PM YASASVI - கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் கால அவகாசம் 15.12.2025 வரை நீட்டிப்பு! - - TNTeachersTrends

Latest

Tuesday, December 2, 2025

PM YASASVI - கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் கால அவகாசம் 15.12.2025 வரை நீட்டிப்பு! -



PM YASASVI - 15.12.2025 வரை நீட்டிப்பு!

CLICK HERE TO DOWNLOAD PM YASASVI Date Extended Proceedings - PDF

மின்னஞ்சல் மூலமாக

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம்

அனுப்புநர்

ஆணையர்,

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

பெறுநர்

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சீர்மரபினர் நலத்துறை,

சேப்பாக்கம், சென்னை-5. அலுவலகர்கள்.

ந.க.எண். டி1/9088/2025, நாள்: 02.12.2025 அய்யா / அம்மையீர்,

பொருள்: PM YASASVI Top Class School Education -

2025-26 - கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது மாதிரி பத்திரிக்கைச் செய்தி வெளியிடக் கோருதல் - தொடர்பாக.

பார்வை: 1. Guidelines for Central Sector Scheme of Top Class Education

in Schools for OBC, EBC and DNT students.

2. ஒன்றிய அரசின் கடித எண்:BC-12013/32/2024-BC-I (e-87823), iт:15.09.2025

3. ஒன்றிய அரசின் அலுவலக குறிப்பாணை எண்: D-12011/01/2025-DBT.

4. NSP இணையதளத்தின்படி, மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

5. இவ்வலுவலக கடித எண். ந.க.எண்.டி1/9088/2025, Gт.17.09.25, 30.09.25, 17.10.2025,31.10.2025. PM YASASVI Top Class School Education திட்டமானது மத்திய அரசினால் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் OBC, EBC மற்றும் DNT இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பெற்றோர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேற்படி இத்திட்டத்தில் மாணவ/மாணவியர்கள் (https://scholarships.gov.in) என்ற NSP இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

2. பார்வை 2ல் காணும் கடிதத்தில் 2025-26LD ஆண்டிற்கு இத்திட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பள்ளிகளின் விவரம் வரப்பெற்றுள்ளது. மேலும், பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இத்துறை இணையதளம் மூலம் காணாலாம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

> 3. பார்வை 3ல் NSP இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு, மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் 15.12.2025 சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி குறைபாடுள்ள விண்ணப்பங்கள் மற்றும் பள்ளி அளவில் 31.12.2025 விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான கடைசி தேதி மேற்படி, இத்திட்டத்தில் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்க 15.12.25 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதை மாணவ/மாணவியர்கள் அறியும் வண்ணம் பத்திரிக்கைச் செய்தியினை உடன் வெளியிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மேற்படி நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தைத் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பள்ளி அளவில் தற்போது வரை Renewal-13, Fresh-75 ஆக மொத்தம்-88 விண்ணப்பங்கள் நிலுவையாக உள்ளது(மாவட்ட வாரியான விவரம் இணைக்கப்பட்டுள்ளது). அதனை உடனே சரிபார்த்து approve செய்வதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளை அறிவுறுத்தமாறும் மற்றும் குறைபாடுள்ள(Defective) விண்ணப்பங்கள் ஆக மொத்தம்-252 விண்ணப்பங்களை தருமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளை Renewal-25, சரிபார்த்து Fresh-227 அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

மேலும், ஒரு மாவட்டத்தில் விண்ணப்பங்கள் நிலுவையில் காட்டும் பள்ளி, அந்த மாவட்ட பி.வ (ம) சீம அலுவலக Login-ல் வராத பட்சத்தில் அதன் விவரத்தினை இவ்வியக்கத்திற்கு தெரிவித்து அதனை சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு மாற்றம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இணைப்பு: மாதிரி பத்திரிக்கைச் செய்தி நகல்:

சுபதி

ஓம்/-வ.கலைஅரசி.,

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் 2.12.2020

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையருக்காக 1. அரசு முதன்மைச் செயலாளர்,

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை - 09.

2. ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை - 05

3. இயக்குநர் பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6. 4. இயக்குநர் மேட்ரிக்குலேசன் பள்ளி இயக்ககம், சென்னை-6

மாதிரி பத்திரிக்கைச் செய்தி

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை

உதவித்தொகை பெற தேசிய பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoalrship Portal) விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்டோர் இதர (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியிலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம்

இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 15.12.2025.

குறைப்பாடுள்ள விண்ணப்பங்களை சரிபார்க்க மற்றும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 31.12.2025. புதுப்பித்தல்:

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National Schoalrship Portal) Renewal Application 6TGOT M இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதியது:

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் (https://scholarships.gov.in) தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

மேற்படி, OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணாலாம்

கல்வி நிறுவனங்கள் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பத்துள்ள விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பரிசிலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட தேசிய கல்வி உதவித்தொகை(NSP) (https://scholarships.gov.in) இணையதளத்தில் அறியலாம்.

ஓம்/-வ.கலைஅரசி., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் 2.12.2026

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையருக்காக

CLICK HERE TO DOWNLOAD PM YASASVI Date Extended Proceedings - PDF

No comments:

Post a Comment