Teachers' Association writes to PM Modi on exemption from TET exam - 'டெட்' தேர்ச்சி விலக்கு பிரதமர் மோடிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்
'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆசிரியர்கள் சங்கம் பிரதமருக்கு கடதம் அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2011ம் ஆண்டு, நவ., 15க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதி தேர்ச்சி அவசியம் என, கடந்த செப்., 1ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முழுமையான விலக்கு அளித்திருந்த போதிலும், இந்த தீர்ப்பு, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது .
இதனால், நாடு முழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை உருவாக்கும். எனவே, 'டெட்' தேர்ச்சி தொடர்பான, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி கட்டாயத்தில் இருந்து, நிரந்தரமாக விலக்கு பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment