அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - TNTeachersTrends

Latest

Wednesday, November 26, 2025

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு



அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை ஒளிபரப்ப உத்தர விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும்.

இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்தப் பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும்.

படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பொறுப்பு ஆசிரியர் பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும், படத்தின் அடிப்படை பின்னணியையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது



Director of School Education orders to ensure that the tools and equipment required for screening children's films are in working condition - சிறார் திரைப்படம் திரையிடத் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்காடுபள்ளிக்கல்லி இயக்மரில் -000.00 11.2020 ந.க.எண்.034700/mb / இ1/2025, நாள்.

பொருள்: பள்ளிக்கல்வி கல்விசாரா மன்றுச் செயல்பாடுகள் அரசுப் பள்ளிகளில் 2025-20 சிறார் திரைப்படம் திரையிடுதல் - தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்தல் சார்பு

பார்வை:

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.களண்.034765 /mb/1/2025, 14/10/2025.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய முன்னெடுப்பாக, அரசு பள்ளிகளில் மாதத்தோனும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மாணவர்களுக்கு சமூகநீதி, சமத்துவம், அறிவியல் பார்வையை ஏற்படுத்தவும். திரைப்படங்களை பகுத்தறிவுடன் பார்ப்பதற்கான திறன், நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற பண்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடனும், திரைப்பட கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு திரைத்துறையின் முக்கிய கூறுகளை அறிமுகப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 5 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் மாதந்தோறும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. பள்ளியில் மாணவர்களுக்கு திரைப்பட அனுபவங்கள் சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்திட, திரையிடல்களுக்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் (ஸ்மார்ட் போர்ட், வெள்ளைத் திரை புரொஜெக்டர், ஒலிப்பெருக்கி, மைக், pen-drive, etc, ukளியில் செயல்படும் நிலையில் இருப்பதையும், பழுதாகி இருப்பின் உடனடியாக பழுது நீக்கி அனைத்து உபகரணங்கள் மற்றும் கருவிகள் செயல்படும் நிலையில் உள்ளதை 26/11/2025 ஆம் தேதிக்குள் உறுதி செய்யுமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

பெறுநர்

நகல்:

முதன்மைக் கல்வி அலுவலர்கள்,

முதன்மைக் கல்வி அலுவலகம்,

அனைத்து மாவட்டங்கள்.

1. அரசு முதன்மைச்செயலர், பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009

2. உறுப்பினர் செயலர், மாதிரிப் பள்ளிகள், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், சென்னை 600006

3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,சென்னை-600 006

4. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநரகம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், சென்னை-600006

No comments:

Post a Comment