ஜன. 24, 25 தேதிகளில் சிறப்பு "டெட்' தேர்வு: டிஆர்பி அறிவிப்பு - TNTeachersTrends

Latest

Tuesday, October 14, 2025

ஜன. 24, 25 தேதிகளில் சிறப்பு "டெட்' தேர்வு: டிஆர்பி அறிவிப்பு

ஜன. 24, 25 தேதிகளில் சிறப்பு "டெட்' தேர்வு: டிஆர்பி அறிவிப்பு

தமிழகத்தில் பணியில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உச்சநீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் தமிழக பள்ளிகளில் தற்போது பணியாற்றிவரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படி ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் 2026-ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த கடந்த திங்கள்கிழமை (அக்.13) ஆணையிடப்பட்டது.

இதன்படி, ஜனவரி மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை உத்தேசமாக அடுத்த ஆண்டு ஜன. 24-ஆம் தேதி தாள்-1 மற்றும் 25-ஆம் தேதி தாள்-2 நடத்தவும், இதற்கான அறிவிக்கையை அடுத்த மாதம் (நவம்பர்) வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்புத் தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

STET - Special Teacher Eligibility Test Date - Teachers Selection Board Notification - STET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு.

வரும் ஜன . 24 இல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ; ஜன 25இல் 2 ஆம் தாள் நடத்த திட்டம் : தமிழ்நாடு அரசு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் : தமிழ்நாடு அரசு 2026 ஜூலை மற்றும் டிசம்பரில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்



ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனு (SLP) எண். 1385/2025இல் 01.09.2025 அன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பாணை அடிப்படையில் தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 231, பள்ளிக்கல்வித் (ஆ.தே.வா) துறை, நாள்.13.10.2025இல் தற்போது தமிழ்நாடு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி-2026, ஜீலை-2026 நடத்த மற்றும் டிசம்பர்-2026 மாதங்களில் ஆகிய ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாணைக்கிணங்க, ஜனவரி-2026ஆம் மாதத்தில் சிறப்புத் தகுதித் தேர்வு உத்தேசமாக 24.01.2026 தாள்-I மற்றும் 25.01.2026 தாள்-II நடத்துவதற்கும், இதற்கான அறிவிக்கையை நவம்பர்-2025 மாத கடைசி வாரத்தில் வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜீலை-2026 மற்றும் டிசம்பர்-2026 ஆகிய மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்புத் தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்.

நாள் : 14.10.2025

இடம்: சென்னை-06

No comments:

Post a Comment