Kurangu Pedal - October 2025 Month Children's Film - TNTeachersTrends

Latest

Saturday, October 18, 2025

Kurangu Pedal - October 2025 Month Children's Film



பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26 அக்டோபர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் - Screening of children's films for the month of October 2025-26 in government and government-aided schools



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்.034785/எம் / இ1/2025, நாள். /10/2025

பொருள் : பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26 அக்டோபர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு

பார்வை:

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண்.034785/எம்/இ1/2025, நாள்:12/08/2025.

உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும் .

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல்.

மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திறனை வளர்க்கும் நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அக்டோபர் மாதம் "குரங்கு பெடல்." அனைவரும் கண்டுணரும் வகையில் திரைப்படத்தை திரையிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. படத்தின் கதைக் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.

திரையிடலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

1. திரையிடுவதற்கு முன்

இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

திரையிடலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் அப்பள்ளியைச் சார்ந்த SMC முன்னாள் மாணவ ஒருங்கிணைத்தலுக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தலைமை ஆசிரியருடன் இணைத்துக் கொள்ளலாம். ஒருங்கிணைத்தலுக்கான SMC முன்னாள் மாணவ உறுப்பினர் பொறுப்பு படி திரையிடப்படவிருக்கும் படத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வர்.

பொறுப்பு ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான பொறுப்பாளர்கள் திரையிடலுக்கு முன்பே படத்தைப் பார்த்து, படத்தின் கருப்பொருள், அதன் உணர்ந்து திரையிடலுக்கு தம்மைத் முக்கியத்துவம் போன்றவற்றை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரையிடப்படவிருக்கும் படம் மற்றும் முன்னோட்ட காணொளியை மற்றும் முன்னோட்ட திரையிட்டு பார்த்து அதன் திரையிடும் தரத்தை உறுதிப்படுத்திட வேண்டும்.

திரையிடலுக்குத் தேவையான அறை மற்றும் கருவிகளின்தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

திரையிடப்படும் அறை, ஏதுவான திரையிடலுக்கு ஒளி, ஒலி குறைவான, அமைதியான இடமாக இருக்க வேண்டும். இடமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

காற்றோட்டமான, சுகாதாரமான, பாதுகாப்பான படம் பார்க்கும் மாணவர்களுக்குப் போதுமான இருக்கை, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

2. திரையிடலின் போது

பொறுப்பு ஆசிரியர் மற்றும் SMC உறுப்பினர் திரையிடலுக்கு முன்பு படத்தின் கரு, அதன் பின்னணி, அதைத் திரையிடுவதற்கான காரணம் போன்றவற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

படத்தை திரையிடும் முன் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.

திரையிடப்படும் படம் தமிழ் அல்லாத பிறமொழியாக இருக்கும் வேளையில் அந்தப்படத்திற்கு நேரடி மற்றும் சுருக்கமான மொழிபெயர்ப்பைத் தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ, பள்ளி மேலாண்மைக் குழுவிலுள்ள முன்னாள் மாணவரோ அல்லது பொது முன்னாள் மாணவரோ அல்லது எல்லோரும் இணைந்தோ செய்ய வேண்டும்.

திரையிடப்படும் படத்தில் பணி புரிந்தவர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் பிற செய்திகளை எழுத்து வடிவில் வரும்போது பார்க்கும்படி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும், அதை முழுமையாகப் குறிப்பாகப் படம் முழுமையாக முடியும் வரை விளக்குகளை அணைத்தே வைத்திருக்கவேண்டும்.

3. திரையிட்ட பின்

படத்தின் கதைக்கரு மற்றும் படத்திலிருந்து பெறப்பட்ட அனுபவத்தைப் பற்றிக் கலந்தாலோசித்து விவாதிக்க மாணவர்களுக்கு உரிய நேரம் கொடுக்கப்பட வேண்டும்.

படம் சார்ந்து இணைப்பில் பகிரப்பட்ட கலந்துரையாடலுக்கான தலைப்புகள் அல்லது கேள்விகள், மாணவர்களிடம் பகிரப்பட்டு உரையாடலை ஊக்குவிக்க வேண்டும்.

திரையிடலை ஒருங்கிணைக்கும் ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடலில் மற்றும் பங்கேற்று விளக்கங்களை, மாணவர்கள் கவனிக்கத் தவறிய கூறுகளை பகிரலாம்.

கலந்துரையாடலுக்கு உரிய முக்கியத்துவமும், போதுமான நேரமும் வழங்கப்பட வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள link- ல் அக்டோபர் மாதம் திரையிடப்படும் "குரங்கு பெடல்" திரைப்படம் மற்றும் படத்திற்கான முன்னோட்ட காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

Drive Link:



இணைப்பு:

1. படத்தின் புகைப்படம்

2. படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்

3. உரையாடலுக்கான கேள்விகள்

4. திரையிடலுக்கான நிரல்

பெறுநர் :

முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்,

நகல் :

1. அரசு செயலர், பள்ளிக் கல்வித்துறை, சென்னை 2. உறுப்பினர் செயலர், மாதிரி பள்ளிகள், சென்னை - 600006

2. மாநில திட்ட இயக்குனர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை – 600006

3. இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநரகம், சென்னை- 600006



படத்தின் பெயர்: "குரங்கு பெடல்”

குரங்கு பெடல்

இணைப்பு 2 படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்.

படம் வெளியான ஆண்டு: 2024

இயக்கம்: திரு.கமலக்கண்ணன்

குரங்கு பெடல்

1980களின் கோடை விடுமுறை காலம். மாரியப்பனும் அவனது நண்பர்களும் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கத் திட்டமிடுகிறார்கள். அனைவருக்கும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை. மாரியப்பனின் தந்தை வாடகை சைக்கிள் எடுக்கக் காசு தர மறுக்கிறார். அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அதனால் ஊரில் அனைவரும் அவரைக் கேலி செய்வார்கள்.

மாரியப்பனுக்கு எப்படியாவது சைக்கிள் ஓட்டி விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.தனது நண்பர்களின் உதவியுடன் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்.

அவனது தோல்விகளும், சிக்கல்களும் அவற்றைச் சமாளிக்க எடுக்கும் சுவையான முயற்சிகளும் இக்கதையை நமக்கு நெருக்கமானதாக ஆக்குகின்றன.

இறுதியில், மாரியப்பன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதன் மூலம் தனது சிறிய கனவை நிறைவேற்றுகிறான். அவனது முயற்சியால் தந்தையும் சைக்கிள் ஓட்டிப் பழகத் தொடங்குகிறார்.

இந்தப் படம் குழந்தைகளின் கொண்டாட்டமான உலகம்,புதியவற்றைக் கற்கும் ஆர்வம் ஆகியவற்றை இயல்பாகப் பிரதிபலிக்கிறது. மேலும், பெற்றோர் குழந்தைகளின் உறவின் நுணுக்கங்களையும், குழந்தைகளின் மூலம் பெற்றோர்களின் மனதில் மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதையும் உணர்த்துகிறது.

இணைப்பு 3: அனைத்து குழந்தைகளும் கலந்துரையாடுவதற்கான செயல்பாடுகள்:

1. அனுபவ பகிர்வு

திரைப்படத்தில் மாணவர்களுக்குப் பிடித்த காட்சிகள், பிடிக்காத காட்சிகளைப் பட்டியலிடுதல். திரைப்படத்தைப் பார்க்கும் போது மாணவர்களின் நினைவில் தோன்றியவற்றைப் பகிர்தல். அவரவர் சைக்கிள் ஓட்டிப் பழகிய அனுபவங்களைப் பற்றி பகிர்தல்.

2. கலந்துரையாடல்

கேலி செய்யும் விதமாக வீட்டிலோ, ஊரிலோ மாணவர்கள் கேள்விப்பட்ட அல்லது உபயோகிக்கும் பெயர்களை கரும்பலகையில் எழுதுதல்.

கரும்பலகையில் எழுதப்பட்ட பெயர்களில், உடல் தோற்றம், உடை, உடல் பண்புகள், குறைபாடுகளைக் கேலி செய்யும் விதமாக இருக்கும் பெயர்களைச் சுட்டிக்காட்டுதல். கேலி செய்யும் பெயர்களால் மனதில் ஏற்படும் உணர்வுகளைப் பகிரச் சொல்லுதல். கலந்துரையாடி தீர்வை முடிவு செய்தல்.

3. வரைதல் குறிப்பு

அவரவர் ஊரில் பிடித்த இடங்களை வரைதல். திரைப்படத்தில் பிடித்த காட்சியை வரைதல்.

திரைப்படம் பற்றிய மாணவர்களின் கலந்துரையாடல் குறிப்புகள் மற்றும் அனுபவ பகிர்வுகளை alumni@tnschools.gov.in மின்னஞ்சல் வாயிலாக மாநிலத்திற்கு பகிறலாம். சிறந்த ஓவியங்களை, தேன்சிட்டு இதழுக்கு thenchittu@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் (அ) கீழ்கண்ட முகவரிக்கு நேரடியாகவும் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

(முகவரி : 8 வது தளம், ஈ.வெ.கி சம்பத் மாளிகை, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,கல்லூரிச் சாலை, சென்னை - 600 006)

இணைப்பு 4: திரையிடலுக்கான நிரல்:

No comments:

Post a Comment