Conducting a quiz on environment and climate change - regarding - Proceedings of the Joint Director of School Education - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்து வினாடி வினா - நடத்துதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
CLICK HERE TO DOWNLOAD quiz on environment and climate change - PDF
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(நாட்டு நலப்பணி) செயல்முறைகள், சென்னை-06
பொருள்:
பார்வை: 1. ந.க.எண்:032844/எம்1/இ1/2024 நாள்:2510.2025 -
துறை- பள்ளிக்கல்வி -சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் காலநிலை கல்வியறிவு-சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்து வினாடி வினா- நடத்துதல்- தொடர்பாக
அரசாணை (2D) எண்.111, Environment Climate Change and Forest(EC.1) தேதி: 10.06.2025 2. இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, 519.5.67 GOOT:F.No.DOECC-01/142/2025-01-PA4TNCCM/2025-6, Dt:16.10.2025
*****
மாண்புமிகு நிதித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், "தமிழ்நாடு அரசு காலநிலைக் கல்வியறிவினை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, பள்ளிகளில் சூழல் மன்றங்களை விரிவுபடுத்துதல், பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்கள் மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் போன்றவை நடத்தப்படும்." என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
அதன்படி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலநிலைக் கல்வி குறித்த விழிப்புணர்வினை 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, காலநிலை கல்வியறிவு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், வினாடி வினா போட்டியினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தவும், காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 'சூழல் அறிவோம்' என்னும் தலைப்பின் கீழ், மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்துவதற்கு தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் முன்மொழிந்துள்ளது. மாநில அளவில் நடைபெறவுள்ள இந்த வினாடி வினாப் போட்டியில், பங்கேற்க விரும்பும் பள்ளிகள், இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள காலகெடுவிற்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவுசெய்யப்பட்ட பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் போட்டியில் கலந்துகொள்வதற்கான மின்இணைப்பு (link) அனுப்பப்படும். இந்த மின்இணைப்பின் (link) மூலம், போட்டி நடைபெறும் நாளன்று கலந்து கொள்ள வேண்டும். இந்த போட்டியின் முதல் மூன்று சுற்றுகள் இணைய வழியாக (Online) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வினாடி வினாபோட்டியின் முதற்கட்ட சுற்று 06.11.2025 மற்றும் 07.11.2025 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.00 மணிவரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் முதல் பத்து அணிகள் இரண்டாவது சுற்றில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சுற்றுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.
இரண்டாவது சுற்றின் முடிவில், மாவட்டத்திற்கு ஒரு அணி தேர்ந்தெடுக்கப்பட்டு. மண்டல அளவில் (Zonal Level) நடைபெறும் சுற்றில் பங்குபெறுவர். இதற்காக மாவட்டங்கள் அனைத்தும் ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஒரு அணி தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில், விரிவான வழிகாட்டுதல்கள் இணைப்பு 1 -இல் கொடுக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே கொண்டுசெல்லும் நோக்கத்தில் நடைபெறவுள்ள இந்த வினாடி-வினா போட்டியினை செயல்படுத்த, மேற்கூறிய அனைத்து வழிகாட்டுதல்களை தங்கள் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பயிலும் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. . பொருட்டு தங்கள் வட்டாரக் கல்வி மேலும், இப்போட்டியினை சிறப்பாக திட்டமிட்டு மேற்கொள்ளும் மாவட்டத்திலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்திடவும் அலுவலர்கள் இது சார்ந்த தகவல்களை சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவித்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
இணைப்பு :1. சூழல் அறிவோம் வழிகாட்டு நெரிமுறைகள்
பெறுநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்.
நகல்:
மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-06
CLICK HERE TO DOWNLOAD quiz on environment and climate change - PDF
Soozhal: An Environment and Sustainability Quiz is a flagship initiative of the Department of Climate Change and Environment, Government of Tamil Nadu, aimed at promoting environmental awareness and sustainable thinking among students.
Read on to learn more about the quiz themes, participation rules, and registration process. சூழல்: சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை வினாடி வினா தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மேற்கொள்ளும் ஒரு முக்கியமான முயற்சியாகும். இது மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் நிலைத்தன்மை குறித்த சிந்தனையையும் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டுள்ளது. வினாடி வினாவின் தலைப்புகள், பங்கேற்பு விதிமுறைகள் மற்றும் பதிவு செய்வது பற்றிய மேலும் தகவல்கள் கீழே கொடுக்க பட்டுள்ளது
தகுதி (Eligibility}
Open to all students from Classes 6 to 9 studying in schools across Tamil Nadu.
* தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். குழு அமைப்பு fTeam Composition}
Each team shall consist of two students from any class between 6th and 9th, belonging to the same school.
ஒவ்வொரு குழுவும் ஒரே பள்ளியை சார்ந்த 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை எந்த வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
Each school may register a maximum of five teams.
ஒவ்வொரு பள்ளியும் அதிகபட்சம் ஐந்து குழுக்களைப் பதிவு செய்யலாம்.
தலைப்புகள் (Topics}
The quiz will focus on general themes related to Environment and Sustainability, including but not limited to: இந்த வினாடி வினா சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான பொதுத் தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெறும். அது மட்டுமல்லாமல் கீழ்க்காணும் தலைப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறலாம். Conservation of natural resources இயற்கை வளங்களின் பாதுகாப்பு Climate change and global warming காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமடைதல் Biodiversity and wildlife உயிரியல் பல்வகைமை மற்றும் வனவிலங்குகள் Renewable energy and waste management புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கழிவு மேலாண்மை Sustainable living and environmental practices நிலைத்த வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நடைமுறைகள் *Note: This quiz is not intended to test academic knowledge, but to create awareness and encourage students to think consciously about the environment and sustainability. குறிப்பு: இந்த வினாடி வினா கல்விசார் அறிவைப் பரிசோதிப்பதற்காக அல்ல; மாறாக, மாணவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை குறித்து விழிப்புணர்வுடன் சிந்தித்து செயல்பட ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தயாரிக்க பட்டுள்ளது. வினாடி வினா வடிவம் (Quiz Format} The Soozhal Quiz will be conducted in four levels: சூழல் வினாடி வினா நான்கு நிலைகளில் நடத்தப்படும்: 1. ஆன்லைன் தகுதி சுற்று (Online Preliminary Round) 2. மாவட்ட சுற்று (District Round) 3. மண்டல இறுதி சுற்று (Zonal Finals) 4. மாநில இறுதி சுற்று (State Finals) ஆன்லைன் தகுதி சுற்று (Online Preliminary Round) . All registered teams are eligible to participate in the online preliminary round. பதிவு செய்த அனைத்து குழுக்களும் ஆன்லைன் தகுதி சுற்றில் பங்கேற்க தகுதியானவை. Two separate prelims will be held on November 6th and 7th, respectively. நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு தேதிகளில் தகுதி சுற்று தனி தனியே நடத்தப்படும் Teams can participate in either one or both prelims. The best score from the two attempts will be considered for qualification to the next round. 2 பதிவு செய்த குழுக்கள் இதில் ஏதேனும் ஒரு சுற்றிலோ அல்லது இரண்டிலுமே பங்கேற்கலாம். இரண்டு சுற்றுகளிலும் பெற்ற சிறந்த மதிப்பெண் அடுத்த சுற்றுக்கான தகுதிக்காக கணக்கில் கொள்ளப்படும். Upon successful registration, teams will receive the quiz links and schedule on their registered email IDs. பதிவு வெற்றிகரமாக முடிந்தவுடன், குழுக்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வினாடி வினா இணைப்புகள் மற்றும் அட்டவணை அனுப்பப்படும் The links will be active only during the allotted quiz time, as mentioned in the email. மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மட்டுமே அந்த இணைப்புகள் செயல்படும். வினாடி வினாவிவரங்கள் (Quiz Details) The quiz will consist of 20 multiple-choice questions. வினாடி வினாவில் 20 பல்தேர்வு (Multiple Choice) கேள்விகள் இருக்கும். G Each team will have a total of 11 minutes to complete the quiz.
ஒவ்வொரு குழுவுக்கும் வினாடி வினாவை முடிக்க மொத்தம் 11 நிமிடங்கள் வழங்கப்படும்.
1 minute to enter the registered email ID. பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID-ஐ உள்ளிட 1 நிமிடம்.
10 minutes to answer the questions. கேள்விகளுக்கு பதிலளிக்க 10 நிமிடங்கள். The quiz will auto-submit after 11 minutes.
11 நிமிடங்கள் முடிந்ததும் வினாடி வினா பக்கம் தானாக சமர்பித்துகொள்ளும் Teams must participate under the supervision of their teachers or in-charges.
குழுக்கள் தங்கள் ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் மட்டுமே பங்கேற்க வேண்டும். .
