Diwali 2025 நாளை தீபாவளி.. எண்ணெய் தேய்த்து குளிக்க, பூஜை செய்ய உகந்த நேரம் என்ன? - TNTeachersTrends

Latest

Sunday, October 19, 2025

Diwali 2025 நாளை தீபாவளி.. எண்ணெய் தேய்த்து குளிக்க, பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?



Diwali 2025 | Tomorrow is Diwali.. What is the best time to take oil bath and perform puja? - Diwali 2025 | நாளை தீபாவளி.. எண்ணெய் தேய்த்து குளிக்க, பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?

பண்டிகை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தீபாவளி பண்டிகை பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டிகை எப்போது வரும், எப்போது வெடி வெடிக்கலாம் என பொதுமக்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி நாளை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே எண்ணெய் குளியலும், பூஜையும் தான் முக்கியம்.

அப்படி நாளை எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது, எப்போது பூஜை செய்யலாம் என்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

தீபாவளி பண்டிகை அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடும். எனவே அன்றைய தினம் 3 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று கண்டிப்பாக நல்லெண்ணெய் மற்றும் சீகைக்காய் வைத்து குளிக்க வேண்டும். இவை இரண்டு மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.

அதாவது உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து சூடான நீரில் நீராடினால் நான் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏனெனில் அன்றைய தினம் கங்கா தேவி சூடான நீரில் வசம் செய்கிறாள் என்பதால் இவ்வாறு சொல்லப்படுகிறது.

அதிகாலை (3 மணி முதல் 5.30 மணிக்குள்) எண்ணெய் குளியல் செய்வது சிறந்தது. இது கங்கையில் குளித்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

தீபாவளி அன்று அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் இறைவழிபாடு செய்ய உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் உங்களால் இறைவழிபாடு செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வழிபாடு செய்யலாம்.

நீராடிய பிறகு பூஜையறையில் உள்ள இறைவனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, புதுத்துணிகள், இனிப்பு பலகாரங்களை படைத்து, அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி இந்த ஒளியில் இறைவனை வழிபட வேண்டும்.

உங்கள் பூஜை அறையில் எத்தனை அகல் விளக்குகளை ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகளை ஏற்றி அந்த ஒளியில் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்து முடித்த பின்னர் புதுத்துணிகளை உடுத்திக் கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற வேண்டும்.

No comments:

Post a Comment