மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி - TNTeachersTrends

Latest

Wednesday, October 15, 2025

மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி



மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி - Government primary school closed due to lack of student enrolment

45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துவக்கப்பள்ளி மாண வர் இல்லாமல் முடிக் கிடக்கிறது.

75 அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலை அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் முதல் வடவள்ளி ஊராட்சி யில் உள்ள முகாசி செம்சம்பட்டி துவக்க பள்ளி ஒரு மாணவர் கூட வராததால் கடந்த 15 மாதங்களாக மூடி கிடக்கிறது.

இது குறித்து அந்த கிராம மக்கள் கூறிய தாவது: இங்கிருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ள தாத்தம் பாளை யத்தில் துவக்க பள்ளி உள்ளது. மேற்கே அட் டவணை செம்சம்பட்டி யிலும் பள்ளி உள்ளது. வடக்கே பொகலூரில் நடுநிலைப்பள்ளி உள் ளது. இங்கு பெரும் பாலான விவசாயிகள் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்ப ஆர்வம்காட்டு கின்றனர். தொழிலாளர் கள் உள்ளிட்ட சிலரது குழந்தைகள் மட்டுமே அரசு பள்ளிக்கு செல் கின்றன.

இந்தப் பள்ளியில் படித்து வந்த இரண்டு குழந்தைகளின் வீடு கள் தாத்தம்பாளையத் மாணவர் சேர்க்கை இல்லாததால் அன்னூர் அருகே அரசு துவக்கப்பள்ளி மூடப்பட்டுள்ளது.

திற்கும் முகாசி செம்சம் பட்டிக்கும் இடையில் இருந்ததால் தாத்தம் பாளையம் பள்ளிக்கு சென்று விட்டனர்.

மேலும் தற்போது ஐந்து முதல் பத்து வயதில் வரையிலான குழந்தைகளின் எண் ணிக்கையும் இந்த கிரா மத்தில் குறைவாகவே உள்ளது.

கல்வித்துறை முயற்சி செய்தால் இங்கிருந்து மெட்ரிக் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப் பும் பெற்றோரை சமா தானப்படுத்தி அந்த மாணவர்களை அரசு துவக்க பள்ளிக்கு வர வைக்கலாம்.

மேலும் இந்த கிரா மத்தில் இருந்து அரு கில் உள்ள கிராமத்திற்கு சென்று படித்து வரும் இரண்டு குழந்தைகளை இந்த கிராமத்திலேயே படிக்கும்படி செய்தா லும் இந்தப் பள்ளி மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.

கிராம மக்கள் கடும் முயற்சி செய்து இந்த கிராமத்திற்கு பள்ளி துவங்க பெற்று வந்தனர். ஆனால் தற்போது 15 மாதங்களாக பள்ளி மூடி கிடக்கிறது.

இவ்வாறு தெரிவித்தனர். மக்கள் இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகை யில், 'முகாசி செம்சம் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நிரந்தர மாக மூடப்படவில்லை, எப்போது ஒரு மாண வர் வந்தாலும் உடனே பள்ளி திறக்கப்பட்டு மீண்டும் செயல்படும். என்றனர்

No comments:

Post a Comment