கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள Sanchar Saathi செயலி - Sanchar Saathi app has sparked controversy
Sanchar Saathi செயலியை எல்லா போன்களிலும் கட்டாயப்படுத்திய மத்திய அரசு உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
பிரியங்கா காந்தி உட்பட பல எம்.பிக்கள் -"இது நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கு தள்ளும் முயற்சி" என கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அரசின் விளக்கம்: இந்த செயலி சைபர் மோசடிகளைத் தடுக்கவும், திருடப்பட்ட போன்களை மீட்டெடுக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.
Sanchar Saathi மூலம் 'Sakshu' என்ற வசதியில் ஃபிஷிங், ஸ்பேம், மோசடி லிங்குகள் உள்ளிட்டவற்றை புகாரளிக்கலாம். நவம்பர் 28 முதல் 90 நாட்களில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து போன்களிலும் செயலி முன்பே நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது
ஏற்கனவே உள்ள போன்களில் மென்பொருள் அப்டேட்டாக செயலி அனுப்பப்படும்; செயலியை முடக்கவோ அகற்றவோ முடியாது என்று உத்தரவு கூறுகிறது.
கே.சி. வேணுகோபால் - "பிக் பிரதர் கண்காணிப்பு... இது அரசியலமைப்புக்கு விரோதம்" என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கையில், அரசு தொலைபேசி தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று குற்றம் சாட்டுகின்றன.
Sanchar Saathi இதுவரை 42 லட்சம் திருடப்பட்ட போன்களைத் தடுத்து, 7 லட்சம் போன்களை மீட்டெடுத்ததாக அரசு தரவு கூறுகிறது.
இந்நடைமுறை தனிநபரின் ஒவ்வொரு இயக்கத்தையும், தொடர்புகளையும், முடிவையும் கண்காணிக்க ஒரு வழிமுறையாகும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்
அது தனிநபரின் முடிவு
SANCHAR SAATHI செயலியை எல்லா மொபைல் போன்களிலும் கட்டாயப்படுத்தி மத்திய அரசின் உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த செயலியை பயன்படுத்துவது முழுவதும் தனிநபரின் விருப்பம் என்றும், வேண்டுமானால் அதை நீக்கவும் முடியும் என்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment