RTI மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கான தகவல்களை இனி Online மூலம் அனுப்பும் வசதி அறிமுகம் - DSE செயல்முறைகள்! - Introducing the facility to submit information for RTI queries online - DSE Processes!
· பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் பொருள்
பார்வை
பள்ளிக்கல்வி இயக்குநரகம்-சென்னை 06.
ந.க.எண். 055104/F/RTI/2025
பள்ளிக்கல்வித்துறை - நாள்-30.10.2025
அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகங்கள்(இடைநிலை) மற்றும் அனைத்து அரசு/அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் உதவிபெறும் பொதுத்தகவல் வழங்கும் அலுவலராகவும், மேல்முறையீட்டு அலுவலராகவும் பொறுப்பில் உள்ள நபர்களின் விவரங்கள் பெறப்பட்டது அதன் அடிப்படையில் தங்கள் மாவட்டத்திற்கான பொதுதகவல் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் User Id, Password வழங்கப்படுகிறது நடவடிக்கை எடுக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுதல் - சார்பு 1.அரசு கடிதம் Letter No. 144/GL/I|/2025-26. Dated - 05.08.2025
- தொடர் 2. உதவிஇயக்குநர் (சுற்றுச்சூழல்) பொதுத்தகவல் அலுவலர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ந.க.எண்.055104/F/RTI/2025 நாள்-25-08-2025 பள்ளிக்கல்வித்துறையில் ******* உள்ள அனைத்து மாவட்டங்களின் முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகங்கள்(இடைநிலை) மற்றும் அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் பொதுத்தகவல் வழங்கும் அலுவலராகவும், மேல்முறையீட்டு அலுவலராகவும் பொறுப்பில் உள்ள நபர்களின் விவரங்களை மாவட்ட முழுமைக்கும் Google Sheet மூலம் சேகரித்து EXCEL format-இல் தங்களிடமிருந்து பெறப்பட்டது. தற்போது தங்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து பொதுத்தகவல் அலுவலர் மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலர்களுக்கு தனித்தனியாக UserID, Password உருவாக்கப்பட்டு இத்துடன் இணைத்து தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. User ID-யை மாற்றம் செய்ய இயலாது, Password - யை மாற்றி பின்னர் Login செய்து பயன்படுத்த வேண்டும். இந்த விவரத்தினை அனைத்து சார்நிலை அலுவலகங்களுக்கும் தெரிவித்து உடனடியாக அனைவரும் உரியமுறையில் தஙகள் UserID ஐ பெற்றுக்கொண்டு Password-ஐ மாற்றி அமைத்து பயன்படுத்த நடவடிக்கை மேறகொள்ள தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பொதுத்தகவல் அலுவலரும் நாள்தோறும் https://rtionline.tn.gov.in/RTIMIS/NODAL/index.php மேற்கண்ட Link-ஐ இணையத்தில் OPEN செய்து பார்த்தால் வரப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் ஆகியவற்றினை பதிவிறக்கம் செய்து உடனுக்குடன் உரிய தகவலை இணையத்தின் வழியாகவே வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதற்கென தனியாக ஒரு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். பிரதி மாதம் 5-ஆம் தேதிக்குள் உயர் அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அதனைத் தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலர் பிரதி மாதம் 10-ஆம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். -- யை தங்கள் User ID யை மாற்றம் செய்ய இயலாது. Password மாவட்டத்திற்கு ஏதுவாக மாற்றிக்கொள்ளலாம் என்பது தெரிவிக்கப்படுகிறது. இதற்கென தனிஅலுவலர் மற்றும் தட்டச்சரை நியமித்து நாள்தோறும் கண்கானித்து உடனுக்குடன் உரிய காலகெடுவுக்குள் தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன் இணைக்கபட்டுள்ள PDF படிவத்தில் தங்கள் மாவட்டம் சார்ந்தவை இல்லாமலோ தொடக்கக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி மற்றும் அனைவருக்குக்கும் கல்விதிட்டம், மற்ற அலுவலகங்கள் சார்ந்த விவரங்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்திருப்பின் அதனை உடனடியாக கண்டறிந்து இதே படிவத்தில் பூர்த்தி செய்து பொதுத்தகவல் அலுவலரிடம் ஒப்பம் பெற்று இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் மாவட்டத்திற்கான Password-finca1@
இணைப்பு-1. தங்கள் மாவட்டத்திற்கான பெறுநர்
நகல்
பொதுத்தகவல் அலுவலர்கள் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்
மேல்முறையீட்டு அலுவலர்களின் User ID விவரம்
2. User Mannual அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்
1. அரசு துணை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை,
தலைமைசெயலகம், சென்னை-06 அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.
2. பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD DSE செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment