Free admission in private schools - தனியார் பள்ளிகளில் அக்.30, 31-இல் இலவச சேர்க்கை (RTE ) - கல்வித் துறைச் செயலர் தகவல் - TNTeachersTrends

Latest

Saturday, October 25, 2025

Free admission in private schools - தனியார் பள்ளிகளில் அக்.30, 31-இல் இலவச சேர்க்கை (RTE ) - கல்வித் துறைச் செயலர் தகவல்

தனியார் பள்ளிகளில் அக்.30, 31-இல் இலவச சேர்க்கை - கல்வித் துறைச் செயலர் தகவல் - Free admission in private schools on October 30th and 31st (RTE) - Education Secretary information

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை அக்.30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.



இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். மாநிலம் முழுவதுள்ள 7,717 தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம். தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் ஆர்டிஇ RTE திட்டத்தின்கீழ் இது வரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது. இதுகுறித்த வழக்கில் மத்திய அரசு தனது பங்கு நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. உச்ச நீதிமன்றமும் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. தொடர்ந்து, ஆர்டிஇதிட்டத்தில் தனது பங்களிப்பு நிதியை மத்திய அரசு விடுவித்தது. அதன்பின் நிக ழாண்டில் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை பணிகள் தாமதமாக தொடங்கின.

இதையடுத்து பள்ளிகளில் ஏற்கெனவே சேர்க்கப் பட்டமாணவர்களில் தகுதியான வர்களை ஆர்டிஇ - RTE ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர 81,927 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் சேர 89 பேரும் விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

"இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பி.சந்த ரமோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு":

ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைவிட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை அக்.30-ஆம் தேதி நடைபெறும். ஒதுக்கீட்டைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன் குலுக்கல் முறையில் அக். 31-ஆம் தேதி மாணவர்கள்தேர்வு செய்யப்படுவர்.

மாணவர் இந்த ஆர்டிஇ சேர்க்கை செயல்முறை பள்ளிக் கல்வித் துறை வலைதளம் மூலம் வெளிப்படையாக செயல்படுத் தப்படுகிறது. இதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் கண் காணிப்புக் குழுக்கள் மேற்பார்வையிடுவர். இந்த திட்டத்தில் ஆதரவற்றவர்கள், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி கள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment