உடற்கல்வி இயக்குநர் நிலை - 2 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு! - TNTeachersTrends

Latest

Monday, October 27, 2025

உடற்கல்வி இயக்குநர் நிலை - 2 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு!



உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு

பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசு உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் பணிபுரி​யும் உடற்​கல்வி ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு மூல​மாக, உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 நியமனம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நில​வரப்​படி, உடற்​கல்வி ஆசிரியர் பணி​யில் இருந்து உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகு​தி​யானவர்​களின் பெயர்ப் பட்​டியலை தயார்​ செய்து அனுப்ப வேண்​டும்.

அந்த வகை​யில், இந்த பட்​டியலில் இளநிலை​யில் இரட்டை பட்​டப் படிப்பு படித்​தவர்​களின் பெயரை சேர்க்​கக் கூடாது. பட்​டியலில் இடம் பெற்​றுள்ள ஆசிரியர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் இருக்​கிறதா என்​பதை கூர்ந்​தாய்வு செய்ய வேண்​டும்.

விதி​முறை​களுக்கு முரணாக பெயர் சேர்க்க பரிந்​துரைத்​தாலோ அல்​லது பெயர் விடு​பட்​ட​தாக தெரி​வித்து முறை​யீடு ஏதும் பின்​னர் பெறப்​பட்​டாலோ அதற்கு சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் முழுப் பொறுப்பை ஏற்க நேரிடும். எனவே, இந்த விவ​காரத்​தில் கூடு​தல்​ கவனத்​துடன்​ செயல்​பட வேண்​டும்​. இவ்​​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



The Director of School Education has issued an order requesting details of physical education teachers eligible for promotion to Director of Physical Education Level - 2! - உடற்கல்வி இயக்குநர் நிலை - 2 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அரசு மற்றும் 01.01.2025 ந.க.எண்.65778/சி5/இ2/2025, நாள்: 10.2025 பொருள்:

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் நிலவரப்படி. உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை - II ஆக பதவி தற்காலிக உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்ய- தகுதிவாய்ந்த உடற்கல்வி ஆசிரியர் விவரங்களை சார்பு. அனுப்பி கோருதல்

பார்வை:

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகள் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 13 பள்ளிக் கல்வித் துறை, நாள் 30.01.2020.

******

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பார்வையில் காணும் அரசாணையின்படி நியமனம் வழங்கப்படுகிறது. அதன்படி, 01.01.2025 நிலவரப்படி 1999ஆம் வருடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிநியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் உடற்கல்வி இயக்குநர் நிலை – II ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் விவரங்களின் பெயர் பட்டியலினை அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சரிபார்த்து தகுதிவாய்ந்த உடற்கல்வி ஆசிரியர் விவரங்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அனைத்து குறிப்புகளின்படி அனுப்புமாறு முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

1. பார்வையில் காணும் அரசாணையில் பத்தி 5 (class V) இல் உடற்கல்வி இயக்குநர் நிலை-2ற்கான கல்வித்தகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதி பெற்று இருத்தல் வேண்டும்.

2. இளங்கலை பட்டத்தில் இரட்டைப்படிப்பு (Double Degree) படித்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்படக்கூடாது.

3. அலகுவிட்டு அலகு மாறுதலில் / வேறு துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு ஈர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் சார்பாக அவர்கள் பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

4. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பதனை கூர்ந்தாய்வு செய்ய வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தற்காலிக (Temporary) உத்தேச பெயர் பட்டியலில் சேர்க்க அவ்வாசிரியரின் விவரத்தினையும், பதவி உயர்வு வழங்க எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை c5sectioncose@gmail.com என்ற 30/10/2025-க்குள் அனுப்பிவிட்டு, அதன் மின்னஞ்சல் முகவரிக்கு கையொப்பமிட்ட பிரிதியினை உரிய ஆவணங்களுடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து அறிவுறுத்துப்படுகின்றனர்.

இணைப்பு: படிவம்

முதன்மைக்கல்வி அலுவலர்களும் பள்ளிக்கல்வி இயக்குநர்

பெறுநர்:

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்.

DSE - PD-2 Panel - Click Here To Download PDF

No comments:

Post a Comment