bicycles to 11th grade students - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!
Instructions from the Director of School Education regarding the provision of bicycles to 11th grade students! - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.6
ந.க.எண்.036425 /இ/இ1/2025 நாள். 15.10.2025
பொருள் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - 2024-25 ஆம் கல்வியாண்டு - 11 ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.
பார்வை
1. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர் அவர்களின் கடித ந.க.எண்.DBC/491/2024-டி3-2. நாள் 15.09.2025 மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையரின் நேர்முக கடிதம் நாள்.29.09.2025,
2. பள்ளிக் கல்வி இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்.19.09.2025,
பார்வை 1 இல் காணும் பிற்படுத்தப்பட்டோர் நல் ஆணையரின் கடிதத்திற்கிணங்க, 2025-2026 ஆம் கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டம் சார்ந்து பள்ளி வாரியான அனைத்து பிரிவுகளுக்கான (இனவாரியாக) தேவைப்பட்டியலினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் Avon Cycles Ltd, Ludhiana (21 மாவட்டம்) மற்றும் Hero cycles Ltd, Ludiana (17 மாவட்டம்) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குமாறும், மேலும் மிதிவண்டிகள் உதிரிபாகங்களை பொருத்துவதற்கு (Fitting) ஏதுவாக கடந்த ஆண்டுகளில் பள்ளிகளில் இடமளித்தது போன்று, நடப்பாண்டிலும் பள்ளிகளில் இடமளிக்க உரிய அனுமதியினை வழங்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு பார்வை 2 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளில் அறிவுறுத்தப்பட்டது.
மேற்கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை கவனத்தில் கொண்டு இத்திட்டத்தினை நன்முறையில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மிதிவண்டிகள் சார்ந்து மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
Sub: Tender. No. BC/02/2025-26 (Contractor details)
Dear Sir/Madam,
Dated: 17.09.2025
Please find attached the contact details of the contractors and their appointed supervisors engaged by Hero Cycles Limited for the ongoing Tamil Nadu Tender FY 2025-26.
This letter also includes the contact information of Hero Cycles' local representatives based in Chennai, who will serve as the single point of contact for the Department and will represent our contractors in all communications and coordination with your office.
Additionally, we have enclosed the details of our Back-End Support Team based at our Head Office in Ludhiana, including their names, contact numbers, and email IDs for your reference. Should you require any further information or clarification, please feel free to reach out to our representatives at any time.
HERO CYCLES LIMITED - CORDINATION DETAILS FOR SUPPLY OF BICYCLE FOR TAMIL NADU ORDER 2025-26
மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - 2024-25 ஆம் கல்வியாண்டு - 11ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் - தொடர்பாக.
1. அரசாணை நிலை எண்.34, பி.வ, மிபிவ (ம) சி.பா நலத்(சிந2)துறை நாள்.03.06.2025,
2 பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர் அவர்களின் கடித ந.க.எண்.DBC/491/2024-டி3.2 நாள் 15.09.2025.
2025-26 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் கீழ வரும் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள்/ பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கும் (SC/ST/MBC&DNC/BC/OC) (பள்ளியுடன் இணைந்துள்ள விடுதிகளில் ( Residential Schools ) தங்கியுள்ளோர் மற்றும் பள்ளியும் விடுதியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள (Schools and Hostels are in the same campus) விடுதியில் தங்கியுள்ளோர் ஆகிய மாணாக்கர்களை தவிர்த்து) மிதிவண்டிகள் வழங்கும் பொருட்டு கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
மிதிவண்டி சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான வழிகாட்டுதல்கள்
பார்வை -1 இல் காணும் அரசாணையின்படி மிதிவண்டிகள் கொள்முதல் குழுவால் இறுதி செய்யப்பட்ட விலையில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை விநியோகம் செய்யும் பொருட்டு Avon Cycles Ltd, Ludhiana மற்றும் Hero cycles Ltd, Ludiana ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
பள்ளி வாரியான அனைத்து பிரிவுகளுக்கான (இனவாரியாக)
தேவைப்பட்டியலினை (முன் இருப்பினை கழித்து நிகரத் தேவைப்பட்டியல்)
சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் Avon Cycles Ltd, Ludhiana மற்றும் Hero cycles Ltd, Ludiana ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கொள்முதல் ஆணை பெற்ற மேற்படி மிதிவண்டி நிறுவனங்கள் கொள்முதல் ஆணை நாளிலிருந்து 15 நாட்களுக்கு மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை விநியோகம் செய்யும் நடவடிக்கையினை தொடங்க வேண்டும் மற்றும் 90 நாட்களுக்குள்ளாக முழுவதுமாக விநியோகம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மிதிவண்டிகளை பள்ளிகளுக்கு வழங்கும் முன் சம்பந்தப்பட்ட முதன்மைக் அலுவலரை கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் நிறுவனத்திடமிருந்து தொடர்பு கொள்ளும் போது சரியான வழிகாட்டுதலை வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
கல்வி மேலும் மிதிவண்டிகள் உதிரிபாகங்களை பொருத்துவதற்கு (Fitting) ஏதுவாக கடந்த ஆண்டுக்ளில் பள்ளிகளில் இடமளித்து போன்று, நடப்பாண்டிலும் பள்ளிகளில் இடமளிக்க உரிய அனுமதியினை வழங்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் மிதிவண்டிகளின் பாகங்களை பொருத்துவதற்கு. மிதிவண்டி நிறுவனத்திற்கு பள்ளிகளில் இடமளிக்கப்பட்ட விவரத்தினை இத்துடன் இணைத்தனுப்பப்படும் படிவம்-II இல் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
• பள்ளிகளின் இட ஆக்கிரமிப்பை குறைப்பதற்காக மிதிவண்டிகளின் பாகங்கள் பள்ளிகளில் இறக்கப்பட்ட 60 நாட்களுக்குள் அவற்றை முழுமையாக பொருத்தி (Fitting) பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கப்பட வேண்டும் என்பதனை உறுதி செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மிதிவண்டிகள் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டு (Fitting) மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ள மிதிவண்டிகள் மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பாக வைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளிக்கும் மிதிவண்டிகள் பெறும் மாணவ / மாணவிகளின் அவசர பயன்பாட்டிற்காக தலா இரண்டு Air Pump, Cycle Lever, Spanner Gumimi, என் Maintenance/tool kit னை தங்கள் மாவட்டத்திற்கு கொள்முதல் ஆணை பெற்ற நிறுவனம் வழங்கியதனையும், மேலும் பள்ளிக்கு விநியோகிக்கப்படும் அனைத்து மிதிவண்டிகளின் பாகங்கள் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளதா ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர்களும் உறுதி செய்து Delivery Challan இல் மிதிவண்டிகள் பெறப்பட்ட நாள் விவரத்தை குறிப்பிட்டு ஒப்புகை அளிக்க வேண்டும்.
அவ்வாறு அளிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளின் Delivery Challan களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் / மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
• பள்ளிகளுக்கு தாமதமாக (90 நாட்களுக்கு பிறகு) விநியோகிக்கப்படும் மிதிவண்டிகளுக்கான தொகைக்கு வாரம் ஒன்றிற்கு 0.5% அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் அபராதம் 10% வரை விதிக்கலாம். பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மிதிவண்டிகளின் உதிரிபாகங்களை பொருத்தி (Fitting) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
2025-26 ஆம் ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கியபின் மாவட்டங்களில் மாணவ மாணவியர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான மிதிவண்டிகளை ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
மேலும் மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கும்போது மிதிவண்டிகள் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு செய்து டயர்களில் காற்று நிரப்பி வழங்க வேண்டும்.
• மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் செயல்பாட்டில் குறைபாடு இருந்தால், மிதிவண்டி நிறுவனங்கள் அதை சரிசெய்ய வேண்டும். அதற்காக பள்ளிகளில், போதுமான பணியாளர்கள் (Fitters) இருக்க வேண்டும். அவர்களின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் சம்பந்தப்பட்ட DBCMWO8/CEOs/ HM$ க்கு வழங்கப்பட்டதனை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் குறைபாடுள்ளவை என கண்டறியப்பட்டால், அவை திருப்பி அனுப்பப்பட்டு 10 நாட்களுக்குள் மிதிவண்டி நிறுவனங்களின் செலவில் மாற்றப்பட வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை கவனத்தில் கொண்டு இத்திட்டத்தினை நன்முறையில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேற்படி வழிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிளர் நல அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இனங்கள் குறித்து இணைப்பு 1ல் அளிக்கப்பட்டுள்ளது
