மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் - TNTeachersTrends

Latest

Tuesday, December 2, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்



Instructions from the Director of Government Examinations regarding the concessions provided to differently abled students for this year - இந்த ஆண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6- மார்ச் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு / மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) பொதுத் தேர்வு மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல் குறித்து

பார்வை:

அரசாணை (நிலை) எண்.62 பள்ளிக் கல்வி (அதே)த் துறை. 25.03.2022

இயக்குநர்களும், தங்களது அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், மார்ச் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு, மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) பொதுத் தேர்வு எழுதவுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குத் தேர்வெழுத சலுகை வழங்குதல் தொடர்பான கீழ்க்காணும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கானஅறிவுரைகள்:

1 பார்வையில் கண்டுள்ள அரசாணையில், அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் மேல்நிலை பொதுத் தேர்வுகளை எழுதும் தேர்வர்களுள், மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் நலன் கருதி, பிற மாணவர்களுக்கு சமமாக அவர்களும் எவ்வித குறைகளுமின்றி தேர்வெழுதி மதிப்பெண்கள் ஈட்டுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகளை தேர்வு நேரங்களில் வழங்க அரசு அனுமதித்துள்ளது. (அரசாணைகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் (www.dge.tn.gov.in) காணலாம்)

2. மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி, பொதுத் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து தங்கள் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் எடுத்துரைக்க வேண்டும். அரசாணைகளின்படி உடல் குறைபாட்டின் அடிப்படையில் தேர்வெழுத சலுகைகள் கோரும் மாணவரிடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை (படிவம்-1)வழங்கி, மாணவரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் மாற்றும் திறனாலிக்கான தேசிய அளவில் வழங்கப்படும் அட்டையின் நகல் அல்லது மாநில மாற்றுத்திறனாணின் நில ஆணையம் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையா அட்டையின் நகலினை பள்ளித் தலைமையாசிரியர் பெற்றுக்கொண்டால் போதுமானது மருத்துவக் குழுவின் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்டவாறு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் இல்லாத மாணாக்கர்களிடமிருந்து மட்டும் அரசு சார்ந்த மருத்துவக் குழுவின் (Government medical bour பரிந்துரைக் கடிதத்தினை பள்ளித் தலைமையாசிரியர் பெற்றுக் கொள்ளவேண்டும். மருத்துவசான்றிதழில் நோயின் நன்னம மற்றும் மாணவருக்கு வழங்க வேண்டிய பற்றிய விவரம் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க ண்டும். மேலும், மருத்துவச்சான்றுகள் உரிய காலவரையறைக்குள் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டவாறு மாற்றுத் திறனாளி தேர்வர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பபடிவங்கள் மற்றும் மருத்துவச் சான்றுகளை, பள்ளித் தலைமையாசிரியர்கள் 01122025 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவ்வாறு தாமதமாக விண்ணப்பங்கள் பெறப்படின் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பதிவிறக்கம் செய்ய 👇👇👇 கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்

CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் PDF

No comments:

Post a Comment