ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தெரியல! - DEO-க்கள் பதவிக்கான தேர்வு முடிவு! - TNTeachersTrends

Latest

Wednesday, November 26, 2025

ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தெரியல! - DEO-க்கள் பதவிக்கான தேர்வு முடிவு!



DEO-க்கள் பதவிக்கான தேர்வு முடிவு

ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தெரியல டி.இ.ஓ.,க்கள் பதவிக்கான தேர்வு முடிவு The results of the DEO exam - still unknown even after more than a year!

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேரடி டி.இ.ஓ.,க்கள் பதவிக்கு எழுத்து தேர்வு முடிந்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை முடிவுகள் வெளியிடவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

கல்வித்துறையில் டி.இ.ஓ., பணியிடங்களுக்கு பதவி உயர்வு, போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நேரடி நியமனத்திற்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. கடைசியாக 2024, ஜூலை 12 ல் முதல்நிலை தேர்வு நடந்தது.

'குரூப் 1 பி' (ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர்) 'குரூப் 1 சி' (மாவட்ட கல்வி அலுவலர்கள்) பணியிடங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினர். மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான தேர்வு குறித்த முடிவை டி.என்.பி.எஸ்.சி., இதுவரை வெளியிடவில்லை. இத்தேர்வை தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் பெரும்பாலும் எழுதியுள்ளனர். அதன் முடிவு வெளியிடாததால் பிரதான தேர்வுக்கு தயாராவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:

'குரூப் 1 பி', 'குரூப் 1 சி' என இரண்டு பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தான் தேர்வு நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனருக்கான தேர்வுக்கு, முடிவுகள் வெளியிட்டு நேர்காணல் நடந்து, பதவி நியமனமே நடந்துவிட்டது. ஆனால் 16 மாதங்களாகியும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) பதவிக்கான 'குரூப் 1 சி' தேர்வு எழுதியவர்களுக்கு இதுவரை முதல்நிலை தேர்வுக்கான முடிவே வெளியிடாதது குழப்பமாக உள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., வெப்சைட்டிலும் 'அப்டேட்' விபரம் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரித்தால் 'தேர்வு முடிவு வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என பல மாதங்களாக பதில் கூறி வருகின்றனர். இனியாவது விரைவில் முடிவு வெளியிட டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment