39 பகுதி நேர தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களை முழுநேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து ஆணை - TNTeachersTrends

Latest

Friday, October 17, 2025

39 பகுதி நேர தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களை முழுநேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து ஆணை

39 பகுதி நேர தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களை முழுநேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து ஆணை!! Order to convert 39 part-time fixed-wage cleaners into full-time cleaners and fix special periodic wages

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 39 பகுதி நேர தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களை முழுநேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து ஆணை வெளியிடப்படுகிறது.



சுருக்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 39 பகுதி நேர தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களை முழுநேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து ஆணை வெளியிடப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-4(2))துறை

அரசாணை (நிலை) எண். 103



விசுவாவசு வருடம்,

புரட்டாசி- 28-ஆம் நாள்,

திருவள்ளுவர் ஆண்டு 2056.

படிக்கப்பட்டது:-

அரசாணை (நிலை) எண். 81, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-4)துறை, நாள். 10.08.2020.

அரசாணை (நிலை) எண். 112, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-4)துறை, நாள்.30.08.2023.

3. ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதம் ந.க. 2/4286/2024, नं. 04.10.2024

ஆணை:-



மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டும், விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தினை கருதியும் தூய்மைப் பணியாளர் பணியிடம் இன்றியமையாததால், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தொகுப்பூதியத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிமுடித்த 544 தூய்மைப் பணியாளர்களை முழு நேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale of Pay) நிலை-2 ரூ.4100 ரூ.12500 என்ற ஊதியத்தில் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டது.



2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தொகுப்பூதியத்தில் பகுதி நேர தூய்மைப் பணியாளர்களாக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிமுடித்த 98 தூய்மைப் பணியாளர்களை இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் முழு நேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale of Pay) நிலை 2 ரூ.400-ரூ.12500 என்ற ஊதியத்தில் நிர்ணயித்து கூடுதலாக நிதி ரூ.39,91344/ ரூபாய் முப்பத்து ஒன்பது இலட்சத்து தொண்ணூற்று ஓராயிரத்து முற்நூற்று நாற்பத்து நான்கு மட்டும்) வழங்கி ஆணையிடப்பட்டது.

3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ரூ.3000/- தொகுப்பூதியத்தில் பணி முறிவு காலங்கள் நீங்கலாக பகுதி நேர தூய்மை பணியாளர்களாக மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 39 நபர்களை முழுநேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யலாம் எனவும், அதனால் ஆண்டிற்கு ரூ.18.95,400/- கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும், அதன் செலவினத் தொகையின் விவரத்தினை பின்வருமாறும் தெரிவித்திருந்தார்.



மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில், 5.3000/- தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், 39 நபர்களுக்கு, பணிமுறிவு காலம் நீங்கலாக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிமுடித்த நாள் முதல், முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale of Pay) நிலை -2 ரூ.4100/- ரூ.12500 என்ற ஊதியத்தில் நிர்ணயித்து ஆணை வழங்குமாறு ஆதிதிராவிடர் நல இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.

4. /ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்துரு அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. பரிசீலனைக்குப்பின், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டும், விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தினை கருதியும், தூய்மைப் பணியாளர் பணியிடம் இன்றியமையாததாக கருதப்படுவதால், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ரூ.3000/- தொகுப்பூதியத்தில் பகுதி நேர தூய்மைப் பணியாளர்களாக (பணிமுறிவு காலம் நீங்கலாக) 3 ஆண்டுகள் பணிமுடித்த, 39 தூய்மைப் பணியாளர்களை (இணைப்பில் கண்டுள்ளவாறு) இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் முழு நேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale of Pay) நிலை-2 ரூ.4100- ரூ.12500 என்ற ஊதியத்தில் நிர்ணயித்தும், அதற்கான கூடுதல் தொகை ரூ.18,95,400/-க்கு (ரூபாய் பதினெட்டு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து நானூறு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது.

5. மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட இச்செலவினம் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்:- 2225-ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் 01 ஆதிதிராவிடர் நலன் 277 கல்வி மாநில செலவினங்கள் சம்பளங்கள் AE மாணவர் இல்லங்கள் 301 (IFHRMS 2225-01-277-AE-30100)

(5... 2225-01-277-AE-0109)

6. மேலே பத்தி நான்கில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகையினை பெற்று வழங்கிட ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.



No comments:

Post a Comment