எனவே. 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள்/ பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ மாணவியர்களுக்கும் (SC/ST/MBC&DNC/BC/OC) மிதிவண்டிகள் வழங்கும் பொருட்டு குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும், இணைப்பு. II இல் உள்ள படிவத்தில் குறிப்பிட்டப்படி பள்ளி வாரியாக தேவைப்பட்டியல் (முன்னிருப்பினை கழித்து நிகரத்தேவை) பெற்று அதனைத் தொகுத்து உடனடியாக இவ்வியக்க மின்னஞ்சல் Dseesection@gmail.com முகவரிக்கு 26.09.2025 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறும் கையெழுத்திட்ட பிரதியை இவ்வியக்ககத்திற்கு தபாலில் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு- 1.தலைமையாசிரியர்கள் வழிகாட்டு அறிவுரைகள் மிதிவண்டி வழங்குதல் சார்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்
1. இத்திட்டத்தில் மிதிவண்டிகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே விநியோகம் செய்யப்பட (supply) வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உதவுவதற்காக பொறுப்பு அலுவலராக ஒருவரை பள்ளித் தலைமையாசிரியர் நியமிக்க நியமிக்க வேண்டும். அவர் தங்கள் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட — மிதிவண்டி நிறுவன பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளிக்கான மிதிவண்டிகளை பெறுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தங்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாட்களில் விநியோகம் செய்யப்படும் (supply)மிதிவண்டிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர் பெற்றுக் கொள்ள இயலாத சூழ்நிலையில் உரிய அலுவலரை நியமித்து இதன் விபரத்தை மிதிவண்டி நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த விபரம் கண்டிப்பாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கும் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
2. மிதிவண்டிகளை பள்ளியில் வைக்க போதிய இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மிதிவண்டிகள் பாதுகாப்பாக வைக்க போதிய தார்பாய் கொண்டு மூடி வைக்க வேண்டும். மேலும், எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. பள்ளியில் இடவசதி இல்லையென்றாலும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து மாணவ/மாணவிகளுக்கு வழங்கும் வரை பாதுகாப்பான இடத்தில் மிதிவண்டிகளை வைக்க வேண்டும்.
4. பெறப்படும் மிதிவண்டிகள் குறித்து இருப்பு மற்றும் வழங்கல் பதிவேட்டில் முறையான குறிப்புகள் செய்து ஒப்புதல் படிவங்களில் உரிய இருப்புச் சான்றிட்டு அதில் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று மிதிவண்டிகளை மாணவ/மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒப்புதல் படிவங்களில் கையொப்பம் இடும் பொழுது தேதிகளில் திருத்தம் ஏற்படின் அவற்றை எழுத்தில் எழுதவும். Delivery Challan இல் பள்ளி தலைமையாசிரியர்கள் கண்டிப்பாக தேதி குறிப்பிட்டு கையொப்பமிடப்பட வேண்டும்.
5. மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தில் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் இத்திட்டத்தின் பொறுப்பாசிரியர்கள் மிதிவண்டிகளின் பிரதான மற்றும் உதிரி பாகங்கள் தங்கள் பள்ளிகளுக்கு வந்ததும் அதன் விபரத்தையும் பொருத்தும் (Fitting) பணியின் முன்னேற்றத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட தொடர்பு அலுவலர்கள் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
6. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிதிவண்டிகள் மாணாக்கர்களுக்கு நல்ல முறையில் (Fitting) செய்து வழங்கப்படுவதை அப்பள்ளியிலுள்ள ஆசிரியர்களையும் குறிப்பாக உடற்கல்வி ஆசிரியரையும் ஈடுபடுத்தி உறுதி செய்ய வேண்டும்.
7. மிதிவண்டிகளின் உதிரி பாகங்கள் பள்ளிகளில் இறக்கப்பட்டு 60 நாட்களுக்குள் அவற்றை முழுமையாக Fitting Golgi (Fully Assembled) பள்ளி தலைமையாசிரியர்களிடம் மிதிவண்டிகள் நிறுவனம் வழங்கிட வேண்டும். எனவே இதனை கண்காணித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
8. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா இரண்டு Air Pump, Cycle Lever, Spanner Gumini, Maintenance / tool kit னை வழங்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலையும் அளிக்க வேண்டும்.
9. அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் மிதிவண்டிகளை மாணாக்கர்களுக்கு வழங்கும் விழா நாளுக்கு முன்பே தங்கள் மாவட்ட மிதிவண்டி பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டு மிதிவண்டி Fitter மூலம் அனைத்து மிதிவண்டிகளின் பாகங்கள் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
10. மிதிவண்டிகள் மாணாக்கர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் (Blocks) குறைந்தது மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் (Service Camp) நிறுவனத்தினால் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
11. இது தவிர விநியோகம் செய்யப்படும் (Supply) மிதிவண்டியுடன் முழு மிதிவண்டிகளுக்கான மூன்று வருட உத்தரவாத அட்டை (Three Years) மற்றும் முக்கிய பாகங்களுக்கான (Frame Fork) போன்றவைகளுக்கு (Five Years) ஐந்து வருட உத்தரவாத அட்டை வழங்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
DSE - Bicycle Distribution Proceedings - Download here

No comments:
Post a Comment