தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 13.11.2025 முதல் 14.11.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தேங்காய் சாஸ். தேங்காய் எலுமிச்சை சாறு, உலர்த்திய தேங்காய், தேங்காய் மாவு, தேங்காய் அரிசி / இட்லி தூள், தேங்காய் பால் கேஃபிர், தேங்காய் வேர்க்கடலை, குக்கீகள், தேங்காய் சிப்ஸ் (இனிப்பு). தேங்காய் மிட்டாய், தேங்காய் சாக்லேட் VCO அடிப்படையிலான மசாஜ் எண்ணெய்கள், VCO அடிப்படையிலான முடி வளர்ச்சி மற்றும் பொடுகு எதிர்ப்பு எண்ணெய்கள், வாத நோய் மற்றும் தசை வலி நிவாரணத்திற்கான VCO-அடிப்படையிலான எண்ணெய். VCO- அடிப்படையிலான ஈரப்பதம் ஜெல், அடிப்படையிலான முக தோல் பராமரிப்பு சீரம், VCO-அடிப்படையிலான மூலிகை உதடு தைலம்(ஜெல்). VCO-அடிப்படையிலான வலி மற்றும் சுவாச தைலம் தயாரித்தல் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண். பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனட சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கள் 600032 8668102600/8072914694.
முன்பதிவு அவசியம்:
அரசு சான்றிதழ் வழங்கப்படும்
CLICK HERE TO DOWNLOAD Entrepreneurship Development and Innovation Institute (EDII TN) - 2 Days - Coconut Value Added Training - PDF
Entrepreneurship Development and Innovation Institute “2 Days - Coconut Value Added Training”
Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Chennai is organizing an training programme on Coconut Value Added Training” from 13.11.2025 to 14.11.2025 (Time: 10.00 am to 5.00 pm) at EDII, Chennai – 600 032.
Subjects covered under the topics on Coconut Oil - Cold Press Method, Coconut Sauce, Coconut Lemonade Syrup, Desiccated Coconut, Coconut Flour, Coconut Rice / Idly Powder, Coconut Milk Kefir, Coconut Peanut Shell Cookies, Coconut Chips (Sweet), Coconut Candy, Coconut Chocolate, VCO - Based Massage Oils, VCO - Based Hair Growth & Anti-Dandruff Oils, VCO-Based Oil for Rheumatism & Muscle Pain Relief, VCO-Based Moisture Gel, VCO - Based Face Fek, VCO-Based Herbal Lip Balm, VCO- Based Pain & Respiratory Balm etc., and this training is very useful for self-starting a business with training instructions. Interested candidates (Male/Female) above 18 years of age with a minimum educational qualification of 10th Std may apply.
Hostel facility is available at Chennai affordable rates for men and women. (on first come, first serve basis) For more information, please visit website www.editn.in. Please contact the following telephone / mobile numbers on working days (Monday – Friday) between 10 A.M. to 05.45 P.M for further information.
No comments:
Post a Comment