DSE - Pay Anamoly Allocation - மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - TNTeachersTrends

Latest

Wednesday, November 12, 2025

DSE - Pay Anamoly Allocation - மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



பள்ளிக் கல்வியில் ஊதிய முரண்பாடு களைய பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர் களின் ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய் தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள இணை இயக்குநர் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற் றறிக்கை:

பள்ளிக் கல்வி துறையின் நிர்வாக அமைப் பானது அரசாணையின்படி மாற்றியமைக் சுப்பட்டு மாவட்ட நிலை கள அலுவலர்க ளுக்கான பணிப் பொறுப்புகள் வரையறுக் சுப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வி இயக் சுகத்தில் இணை இயக்குநர்கள், அலுவலர் களுக்கான பணிப் பொறுப்புகள் மாற்றி யமைக்கப்பட்டு ஆசிரியர்கள், ஆசிரியரல் லாத பணியாளர்களின் ஊதிய முரண்பாடு சார்ந்த கருத்துரு நிதிக் கட்டுப்பாடு அலு வலரின் நிர்வாகப் பொறுப்பில் செயல்பட ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஊதிய முரண்பாடு சரிசெய் தல் சார்ந்த பணியை பள்ளிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு பின்வருமாறு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் (சிஇஓ), மாவட்டக்கல்வி அலுவலர்கள் (டிஇஓ,சிஇ ஓ-க்களின் நேர்முக உதவியாளர்கள் (இடை நிலை), உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசி ரியர்கள், டிஇஓ-க்களின் நேர்முக அலுவலர் கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரி யரல்லாத அலுவலகப் பணியாளர்கள் ஆகி யோர் தங்களது ஊதிய முரண்பாடு கருத்து ருக்களை, சென்னை பள்ளிக் கல்வி இயக்க கத்தில் உள்ள இணை இயக்குநரிடம் (பணி யாளர் தொகுதி) சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோன்று சிஇஓ-க்களின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை), மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஆகியோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் உள்ள இணை இயக் குநரிடம் (மேல்நிலைக் கல்வி) சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இனி வருங்காலங்களில் ஊதிய முரண்பாடு சார்ந்த கோப்புகளை சார்ந்த இணை இயக்குநர்களுக்கு உரிய விதி களின்படி பரிசீலித்து அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.





மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - DSE - Pay Anamoly Allocation - Director of School Education orders appointment of officers to resolve pay discrepancy between seniors and juniors!

👇👇👇👇

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை

முன்னிலை - முனைவர். ச. கண்ணப்பன்

ந.க.எண்.053637/எல்/2025 நாள். 06.11.2025

பொருள் :

பள்ளிக் கல்வி முரண்பாடு களைதல் வரையறுத்தல் - 06 நிர்வாகசீரமைப்பு - பணிப்பொறுப்புகள் மூத்தோர் இளையோர் ஊதிய அலுவலர்கள் நியமித்தல் - ஆணை வழங்குதல் - சார்பு

நாள்.09.09.2022

பார்வை 1. அரசாணை 2. சென்னை - - பள்ளிக்கல்விபக(1(1)) துறை 06, பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். நாள்.26.06.2023. 34750/6τLD/2023,

3. சென்னை 06. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித - ந.க.எண்.053637/எல்/2025 நாள்.06.11.2025

பார்வையில் கண்டுள்ள அரசாணையின்படி, பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக அமைப்பானது, மாற்றியமைக்கப்பட்டு, மாவட்ட நிலை கள் அலுவலர்களுக்கான பணிப்பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பணிப்பொறுப்புகள் மாற்றியமைக்ககப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதிய முரண்பாடு சார்ந்த கருத்துருவினை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் நிர்வாக பொறுப்பில் செயல்பட பார்வை 2இல் காணும் செயல்முறைகளின்படி ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் பார்வை 3இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில் மேற்காண் ஊதிய முரண்பாடு சரிசெய்தல் சார்ந்த பணியினை பள்ளிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஊதிய முரண்பாடு கருத்துருக்கள் விவரம்

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் (இடைநிலை),

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர்கள்,

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலக பணியாளர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை),

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்

திய முரண்பாடு கருத்துருக்களை சமர்ப்பிக்கப்பட வேண்டிய அலுவலர்கள்

இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை - 06.

இணை இயக்குநர்

(மேல்நிலைக் கல்வி), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை – 06.

எனவே, மேற்காண் தெரிவித்துள்ளவாறு இனிவருங்காலங்களில் ஊதிய முரண்பாடு சார்ந்த கோப்புகளை சார்ந்த இணை இயக்குநர்களுக்கு உரிய விதிகளின்படி பரிசீலித்து அனுப்பிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD DSE - Pay Anamoly Allocation PDF

No comments:

Post a Comment