தமிழக டிஜிபி தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டவில்லை - UPSC விளக்கம் - TNTeachersTrends

Latest

Sunday, October 26, 2025

தமிழக டிஜிபி தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டவில்லை - UPSC விளக்கம்



தமிழக டிஜிபி தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டவில்லை Tamil Nadu DGP exam has not reached the final stage - UPSC explanation - யுபிஎஸ்சி விளக்கம்

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி, அக் 25: தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) மற் றும் மாநில காவல் படைத்தலைவர் (ஹெச்ஓபிஎஃப்) பதவிக்கு உயர் ஐபி எஸ் அதிகாரியை நியமிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன் னும் வெளியிடவில்லை என்று மத்திய குடிமைப் பணிகள் ஆணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முழு நேர டிஜிபியை தமிழக அரசு நியமிக்க ஏது வாக கடந்த மாதம் தில்லியில் நடந்த யுபிஎஸ்சி கூட்டத்தில் ஐபிஎஸ் உய ரதிகாரிகளின் பெயர்ப் பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், சில கார ணங்களால் அக்கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான உயரதிகாரிகளாக மூவர் பட்டியலை இறுதிப்படுத்தி அதை தமிழக அரசுக்கு யுபிஎஸ்சி அனுப்பி வைத்தது. ஆனால், அந்தப் பட்டியலில் உள்ள அதிகாரிகளில் ஒருவரை டிஜிபி-யாக நியமிப்பதில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லா ததால், அரசின் நிலைப்பாட்டையுபிஎஸ்சிக்கு கடிதம் வாயிலாக தமிழக அரசு தெரியப்படுத்தியது. இந்தத் தகவலை சென்னையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் எஸ். ரகுபதி உறுதிப்ப டுத்தினார்.



ஆர்டிஐ பதில்:

இந்நிலையில், புதிய டிஜிபி நியமனத்தில் எழும் தாம தம் தொடர்பாக யுபிஸ்சியிடம் தகவல் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆணையம் அக்டோபர் 23-ஆம் அளித் துள்ள பதிலில் 'புதிய டி.ஜி.பி நியமனம் தொடர்பான தகுதிப் பட்டியலை இறுதிப்படுத்தும் குழுவின் கூட்டம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான அறி விப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிடாததால் அந்த நியமனம் இறு திக்கட்டத்தை எட்டவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, செப்டம்பர் 26-ஆம் தேதி கூட்டத்தில் பரிசீலிக்கப் பட்ட உயரதிகாரிகளின் பட்டியல் தொடர்பான விவரங்களை கேட்ட தற்கு, தேர்வு நடைமுறை அமலில் உள்ள காலத்தில் ரகசியம் வாய்ந்த இந் தத் தகவல்களை அளிப்பது, இதேபோன்ற விவகாரத்தில் 2006-இல் மத் திய தகவல் ஆணையம் பிறப்பித்த தீர்ப்புக்கு முரணாக அமையும் என்ப தால், அதை தற்போதைக்கு வெளியிட இயலாது என்று யுபிஎஸ்சி கூறி யுள்ளது. 'நியமன நடைமுறை: டிஜிபி நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் அது தொடர்புடைய வழக்குகளின் தீர்ப்பு மற் றும் உத்தரவுகளின்படியே தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் அங்கமாக, மாநில அரசு அனுப்பி வைக்கும் ஐபிஎஸ் உயரதிகாரி களின் தகுதிப் பட்டியலில் இருந்து முதல் மூன்று அதிகாரிகளின் பெயர் கள், யுபிஎஸ்சி தலைவர் தலைமையிலான உயர்நிலைக் குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்குப் பரிந்துரைக்கப்படும். அதனடிப் படையில் மூன்று அதிகாரிகளில் இருந்து ஒருவரை மாநில அரசு, முதல் வரின் ஒப்புதலைப் பெற்று நியமித்து அந்த அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்படும்.

தமிழக டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு முழு நேர டிஜிபி-யாக யாரும் தேர்வு செய்யப்படாததால் சட்டம்- ஒழுங்கு பிரிவு பொறுப்பு டிஜிபியாகவும் மாநில காவல் படைத் தலைவராகவும் டிஜிபி நிலையிலான ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட் ராமனை தமிழக அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தற்காலிகமாக நியமித்தது. யுபிஎஸ்சிக்கு மாநில அரசு பரிந்துரைத்த பட்டியலில் வெங்கட்ராமனின் பெயரும் இடம் பெற் றுள்ளது.

ஆனால், அவரைவிட மூத்த அதிகாரிகள் பட்டியலில் இருப்பதால் அவர் நீங்கலாக வேறு சிலரது பெயர்களை அண்மையில் யுபிஎஸ்சி பரிந் துரைத்துள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பட் பட்டியலுடன் மாநில அரசு அந்தப் பட்டியலுட உடன்படாததால் இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை நீடிப்பதாககாவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டாவது வழக்கு:

இதற்கிடையே, டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளைப் பின்பற்ற வில்லை என்று கூறி ஹென்றி திபேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் நீதி மன்ற அவமதிப்புவழக்கைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில்தான்யுபி எஸ்சி இந்த விவகாரத்தில் விரைவாக கூட்டத்தைக் கூட்டி தகுதி வாய்ந்த அதிகாரிகளை இறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், யுபிஎஸ்சி பட்டியல் அனுப்பிய பிறகும் முழு நேர டி.ஜி பியை தமிழக அரசு நியமிக்கவில்லை என்று கூறி ஹென்றி திபேன் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக் கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment