இன்று ( 03.12.2025 ) மாற்று திறனாளிகள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் - TNTeachersTrends

Latest

Tuesday, December 2, 2025

இன்று ( 03.12.2025 ) மாற்று திறனாளிகள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம்

இன்று ( 03.12.2025 ) மாற்று திறனாளிகள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம்



டிசம்பர்- 3ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் ஆணை - Order granting special contingency leave to celebrate the International Day of Persons with Disabilities on December 3rd

சுருக்கம்

சமூக நலம் பணிபுரியும் ஊனமுற்றோர் நலம் அரசு / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் டிசம்பர்- 3ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் ஆணை -வெளியிடப்படுகிறது சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட(சந-4)த் துறை அரசாணை (நிலை) எண் : 72

26.5.2009 திருவள்ளுவர் ஆண்டு 2040 வைகாசி திங்கள் 12ம் நாள் படிக்க:

முதன்மைச் செயலாளர்/ ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரின் கடித. .10506/ 2.1.2-2/2008, नं 6.11.2008

ஆணை:

மேலே ஒன்றில் படிக்கப்பட்ட கடிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் அரசு / அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊனமுற்றவர்களுக்கு சர்வதேச ஊனமுற்றோர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு ஊனமுற்றோர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர் திரு கோபிநாத் அவர்கள் கோரிக்கை விடுத்தார் என்றும் அக்கோரிக்கையை ஏற்று டிசம்பர் 3ம் நாளன்று அரசு / அரசு உதவிப்பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊனமுற்ற ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அனுமதி வழங்குமாறு முதன்மைச் செயலாளர் / ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.

2. முதன்மைச் செயலாளர் / ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினமாக கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் அரசு / அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் ஊனமுற்றோர் தினத்தை கொண்டாடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து அரசு ஆணையிடுகிறது.

3. தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நூல்களுக்கு தக்க திருத்தம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையால் பின்னர் வெளியிடப்படும்.

4. இவ்வாணை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அ.சா.எண் 4109/செயலர்/2009, நாள் 30.1.2009 இசைவுடன் வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

நா.ச. பழனியப்பன்,

அரசு முதன்மைச் செயலாளர்

பெறுநர்

முதன்மைச் செயலாளர் /ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சென்னை-6.

அனைத்து துறைச் செயலாளர்கள், தலைமைச் செயலகம், சென்னை -9

அனைத்து துறைத் தலைவர்கள்

அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள்/

அனைத்து மாவட்ட நீதிபதிகள்

பதிவாளர், உயர் நீதி மன்றம், சென்னை-104

செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை -2

அனைத்து அலுவல்சாரா உறுப்பினர்கள்,

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல வாரியம், (ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் வழியாக)

நகல்

முதலமைச்சரின் செயலாளர், சென்னை -9

முதுநிலை நேர்முக உதவியாளர், அமைச்சர் (மின்சாரம்)

சென்னை -9

முதுநிலை நேர்முக உதவியாளர், அமைச்சர் (சமூக நலம்)

சென்னை -9

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை,

சென்னை -9

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (பயிற்சி) துறை,

சென்னை -9

இ.கோ./உதிரி நகல்

//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//

பிரிவு அலுவலர்

No comments:

Post a Comment