அரசு ஊழியர்களின் பெற்றோரை சேர்க்கும் அறிவிப்பை அமல்படுத்த தமிழாசிரியர் சங்கம் வலியுறுத்தல் - TNTeachersTrends

Latest

Monday, October 20, 2025

அரசு ஊழியர்களின் பெற்றோரை சேர்க்கும் அறிவிப்பை அமல்படுத்த தமிழாசிரியர் சங்கம் வலியுறுத்தல்



அரசு ஊழியர்களின் பெற்றோரை சேர்க்கும் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் - > தமிழாசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Tamil Teachers' Association urges implementation of announcement to include parents of government employees

மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பெற்றோரைச் சேர்க்கும் அறிவிப்பை அமல்படுத்த தமிழ்நாடு தமிழ்நாடு தமிழாசிரிய தமிழாசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நீ.இளங்கோ கூறியதாவது:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு மருத் துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக ஊதியம், ஓய்வூதியத்தில் மாதம் ரூ.300 பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் 4 ஆண்டு களுக்கு ரூ.5 லட்சம் வரை யும், குறிப்பிட்ட சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரையும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் திருமணமான அரசு ஊழியராக இருந்தால் மனைவி அல்லது கணவர். குழந்தைகளை இத்திட்டத்தில் சேர்க்கின்றனர்.

ஆனால் அவர்களது பெற்றோரை இணைக்க வழிவகை இல்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் அவர்களது பெற்றோரும் இணைக்கப்படுவர் என 2024 ஜூன் 29-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

மேலும், மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள சிக்கல்களை களைய தலைமைச் செயலர் தலைமையில் விரைவில் ஆய்வுக்கூட்டம் நடத்தி நெறி முறைகள் வகுக்கப்படும் என தெரிவித்தார்.

ஏமாற்றம் அளிக்கிறது.

இது அறிவிக்கப்பட்ட உடனேயே அரசு ஊழியர்கள், ஆசிரியரிடமிருந்து பெற்றோர் விவரங்கள் பெறப்பட்டன. ஆனால், அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து ஓராண்டாகியும் அரசாணை வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. உடனடி யாக இது தொடர்பான அரசாணையை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment