ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்
பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் கிரா மப்புற மாணவர்களை ஊக்குவிக்க, ஊரக திற னாய்வு தேர்வு நடத்தி, மாவட்டத்துக்கு, 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பிளஸ் 2 வரை, ஆண்டுதோறும், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டு தேர் வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங் கியது.
இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கி, குடும்ப ஆண்டு வருமானம், 1 லட்சம் ரூபாய்க்குள் இருப்பதற்கான வருமான சான்றிதழை இணைத்து, பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக, 10 ரூபாய் வசூலித்து, நவ., 5க்குள் பதிவேற்ற உத்தரவிடப் பட்டுள்ளது.
மேலும் பள்ளியில் உள்ள அதிகபட்ச மாண வர்களும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் அனு பவத்தை பெற விண்ணப்பிக்க செய்யவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
DGE - Trust Examination 2025-2026 Notification Published
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( Trust Examination ) 2025-2026- ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செயல்முறைகள்.
பொருள்:
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6. தமிழ்நாடு (Trust Examination) 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக.
பார்வை:
1 அரசாணை நிலை எண்.960 கல்வித் துறை (இ2) நாள் 11.10.91
2 அரசாணை நிலை எண். 256, பள்ளிக் கல்வித் துறை (இ2) 22.12.08.
அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான "ஊரகத் திறனாய்வு தேர்வு" பார்வை 1-ல் கண்ட அரசாணையின் படி நடைபெற்று வருகிறது.
தகுதியான தேர்வர்கள்
இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.
ஆண்டு வருமானம்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்கு (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (அரசாணை நகல் இணைக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல்
29.112025 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்கைைள 28.10.2025 முதல் 04.11.2025 www.dge.tn.gov.in தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை தேர்வெழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 04.11.2025-க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம்
ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஒவ்வொருவரிடமிருந்தும் தேர்வுக் கட்டணமாக ரூ.10-ஐ பணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்தல்
தேர்வர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட அவ்விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இவ்வலுவலக இணையதளத்தில் சென்று தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட USER ID, Password மூலம் தலைமை ஆசிரியர் தேர்வர்களின் அனைத்து விண்ணப்பங்கைைளயும் 29.10.2025 முதல் 05.11.2025 Online மூலம் பதிவேற்றம் செய்க வேண்டும். மேற்படி தேதிக்கு பிறகு பதிவு செய்வது இயலாது என்பதால் தேர்வர்கள் பாதிக்கப்படா வண்ணம் 05.11.2025 க்குள் பதிவு செய்ய வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ளவாறு அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்த பிறகு இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் செலுத்திய பிறகு மாணவர்களின் விவரங்களை திருத்தம் மேற்கொள்ள இயலாது என்ற விலாத்தினை பள்ளித் தலைமையாசிரியரின் அறிவுறுத்த வேண்டும். நேர்வு கட்டணம் செலுத்திய பிறகு Summary Report பள்ளியில் பெறப்பட்ட பொத்த விண்ணப்பங்கள் (தேர்வர்களின் விவரங்களுடன்) முதன்மைக் கல்வி அலுவலரிடம் 05.112025-க்ருள் ஒப்படைத்தி பள்ளித் தலைனா ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.
தகுதியான பள்ளிகளைஅனுமதித்தல்
4 முதன்மைக் கல்வி அலுவர்கள் தலைமையாசிரியரால் பதிவு செய்த விவரத்தினைப் பெற்று பெற்றோர்களின் ஆண்டு வருவாய் சான்றிதழினை ஆய்வு செய்து ரூ.100,000/-க்குள் வருமானம் உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் அப்பள்ளிகள் ஊரகப் பகுதியைச் சார்ந்ததுதானா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். 960 م كيفية Education (12) Department når 11.10.01 குறிப்பிட்டுள்ளவாறு நகல் இணைக்கப்பட்டுள்ளது) தகுதியுள்ள பள்ளிகளின் பதிவு செய்த மாணவர்களின் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பில் வைத்துக் கொண்டு தகுதியற்ற பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக நீக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னரே தேர்வு மைய இணைப்புப் பணி(mapping work) மேற்கொள்ள வேண்டும்.
இத்தேர்விற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நேர்யர்களுக்கு வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்வது குறித்தான விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஊரகப்பகுதிகளிலுள்ள அனைத்து மேல்நிலை / இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காண் அறிவுரைகளை தவறாது பின்பற்றி தேர்வுகளை நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. அரசாணை நிலை எண். 256, பள்ளிக் கல்வித் துறை (இ2) நாள் 22.12.08.
3. விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள்.
நகல் :
1. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை -6 பணிந்து அனுப்பலாகிறது.
2. தொடக்கக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 6.
3. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்.(சென்னை நீங்கலாக).
4. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(இடைநிலை) (சென்னை நீங்கலாக). அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM), நவம்பர் 2025 தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள்.
2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் 2025 நவம்பர் மாதம் 29-ஆம் தேதி (சனிக்கிழமை ) நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்படுகிறது. என 1. அரசு ஆணை (நிலை) எண்.960, கல்வித் (இ2) துறை, நாள்.11.10.91-ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2025 2026 கல்வியாண்டில் 9 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள்.
2. அரசாணை நிலை எண் 256, பள்ளிக் கல்வி (இ2) துறை நாள் 22.12.2008 ன்படி இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
3. தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான கட்டணம் ரூ.5/-சேவைக் கட்டணம் ரூ.5/- மொத்தமாக ரூ.10/- வீதம் ஆன்லைன் மூலம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்விற்கு விண்ணப்பிக்க 28.10.2025 முதல் 04.11.2025 வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000/- வீதம் வழங்கப்படும்.
குறிப்பு: நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது.
CLICK HERE TO DOWNLOAD DGE - Trust Exam Notification PDF
The term "trust exam" most commonly refers to the TRUST Exam (Tamil Nadu Rural Students Talent Search Exam) for rural students, and the NPS Trust Exam for recruitment by the National Pension System Trust. The former is a scholarship-based exam for Class 8 students in Tamil Nadu, while the latter is a multi-phase recruitment exam for positions within the NPS Trust. Another possibility is TrustExam.ai, an online proctoring service for exams.
Tamil Nadu Rural Students Talent Search Exam (TRUST)
Purpose: Provides financial aid to talented rural students to help them complete their schooling. Eligibility: Students must be in Class 8, and their parents' annual income must be less than ₹1 lakh. Syllabus: Class 8 subjects, including Mathematics, Social Studies, Science, and Mental Ability. Award: A scholarship of ₹1,000 per year for four years (Class 9 to 12) for successful candidates.

No comments:
Post a Comment