3 சிறப்பு 'டெட்' - தமிழகத்தில் 1.78 லட்சம் ஆசிரியர்களுக்கு. * கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து அரசு முடிவு
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டில் 3 முறை சிறப்பு ‘டெட்’ தேர்வு
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டு மூன்று சிறப்பு டெட்' தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல் வித் துறை முதன்மைச் செயலர் ப.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி யாற்ற அல்லது பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு சுட்டா யம். அதேவேளையில் ஓய்வுபெ றும் வயதை அடைய 5 ஆண்டு கள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். தேர்ச்சி அடையாவிட்டால், ஆசிரியர் பணியில் இருந்து வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம். அவர்களை ஓய்வு பெற்றவர் களாகக் கருதி ஓய்வூதியப் பலன் வழங்குவதை உறுதிசெய்ய வேண் டும் என உச்சநீதிமன்றம் கடந்த செப். 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
1.25 லட்சம் ஆசிரியர்கள்: தமிழகத்தில் 1.25 லட்சம் ஆசி ரியர்கள் டெட் தேர்ச்சி பெறா மல் பணியில் இருந்து வருவதால், இது குறித்து ஆலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தி னர் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகி யோர் ஆசிரியர் அமைப்புகளு டன் ஆலோசனை நடத்தினர். அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வுமனுவைத் தாக்கல் செய்வது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்துவது என இரு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப் பட்டன. இதற்கிடையே தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அனுமதி கோரி கடிதம்: இதனிடையே அரசுப் பள்ளி ஆசி ரியர்களுக்கு அடுத்த ஆண்டு 3 முறை சிறப்பு டெட்' தேர்வு நடத் தப்படும் என தமிழக அரசு அர சாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியி ருப்பதாவது:
பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்குநர்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உச்சநீ திமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிக அளவிலான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழலில் உள்ளனர். பதவி உயர்வு பெறுவதற்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் எனத் தீர்ப்பில் குறிப் பிடப்பட்டுள்ளதால், ஆசிரியர் களின் பதவி உயர்வு பாதிக்கப்ப டும்.
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு, மாநகராட்சி, தொடக்க,நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசி ரியர் தகுதித் தேர்வில் இதுநாள் வரை தேர்ச்சி பெறாதவர்கள். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வீதம் ஆண்டுக்கு 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவ தன் மூலம் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பயன்பெறு வர். அவர்களுக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு வார இறுதி நாள்களில் பணியிடைப் பயிற்சி வழங்கலாம்.
எனவே, இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாகக் கருதி சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆணையிட வேண்டும் எனக் கூறி யுள்ளனர்.
ஜனவரி, ஜூலை. டிசம்ப ரில்...: இந்த கருத்துருக்களை பரி சீலனை செய்து அவற்றை ஏற்று தற்போது பணிபுரிந்துவரும் ஆசி ரியர்களுக்கு மட்டும் முறைப்ப டியான ஆசிரியர் தகுதித் தேர்வு களுடன் 2026-ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகு தித் தேர்வுகளை நடத்தவும். இது தொடர்பாக உரிய அறிவிக்கை களை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆணையி டப்படுகிறது.
மேலும், 2026-ஆம் ஆண் டில் நடைபெறும் ஆசிரியர் தகு தித் தேர்வு முடிவுகளின் ஆய் வுக்குப் பிறகு மீதமுள்ள தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027-ஆம் ஆண்டில் தேவைக் கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரி யத் தலைவருக்கு அனுமதி அளிக் கப்படுகிறது என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
தேர்வுக்குப் பயிற்சி வழங்க.... இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள மற்றொரு அரசாணை யில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர் வெழுதவுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் இணைய வழியில் மாவட்ட ஆசிரியர் மற் றும் பயிற்சி நிறுவனத்தின் அனு பவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment