JACTTO GEO State Coordinators Meeting Results - ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் - 23.10.2025 - TNTeachersTrends

Latest

Tuesday, October 28, 2025

JACTTO GEO State Coordinators Meeting Results - ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் - 23.10.2025



ஜாக்டோ ஜியோவின் நவம்பர் போராட்ட அறிவிப்புகள்



ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் - 23.10.2025 - JACTTO GEO State Coordinators Meeting Results - 23.10.2025

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக ( Online ) 23.10.2025 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.மு.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது . அக்கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப்பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் நிலைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது . பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பாக 08.10.2025 அன்று ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தொடர் போராட்ட இயக்க நடவடிக்கைகள் முடிவெடுக்கப்பட்டது . ஆயினும் இயற்கை சீற்றத்தின் காரணத்தால் நாம் எடுத்துள்ள கீழ்கண்ட முடிவுகளை தொய்வின்றி , வெற்றிகரமாக நடத்திட அனைத்து அமைப்புகளும் தங்களது மாநில மையத்தின் சார்பாக அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப்பணியாளர்களிடம் கொண்டு சென்று மிக எழுச்சியோடு பங்கேற்க வைப்பது என முடிவெடுக்கப்பட்டது .

கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கால இயக்க நடவடிக்கைகள்

01.11.2025-ஜாக்டோ-ஜியோ உயர் மட்டக்குழு கூட்டம், திருச்சி உயர்மட்ட குழு கூட்டத்தை வருகிற 01.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை திருச்சியில் இரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள அருள் ஹோட்டல், சுமங்கலி ஹாலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர் சார்பாக அனைத்து உயர்மட்டகுழு தோழர்களும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

10.11.2025 முதல் 14.11.2025 வர பாவட்ட அளவிலான பிரச்சார இயக்கம்:

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசின் காலதாமத்தையும், கோரிக்கைகள் நிறைவேற்றிட போராட்டத்தின் நோக்கம் குறித்தும், அதில் பங்கேற்பதன் அவசியம் குறித்தும் மாவட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ சார்பாக 10.11.2025 முதல் 14.11.2025 வரை வாகன பிரச்சார இயக்கம் விரிவாக நடத்துவது.

18.11.2025 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்:

பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனே அமுல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்சு கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இலட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்கள் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்திடுவது.

அதன்பிறகும் தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைக்கு செல்வது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளகூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும். மேற்கண்ட முடிவுகளை மாவட்டங்களில் முழுமையாகவும்சிகரமாகவும் நிறைவேர்ட பாவட்ட ஒருங்கிணைணப்பாளர்கள் கூட்டத்தை உடன் கூட்டி திட்டமிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோரிக்கைகள்:

01.04.2003 க்குப்பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்படன் கூடிய ஒய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திட வேண்டும்.

ஆசிரியர் கருதித்(TET) சென்றத்திப்பினைக் காரணம் கட்டி 23.08.2010 4ரு முன்ஆசிரியர்களுக்கு எபட்டுள்ளஅசிறைங்கவில் இருந்து (TET லிருந்து விலக்களித்து) ஆசிரியர்களை பாதுகாத்தி தமிழ்நாடு அரசு சீராய்வு மறு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வோட்டும்.

இலை நிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு களிதலைகைளுக்குளி நிலக்கர் மம் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அமீறி கணையப்பட வேண்டும்

க்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 00 ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தும் வகையில் வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசானை எண்.243, punk 21.02.2023 மற்றும் ஆதிகிராலி பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை எண். 76, நாள்: 30.09.2024 ஆனடியாக ரத்து செவேண்டும். முநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள். களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழிநுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக்களைய வேண்டும். கல்லூரி பேராசியரியர்களுக்கான நிலுவையிபணிமேம்பாடு (CAS), பேராசிரியர் பணி மேம்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வோண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இள ஏவை நிலை ஆ ஆசிரியர்களை பட்டதாரி பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப்பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பமிற்சி நிலைய PPP & COE வாழியர்கள், பல்நோக்கு மருத்துவமணைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்காக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5% மாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25% மாக வழங்கிட வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்திட வேண்டும்.

23.10.2025 JACTTO GEO கூட்ட முடிவுகள் pdf - Download here

No comments:

Post a Comment