சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் எப்போதுதான் நிரப்பப்படும்? - When will the posts of special teachers be filled?
ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் உள்ள டக்கிய கல்வி' பிரிவில், காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன் றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுமார் 3,500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, சிறப்பு கல்வியியல் பட்டம் மற் றும் பட்டயம் பெற்ற பயிற்றுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மாவட் டத்தில் உள்ள 13 வட் டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் சராச ரியாக 5 முதல் பயிற் றுநர்கள் வீதம் இருக்க வேண்டும். ஆனால், 64 சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் (பிசியோ தொபிஸ்ட்) பணியில் உன் எனர், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் 28 சிறப்பு ஆசிரியர் பயிற்று நர் பணியிடங்கள் காலி யாக உள்ளன.
சிறப்பு பயிற்றுநர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற் றுத்தருவது, தேவையான உதவி உபகரணங்களை பெற பரிந்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு களப் பணிகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.
பற்றாக்குறை கார ணமாக இப்பணிகளை முழுமையாக செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
பயிற்றுநர் சிறப்பு கள் கூறுகையில், தற் போதுள்ள குறைவான எண்ணிக்கையை வைத் துக்கொண்டு. 16 வட்டா சங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பகல் நேரப் பரா மரிப்பு மையங்களுக்குச் சுழற்சி முறையில் சென்று வருகிறோம். வாரத்திற்கு இரு முறை பள்ளிகளுக்கு செல்கிறோம். காலியாக உள்ள இடங்களை நிரப் பினால் மட்டுமே, ஒவ் வொரு மாணவர் மீதும் கவனம் தனித்தனிக் செலுத்த முடியும், என்றனர்.

No comments:
Post a Comment