிருந்தனர். ஒரு நாள் அனிதா ஷாலினியை கேலி செய்து, நீ மிகவும் கருப்பாக இருக்கிறாய். உன்னை மேடையில் பார்ப்பதற்குக் கூடுதல் மின் விளக்கு தேவைப்படும் என்றாள். ஷாலினி அவளுக்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. உமா, ஷாலினிக் குறித்து வருத்தப்பட்டு நீ நன்றாக நடனமாடுகிறாய். நன்றாக சிவப்பாகத் தெரிய நீ ஏன் நல்ல முகப் பூச்சைப் பயன்படுத்தக்கூடாது? நீ கருப்பாக இல்லாமல் சிவப்பாக இருந்தால் மேடையில் எவ்வளவு அழகாக இருப்பாய் என்று உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? என்றாள். ஷாலினி சிரித்துக் கொண்டே, நன்றி, உமா உன் அக்கறையை நான் பாராட்டுகிறேன். ஆனால் தற்போது எனக்குள்ள நிறத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நானும் எனது ஆசிரியரும் எனது நடனப் பயிற்சியில் கடுமையாக பயிற்சி செய்து வருகிறோம். எங்கள் முயற்சிகளும் உன் வாழ்த்துகளும் ஒரு நல்ல அரங்கேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம் என்றுகூறினாள்.

தலைப்பு-2 மனவெழுச்சி நலவாழ்வும் மனநலமும்

சூழ்நிலை -1

அனிமா நேற்று தான் 8 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி அடைந்தாள். திடீரென்று அவளது பெற்றோர். நாளை முதல் அவள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம்: அதற்கு பதிலாக வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவளிடம் கூறினார்கள். அனிமா மிகவும் வருத்தப்பட்டாள். ஆனால் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எப்போதும் அவள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு குறித்து வருத்தப்பட்டு, அவளுடைய ஆசைகளை அவளின் பெற்றோர் புரிந்து கொள்ளாததற்காக அவர்களைக் குற்றம் சாட்டினாள். அவள் இனி ஒரு போதும் தனது விருப்பங்களை அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

சூழ்நிலை-2

ஜேம்ஸ் இசையை அதிகம் விரும்புகிறான். அவன் பாடவும் ஆசைப்படுகிறான். நேற்று அவனின் வகுப்பாசிரியர், வகுப்புகளுக்கு இடையே நடைபெறவுள்ள பாட்டுப் போட்டியை அறிவித்தவுடன் உற்சாகத்தால் அவன் கண்கள் பிரகாசமானது. ஆனால் இன்று அவனின் வெளிப்பாடுகள் மாறியது. போட்டி தொடங்குவதற்கு முன் அவனின் கைகள் வியர்க்கத் தொடங்கின. இதயம் வேகமாக துடித்தது. அவனுக்குக் குழப்பமாக இருந்தது. அவனுக்குச் சௌகரியமாக இல்லாததால் அடிக்கடி கழிப்பறைக்குச் சென்று வந்தான். அவன் பாடுவதற்காக காத்திருந்தபோது, தான் தயார்செய்த பாடலின் வரிகள் தனக்கு மறந்துவிடுமோ என்று நினைக்க ஆரம்பித்தான். போட்டியாளர் பட்டியலில் இருந்து தன்பெயரைத் திரும்பப் பெற முடிவு செய்தான். ஆகவே பாட்டுப் போட்டியில் அவன் பாடவில்லை.

தலைப்பு-3 ஒருவருக்கொருவருடனான உறவு

சூழ்நிலை 1

இக்பால் பள்ளி விடுதியில் சேர்ந்தபோது, அவனைவிட மூத்த மாணவர்கள் குழு அவனை கொடுமைப்படுத்தத் தொடங்கியது. இது ஒரு வழக்கமான பிரச்சனையாக மாறியது, மேலும் அவர்கள் கூறும் வேலையை இக்பால் செய்யாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தத் தொடங்கினர். சில நேரங்களில் அவர்களின் துணிகளைக் துவைக்கவும், இக்பாலிடம் உள்ள சிற்றுண்டி மற்றும் பணம் ஆகியவற்றை கொடுக்கச் சொல்லியும் துன்புறுத்துவர். இக்பால் ஹாஸ்டலில் இருக்க மிகவும் பயப்படுவதாகவும், பேசாமல் இருப்பதாகவும், தன்னம்பிக்கையை இழந்து விடுவதாகவும் உணர்கிறான்.

சூழ்நிலை-2

சிம்ரனும் விஷாலும் ஒரே பகுதியில் வசித்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளனர். அவர்கள் ஒரே பள்ளியில் 11 ஆம்வகுப்பில் படிக்கின்றனர். சமீபத்தில் விஷால் சிம்ரன் மீதான தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பினான். விஷால் மீதான தன் உணர்வுகள் குறித்து சிம்ரன் குழப்பமடைகிறாள். அவள் அதைக் குறித்து முடிவெடுக்க அதிக காலம் தேவை என்று நினைக்கிறாள், இருப்பினும் உடனே பதிலளிக்கவில்லை என்றால், விஷாலின் நட்பை இழக்க நேரிடும் என்று சிம்ரன் கவலைப்படுகிறாள்.

தலைப்பு-4 விழுமியங்களும் பொறுப்புள்ள குடியுரிமையும்

சூழ்நிலை 1

மீனா, ஜோசப், சரிதா மற்றும் இஸ்மாயில் என்பவர்கள் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள். அவர்கள் இப்போது 10ஆம்வகுப்பில் படிக்கிறார்கள். அவர்கள் மேல்நிலைக் கல்வியில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்வது என்று யோசிக்கிறார்கள். பள்ளியில் அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு பாடங்கள் உள்ளன. ஜோசப் மற்றும் இஸ்மாயில் ஆகியோர் அறிவியலைத் தெரிவு செய்யவும், சரிதா வணிகப் பிரிவை எடுக்கவும் விரும்புகிறார்கள். மீனா ஓர் ஓவியராக விரும்புகிறார். வெவ்வேறு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதால் பல்வேறு வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் இதனால் நண்பர்களைப் பிரியவேண்டும் என்று மீனாவிற்குத் தெரியும்.

சூழ்நிலை -2

சுரேசும், ரபேகாவும் கிராமத்தில் நடைபெறும் திருவிழாவிற்குச் செல்கிறார்கள். ரபேகா தனக்குப் பிடித்த ஒரு நடிகரின் சுவரொட்டியை வாங்க விரும்புகிறாள். ஆனால் அதை வாங்க அவளிடம் பணம் இல்லை. சுரேஷ் தனது பெற்றோரின் கைப்பேசியைப் பயன்படுத்தி அந்தப் புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல் படமெடுக்கிறாள். ரபேகா சுரேசுக்கு நன்றி தெரிவிக்கிறாள். அவர்கள் உயர்வகுப்பில் படிக்கும் மற்றும் அவர்கள் வசீகரமானவனாகக் கருதும் மோகன் என்ற ஒரு மாணவனைப் பார்க்கின்றனர். உடனே சுரேஷ் தனது கைப்பேசியைப் பயன்படுத்தி மோகனை ரகசியமாக புகைப்படம் எடுக்கிறாள். ஆனால் ரபேகா இதனை மிகச் சங்கடமாக உணர்கிறாள்.

தலைப்பு-5 பாலின சமத்துவம்

சூழ்நிலை-1

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் முரளிக்கு கலை மற்றும் கோலம் ஆகியவற்றில் ஆர்வம் உண்டு. அவரது வீட்டிற்கு அருகில் ஒரு கோலப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவன் அப்போட்டியில் பங்கேற்க விரும்புகிறான். இதை அறிந்ததும் அவரது வயதில் மூத்த ஒன்று விட்ட சகோதரர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

சூழ்நிலை-2

லலிதா மற்றும் அருண் இருவரும் ஒன்பதாம் வகுப்பில்ப டிக்கின்றனர். ஒரு நாள், இரண்டு வயதில் மூத்த மாணவர்கள் லலிதாவின் உடல் தோற்றம் குறித்து கேலி செய்து அனுப்பி அவளைத் தொட முயன்றனர். அத்தகைய நடத்தையை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவள் கூறினாள். அவர்கள் சிரித்துக் பள்ளி நடைபாதையில் அவளைப் பார்க்கும் போதெல்லாம் கொண்டே கேலி செய்தனர். மற்றொரு நாள், அவர்கள் அருணை தள்ளி விட்டு, அவனைப் பார்த்து சிரித்தனர், அவன் மிகவும் குள்ளமானவன் என்றும், அவன் இன்னும் ஒரு ஆணாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினர். அருண் அவர்களிடம் இது போன்ற நடத்தையை நிறுத்துமாறு சொன்னான். சில வகுப்புத் தோழர்கள் (மாணவிகள் மற்றும் மாணவர்கள்) இந்த இரு சம்பவங்களையும் பார்த்தார்கள், ஆனால் அவர்கள் லலிதாவிற்காகவும், அருணுக்காகவும் வருத்தப்பட்டாலும் வேறு எதையும் செய்யவில்லை.

தலைப்பு-6 ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம்

சூழ்நிலை 1

சூழ்நிலை 2 நமது உடலின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய மற்றும் நமது உடலின் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான பல்வேறு உணவுத் தொகுதிகளிலிருந்து தேவையான சரியான அளவு உணவு சார்ந்த சரிவிகித உணவு பற்றிய ஒரு பங்கேற்று நடித்தல்

ஹேமா என்பவர் முறையே 8.4.2 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய். ஹேமாவின் கணவர் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்லும் தினக்கூலித் தொழிலாளி, ஹேமாவிற்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் வீட்டு வேலைகளான சமைத்தல், சுத்தம் செய்தல் துணிகளைத் துவைத்தல், பாத்திரங்களைத் துலக்குதல் போன்ற பணிகளைச் செய்ய சிரமப்படுவார். வழக்கமாக, ஹேமாவினால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சமைக்க முடியும் அவர்கள் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் சமைத்த உணவு வெளியிலேயே இருக்கும். அவர் வீட்டின் உள்ளும் புறமும் உள்ள ஏராளமான ஈக்கள் அடிக்கடி உணவின் மீதும் அமரும். பல வேலைகளை செய்து முடிக்கும் அவசரத்தில் அடிக்கடி உணவுப் பொருள்களை மூட மறந்து விடுவார். மேலும் கைகளைக் கழுவாமலே உண்ணும் பழக்கமுடைய குழந்தைகளுக்கு எட்டாதவாறு உணவினைவைத்துவிடுவார். ஹேமாவும் குடும்பத்தினரும் திறந்த வெளியில் தான் மலம் கழிப்பர். அதனால் குழந்தைகள் ஒவ்வொரு முறை அங்கு சென்று வந்தபின்னரும் அவர்களைச் சுத்தம் செய்வது ஹேமாவிற்குக் கடினமாக உள்ளது. அதே வேளையில் குழந்தைகள் வெறும் கால்களுடன் விளையாடுவர். சில நேரங்களில் குழந்தைகளைச் சுத்தம் செய்த பின்பு தன் கைகளைச் சுத்தம் செய்ய மறந்து விடுவார். தன் கைகளால் நாள்தோறும் குளிக்க வைக்க சிரமப்படுவார். குழந்தைகளின் நகங்கள் வெட்டப்படாமலும் அழுக்காகவும் இருக்கும். குழாயில் நீர் வராத வேளைகளில் அருகில் உள்ள குட்டையிலிருந்து நீர் எடுத்து உபயோகிப்பார். ஹேமா மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அடிக்கடி வயிற்றுவலியும் வயிற்றுப்போக்கும்ஏற்படுகின்றன. சமீபமாக அவரின் சிறிய குழந்தைக்குக் குமட்டல் உணர்வு ஏற்படுவதாகக் கூறினாள். மேலும் அக்குழந்தையின் மலத்தில் இரத்தம் வருவதையும் கவனித்தார்.ஹேமா, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாக உணர்ந்தார்.

தலைப்பு-7 போதைப் பொருள்களின் பயன்பாட்டினைத் தடுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல்

சூழ்நிலை.1

ராகுல் ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வை சிறப்பாக எழுதியிருந்தான். அதே போல 10-ஆம் வகுப்பிலும் சிறப்பாக தேர்வு எழுத முடியுமா என கவலை ஏற்பட்டது. அவனது பெற்றோர் எப்பொழுதும் வகுப்பில் முதல் மாணவனாக இருக்கவேண்டுமென எதிர்ப்பார்ப்பதாக அவனிடம் கூறுவர். ராகுல் பெற்றோரை ஏமாற்றத்திற்குள்ளாக்கக்கூடாது என்பதற்காக தன் பிரச்சனைகளை அவர்களிடம் கூறமாட்டான். தன் நண்பர்களில் சிலர் இதே போன்ற சூழ்நிலைகளைக் கடந்து செல்கிறார்கள் என்பதை அவன்உணர்ந்ததனால், அவர்களோடு தன்னுடைய பிரச்சனையைக் குறித்து உரையாடினான் தங்களுடன் சேர்ந்து புகைப் பிடித்தால் மனஅழுத்தம் சிறிது குறைந்து நிம்மதியாக இருக்கலாம் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினர். அவன் ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு சிகரெட்டை புகைக்கத் தொடங்கினான். அவன் தன்நிலை உணரும்முன் ஒரு மாதத்திற்குள்ளாக ஒரு நாளைக்கு ஆறு முதல் பத்துவரை சிகரெட்டுகள் பிடித்துக் கொண்டிருந்தான். அந்த புகைப்பிடித்தல் பழக்கம் அவனுக்கு தொடர் பழக்கமாக மாறிவிட்டது.

சூழ்நிலை 2

விஜய் புகைபிடிப்பவர். அவர் தன் நண்பர்களின் ஆலோசனைப்படி மனஅழுத்தத்தில் இருந்து மீள ஓர் உபாயமாகப் புகைபிடிக்கும் பழக்கத்தைப் பெற்றார். தன் நண்பர்களும் புகைபிடிக்க வேண்டும் என்பதில் விஜய் முனைப்பாக இருந்தார். அவர் முஜிப் மற்றும் மஞ்சுவிடம், ஹலோ என்னிடம் சிகரெட் உள்ளது. வாருங்கள் புகைக்கலாம் என்று கூறினார். முஜீப், புகைத்தலுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லாதவர். ஆனால் புகைப்பதை அனுபவித்து அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார். ஆகவே, அவர் நிச்சயமாக நன்றி. அதுசிறந்தது என்றுகூறினார். மேலும் எனக்கும் முயற்சித்துப் பார்க்க விருப்பம் தான். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரியவர்கள் புகைப்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம். நானும் வசீகரிக்கப்பட்டேன் என்றுகூறினார். அவர் தான் புகைக்கவில்லை என்றால் பிறர் தன்னைப் பரிகசிப்பர் என்று எண்ணினார்.

ஆகவே அவர் புகைக்கத் துவங்கினார். மற்றவர்களுக்கும் வழங்கினார். மஞ்சுவிற்கு புகைத்தல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியும். ஆனால் பிறர் தன்னை அக்குழுவைச் சேர்ந்தவர் இல்லை என்று எண்ணுவதை மஞ்சு விரும்பவில்லை. ஆகவே தன் நேர்மறை எண்ணத்தை விட்டுக் கொடுக்கிறாள். ஆம், நான் புகைக்க விரும்புகிறேன். இல்லையெனில் எனக்கு இக்குழுவில் இருக்கும் அளவிற்கு துணிவு இல்லை என்று நீங்கள் நினைக்கலாம் என்றுகூறினாள். பின்னர் ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்கத் துவங்கினாள். ராஜீ. புகைபிடித்தல் தவறென்று நம்பிக்கை ஏற்படுத்தும் திறனோடு புகைத்தலுக்கு எதிர்கருத்துடையவர். அவர்.

வாய்ப்பேஇல்லை நான் பெரியவன் மற்றும் தைரியமானவன் என்பதை நிறுவுவதற்கு புகைபிடிக்கத் தேவையில்லை. புகைபிடித்தல் எனக்கும் பிறருக்கும் உடல் நலக்கேடு விளைவிக்கும் என்று எனக்குத் தெரியும் என் உடல்நலக்கேட்டின் மூலம் என் முதிர்ச்சியை நிரூபிக்க விரும்பவில்லை. அசோக். ஒரு சிகரெட் புகைப்பதால் ஒருவருக்கு கேடு விளைந்துவிடாது என்று எண்ணுகிறார். அதே வேளையில் அவர். புகைபிடித்தலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவிரும்பவில்லை. இச்செயல் தன்னை புகைக்கும் பழக்கமுடையவராக மாற்றிவிடுமோ என்று அஞ்சினார் ஆகவே விஜய் அளித்த சிகரெட்டை உறுதியுடன் மறுத்தார் தலைப்பு 8 ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல்

சூழ்நிலை 1

ஜாகீர், பர்வின் இருவரும் டன்பிறப்புகள் இருவரும் வீட்டுப்பாடம் எழுதியபிறகு அவர்களது அம்மா ஒரு மணிநேரம் ஓய்வெடுக்கச் சொல்லுவார், அந்நேரத்தில் பர்வின் மிதிவண்டியில் வலம் வருவார் ஜாகிர் வீட்டில் இருந்து கொண்டு வீடியோ கேம் விளையாடுவான்

சூழ்நிலை 2

அஜய் என்ற 14 வயது சிறுவன் பெட்டியில் அடைக்கப்பட்ட பொரித்த சிற்றுண்டிகள் குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளை விரும்பி உண்ணுவான் பின்னிரவில் பெரும்பாலான நேரங்களில் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் கணினியில் இணையத்தில் விளையாட்டு விளையாடுவதால் படிப்பில் கவனக் குறைவுடன் காணப்பட்டான் இப்பழக்கத்தால் அவனுடைய தூக்கம், படிப்பு மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தேர்வு நேரம் என்பதால் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுவிடுவோம் என மிகவும் கவலைப்பட்டான். இதனால் அவன் பள்ளியில் விளையாடுவதையும் மற்றும் வெளியில் தன் நண்பர்களைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டான். இந்நிலையில் அவன் மீண்டும் படிக்க முயற்சி செய்தபோது, அவன் மனம் இணைய விளையாட்டுகளிலேயே நாட்டமாக இருந்தது. இந்த மன அழுத்தத்தை எதிர்கொள்ள சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறான்.

தலைப்பு 9 இனப்பெருக்க சுகாதார மற்றும் எச்ஐவி தடுப்பு முறைகள்

சூழ்நிலை.1

25 வயதான ரீட்டா திருமணம் செய்ய விரும்புகிறாள். ரீட்டாவும் அவளது பெற்றோரும் ரோஹித் என்பவரை அவளது வருங்கால கணவன் என தீர்மானிக்கின்றனர். ரீட்டாவின் பெற்றோர் ரோஹித்தின் பின்புலம் பற்றித்தெரிந்து கொள்ள அவரது அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அண்டை வீட்டார். குடும்ப உறவினர்கள் போன்றவர்களிடம் கேட்டறிந்து, அத்தகவல்களால் மனதிருப்தி கொள்கின்றனர். இக்கலந்துரையாடலின் போது பள்ளியில் கேட்ட எச்ஐவி பற்றிய தகவல் பீட்டாவின் நினைவில் வந்தது. ரோஹித்திடம் இந்த ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்ய விரும்பி, தன் பெற்றோரிடம் ரோஹித்தின் எச்ஐவி பற்றிய அறிக்கை வாங்க கூறினாள். இந்த அசாதரணமான வேண்டுகோளை கேட்டு பெற்றோர் ஆச்சரியப்படுகின்றனர்.

சூழ்நிலை 2

17 வயது மாளவிகா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள். திருமணம் செய்த உடனேயே கர்ப்பமாக வேண்டும் என அவள் தோழி வேடிக்கையாகக் கூறுகிறாள். இந்தத் தகவலால் அவள் வருத்தம் அடைகிறாள். இப்போது குழந்தைப் பெற்று கொள்ளத் தயாராக இருப்பதாக அவள் உறுதியாகக் கருதவில்லை.

தலைப்பு-10 வன்முறை மற்றும் காயங்களிலிருந்து கவனம் மற்றும் பாதுகாப்பு

சூழ்நிலை 1

இராமு ஏழாம் வகுப்பு மாணவன், இராமுவின் மாமா அவனுடைய வீட்டுப் பாடங்களை எழுத அவனுக்கு ஒவ்வொரு நாளும் உதவி புரிகிறார். மேலும், அவனுக்கு இனிப்பு மற்றும் சாக்லேட்டுகளைக் கொடுக்கிறார். இராமுவின் மாமா அவனுக்கு வீட்டுப் பாடங்களில் உதவி புரியும் நேரத்தில் அவனைத் தொடக் கூடாத இடங்களில் தொட ஆரம்பித்தார். அவரின் இச்செயல் அவர்கள் இருவருக்குள்ளான இரகசியம். ஆகவே இதைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கூறினார். அப்படி யாரிடமாவது கூறினால். இராமுவிற்கு வீட்டுப் பாடங்களைச் செய்வதற்குத் தான் உதவ மாட்டேன் என்றும் அதனால் அவன் பள்ளிப் பாடங்களில் தோல்வியைச் சந்திப்பான் என்றும் கூறினார்.

சூழ்நிலை-2

ரமேஷ் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர். ஆதலால் அவரது வகுப்பு தோழர்கள் அவரைக் கிண்டல் கேலி செய்து அடித்துத் துன்புறுத்துகின்றனர். இதனால் அவன் பள்ளிக்கு வர பயப்படுகிறான். அவன் யாரிடம் உதவியைக் கேட்கலாம்?

தலைப்பு-11 இணையம், சாதனங்கள் மற்றும் ஊடகத்தின் பாதுகாப்பான பயன்பாட்டை மேம்படுத்துதல்

சூழ்நிலை 1

பல மாதங்களாக லலித், ப்ரியாவுடன் கைபேசியில் அளவளாவிக் கொண்டிருந்தார். இருவருக்கும் ஒரே வயது எனவும் அருகருகே வசிக்கின்றோம் என்றும் லலித் கூறுகின்றார். ப்ரியாவை சந்தித்து பொருள்கள் வாங்க கடைக்கு அழைத்து செல்ல லலித் விரும்புகிறான்.

சூழ்நிலை-2

சமூக ஊடகத்திலிருந்துதான் இருக்கும் இடத்தைப் பகிர்வதை உஷா விரும்புகிறாள். உணவகம் செல்லல், பயணம் மேற்கொள்ளல். நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளில்தான் இருக்கும் இடத்தைப் பகிர்ந்து கொள்வதை அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒரு நாள் தன்னையரோ பின் தொடர்வதைக் கவனித்தாள். அவள், பயந்து, பாதுகாப்பிற்காக ஒரு கடைக்குள் நுழைந்தாள். சில நாட்களுக்குப் பிறகும் இது மீண்டும் நடைபெற்றது.

No comments:

Post a Comment