There will be no negative marking, so teams are encouraged to attempt all questions confidently. தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைப்பு எதுவும் இல்லை. எனவே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்குமாறு கேட்டு கொள்கிறோம் மாவட்ட சுற்று (District Round} . The top 10 teams from each district, based on their Online Preliminary scores, for the District Round, which will be held on November 11th. will qualify ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆன்லைன் தகுதி சுற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முதல் 10 குழுக்கள் மாவட்ட சுற்றுக்குத் தேர்வாகும். இந்த சுற்று நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும்.
Only the qualified teams will receive an email invitation containing the quiz link and participation details for the District Round.
தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கே மாவட்ட சுற்றுக்கான வினாடி வினா இணைப்பு மற்றும் பங்கேற்பு விவரங்களுடன் மின்னஞ்சலில் அழைப்பிதழ் அனுப்பப்படும்.
The rules and format of the District Round will remain the same as those followed in the Online Preliminary.
மாவட்ட சுற்றின் விதிமுறைகள் மற்றும் கேள்விகளின் வடிவமைப்பு, ஆன்லைன் தகுதி சுற்றில் பின்பற்றப்பட்டவையே ஆகும். மண்டல இறுதி சுற்று (Zonal Finais) The top team from each district will advance to the online Zonal Finals on 18th and 19th of November. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முதலிடம் பெற்ற குழு நவம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும் ஆன்லைன் மண்டல இறுதி சுற்றுக்குத் தேர்வாகும்.
This round will be an interactive live quiz session, conducted through an online meeting platform, where the quiz host will engage directly with the participating teams.
இந்த சுற்று நேரலை (Interactive Live) வினாடி வினா அமர்வாக இருக்கும். இது ஆன்லைன் சந்திப்பு தளத்தின் மூலம் நடத்தப்படும், இதில் வினாடி வினா நடத்துனர் (Quiz Host) குழுக்களுடன் நேரடியாக உரையாடுவர். . மண்டல The qualified teams will be personally contacted by the Soozhal team to guide them through the process, format, and technical requirements of the Zonal Finals.
CLICK HERE TO DOWNLOAD quiz on environment and climate change - PDF
இறுதி சுற்றுக்குத் சுற்றுக்குத் தேர்வான குழுக்களை, சூழல் குழுவினர் நேரடியாக தொடர்புகொண்டு, செயல்முறை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப தேவைகள் பற்றிய வழிகாட்டுதலை வழங்குவார்கள்.
The quiz format and questions in this round will be completely new and distinct from those in the Online Preliminary and District Rounds. இந்த சுற்றின் வினாடி வினா வடிவமைப்பும் கேள்விகளும் ஆன்லைன் தகுதி மற்றும் மாவட்ட சுற்றுகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கும். For the purpose of this quiz, the 38 districts of Tamil Nadu have been divided into 7 zones. as listed below:
இந்த வினாடி வினாவுக்காக, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: மாநில இறுதி சுற்று (State Finale) The top team from each zone will qualify for the State Finale, which will be conducted offline in Chennai.
ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் முதலிடம் பெற்ற குழு சென்னை நகரில் நடைபெறும் மாநில இறுதி சுற்றுக்குத் தேர்வாகும். இந்த சுற்று நேரடியாக (ஆஃப்லைன்) நடத்தப்படும். • The date, venue, and other event details will be communicated directly to the selected teams by the Soozhal team.
மாநில இறுதி சுற்றுக்கான தேதி, நடைபெறும் இடம் மற்றும் பிற நிகழ்வு விவரங்கள் தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு சூழல் குழுவினரால் நேரடியாக தெரிவிக்கப்படும்.
பரிசுகள் (Prizes) State Final Winner மாநில அளவில் முதலிடத்தை பெற்ற குழு : 350,000/team
State Runner-Up மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற குழு: 330,000/team
State 2nd Runner-Up மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற குழு: 20,000/team
Other finalists இறுதி சுற்றுக்கு தேர்வாகிய மற்ற போட்டியாளர்கள்: 35,000/team
All the participants of the Online Preliminaries will receive a digital certificate. Similarly the participants in all other rounds will also receive digital certificates on their registered emails. Apart from the above mentioned prizes, the district and zonal qualifiers might also receive some goodies.
ஆன்லைன் தகுதி சுற்றில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும். இதேபோல், பிற அனைத்து சுற்றுகளிலும் பங்கேற்றவர்களுக்கும் அவர்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் அனுப்பப்படும். மேலே குறிப்பிடப்பட்ட பரிசுகளை தவிரவும் . மாவட்ட மற்றும் மண்டல நிலை தகுதி பெற்ற குழுக்களுக்கு சிறப்பு பரிசுப்பொருட்கள் (goodies) வழங்கப்படலாம்.
