RTE Admission Instructions - சேர்க்கை நடைமுறைகள் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்! - TNTeachersTrends

Latest

Tuesday, October 28, 2025

RTE Admission Instructions - சேர்க்கை நடைமுறைகள் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்!



RTE சேர்க்கை நடைமுறைகள் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்! Private schools director's procedures regarding RTE admission procedures!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலரின் செயல்முறைகள், சென்னை ந.க.எண்.2095 /சி/ இ1/ 2025. நாள் 22:10.2025

பொருள் :

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2009, பிரிவு 12 (1) (c) இன் படி 2024-2025ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG/I Std) குறைந்தபட்சம் 25 % இடஒதுக்கீடு வழங்குதல்- சேர்க்கை நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பு.

பார்வை

: 1. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள், 2011,

2. அரசாணை(நிலை) எண்.271, பள்ளிக்கல்வித் துறை(சி2), நாள்.25.10.2012.

3 அரசாணை(நிலை) எண்.60, பள்ளிக்கல்வித் (எக்ஸ்2) துறை, நாள்.01.04.2013.

4 அரசாணை(நிலை) எண்.59, பள்ளிக்கல்வித் (பொநூ2) துறை, நாள்.12.05.2014.

5 அரசாணை(நிலை) எண்.66, பள்ளிக்கல்வித் (பொநூ2) துறை, நாள்.07.04.2017,

6. இவ்வலுவலக இதே எண்ணிட்ட ந க எண் நாள் 3.10.2025 7. சென்னை உயர்நீதி மன்ற வழக்கு எண் W.P No.38747/2025 மற்றும் 38941/2025 இல் கண்டுள்ள செயல்முறைகளின் படி பார்வை அனைத்து மாவட்டங்களிலும் 2025-2026 ஆம் ஆண்டுக்கான குழந்தைகளுக்கான 2009 திட்டத்தின் கீழ் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் சேர்க்கை செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதில் 13.10.2025 வரை தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டும் என்றும், தகுதியற்றவை எனில் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், மேலும் விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

பார்வை 7 இல் கண்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 திட்டத்தின் கீழ் தகுதியான மாணாக்கர்களின் விவரங்களை பரிசீலிக்கவும், இறுதிப்பட்டியல் வெளியிடவும் 30.10.2025 வரை கால நீட்டிப்பு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அப்பள்ளியின் 25% ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு இணையாகவோ அல்லது குறைவாகவே இருப்பின் அம்மாணாக்கர்களின் சேர்க்கை பட்டியலினை 30.10.2025 அன்று வெளியிட வேண்டும்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அப்பள்ளியின் 25% ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகமாக இருப்பின், அவ்வாறான தகுதியான விண்ணப்பங்களில் சிறப்பு முன்னுரிமைப்பிரிவு குழந்தைகளுக்கு உரிய சேர்க்கை வழங்கிய பின்னர், மீதமுள்ள இடங்களுக்கு மட்டுமே குலுக்கல் முறையில் 31.10.2025 அன்று உரிய வழிமுறையின் படி மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்களின் விவரங்களை அன்றே பள்ளித் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்களின் விவரப்பட்டியல் விடுதலின்றி EMIS தளத்தில் உடனடியாக உள்ளீடு செய்தல் வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பள்ளிகள் இயக்குநருக்காக

பெறுநர்

1.அறனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலமாக) 2.அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) (மின்னஞ்சல் மூலமாக)

நகல்

1. அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகின்றது

2. இயக்குநர், மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை-6 (EMIS நடவடிக்கைக்காக பணிந்தனுப்பலாகின்றது)

CLICK HERE TO DOWNLOAD RTE Admission Instructions - PDF

What is the new right to education?

Enacted under Article 21a, the Right to Education Act mandates that every child, irrespective of family income, gender, caste, or creed, should have access to quality education

Who is eligible for RTE quota?

A family whose annual income is Rs. 3.5 Lakh or underneath can apply for seats under the RTE (Right to schooling) act. Every child with exceptional necessities, like orphans, migrant family offsprings, and laborers is qualified for admission under the RTE Act

No comments:

Post a Comment