பதிவு செயல்முறை (Registration Process);
Schools or teams interested in participating in "Soozhal: An Environment and Sustainability Quiz" can register at: www.tackon.org/soozhal "சூழல்: சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை வினாடி வினா" வில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் அல்லது குழுக்கள் கீழ்க்கண்ட இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்:
www.tackon.org/soozhal
படிப்படியான பதிவு செயல்முறை (Step-by-Step Registration Process)
1. Open the above link to view the quiz rules and guidelines.
மேலே கொடுக்கப்பட்ட இணைப்பைத் திறந்து வினாடி வினா விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பார்க்கவும். 2. Scroll down and click on the "Register Now" button.
கீழே ஸ்க்ரோல் செய்து "Register Now" பொத்தானை கிளிக் செய்யவும்.
3. A new registration form will open in a separate tab.
புதிய பதிவு படிவம் ஒரு தனி தாவலில் (tab) திறக்கும்.
4. Read the instructions carefully and click on "Start" வழிமுறைகளை கவனமாக வாசித்து "Start" என்பதைக் கிளிக் செய்யவும்.
5. Ail details in the registration form must be entered in English only.
பதிவு படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளிடப்பட வேண்டும்.
6. Enter the Name of Team Member 1, then click "Next" to enter the Name of Tearn Member 2.
முதல் குழு உறுப்பினரின் பெயரை உள்ளிட்டு "Next" என்பதைக் கிளிக் செய்து இரண்டாவது குழு உறுப்பினரின் பெயரை உள்ளிடவும். 7. Provide the email ID of any one team member / parent / teacher. குழு உறுப்பினர் / பெற்றோர் / ஆசிரியர் ஆகியோரில் யாரேனும் ஒருவருடைய ஒரு மின்னஞ்சல் ID-ஐ வழங்கவும்.
The email ID will be verified through an OTP. அந்த மின்னஞ்சல் ID OTP மூலம் சரிபார்க்கப்படும். One email ID can be linked to only one team. ஒரு மின்னஞ்சல் ID ஒரு குழுவுடன் மட்டுமே இணைக்கப்படும். 8. Select the district where your school is located from the dropdown menu.
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டத்தை dropdown பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும். 9. Enter your School Name and UDISE Code in the respective fields.
உங்கள் பள்ளியின் பெயர் மற்றும் UDISE குறியீட்டை உரிய புலங்களில் (fields) உள்ளிடவும். 10. From the dropdown list, select the class of both team members (Classes 6-9 only).
இரு குழு உறுப்பினர்களின் வகுப்புகளை (6-9) dropdown பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும். 11. Enter a mobile number that can be used by the Department to contact your team if you qualify for the Zonal or State Finals. உங்கள் குழு மண்டல அல்லது மாநில இறுதிக்குத் தேர்வாகினால் நாங்கள் உங்களை தொடர்புகொள்ளக் கூடிய கைபேசி எண்ணை வழங்கவும்.
You will be asked to confirm the number before final submission. இறுதியாக சமர்பிக்கும் முன் அந்த கைபேசி எண்ணை உறுதிப்படுத்துமாறு கேட்கப்படும்.
12. After reviewing all details, click "Submit" to complete the registration. அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின் "Submit" என்பதைக் கிளிக் செய்து பதிவை முடிக்கவும்.
உறுதிப்படுத்தல் (Confirmation) Upon successful registration, you will see this message. பதிவு வெற்றிகரமாக முடிந்தவுடன், கீழே உள்ள செய்தி திரையில் காணப்படும் "Thank you! Your team is successfully registered for the Soozha! Quiz. You will soon receive an email containing the rules and links to participate in the quiz."
Details about the Online Preliminaries will be sent to your registered email ID within a few minutes of successful registration. ஆன்லைன் தகுதி சுற்று தொடர்பான விவரங்கள், உங்களின் பதிவு வெற்றிகரமாக முடிந்த சில நிமிடங்களுக்குள் நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
Last date for registration: 5th November 7 PM. பதிவு செய்யும் கடைசி தேதி: நவம்பர் 5 ஆம் தேதி மாலை 7 மணி. If you have any queries, write an email to soozhal@tackon.org ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், spozhal@rackon.or? என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
Quiz on environment and climate change with answers
Quiz on environment and climate change with answers pdf
Quiz on environment and climate change pdf
Climate change quiz questions and answers PDF
CLICK HERE TO DOWNLOAD quiz on environment and climate change - PDF
No comments:
Post a Comment