களப்பணியில் உள்ள ஆசிரியர்கள் 'பகீர்' - வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் குளறுபடி - TNTeachersTrends

Latest

Tuesday, December 2, 2025

களப்பணியில் உள்ள ஆசிரியர்கள் 'பகீர்' - வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் குளறுபடி



களப்பணியில் உள்ள ஆசிரியர்கள் 'பகீர்' - வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் குளறுபடி..

கோவையில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், (எஸ்.ஐ.ஆர்.,) குளறுபடிகள் உள்ளதாக வும், கலெக்டர் உடனடி யாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள தாகவும், களப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் எஸ்.ஐ ஆர்., பணி, கடந்த 4ம் தேதி முதல் நடந்து வரு கிறது. வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்கு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த இடைநிலை ஆசிரி யர்களில், 50 சதவீதம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆசிரியருக் கும் தலா 1,500 வாக்கா ளர்கள் ஒதுக்கப்பட்டுள்ள னர். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை வீடு வீடாக சென்று, படி வங்களை விநியோகித்து, விவரங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

களத்தில் பெறப்படும் விவரங்களை, செயலியில் பதிவேற்றம் செய்வதில் குளறுபடிகள் நடப்பதாக, ஆசிரியர்கள் புகார் தெரி விக்கின்றனர். குறிப்பாக, கல்லூரி மாணவர்களைக் கொண்டு மேற்கொள்ளப் படும். தரவு உள்ளீட்டுப் பணிகளில் (டேட்டா என்ட்ரி) துல்லியத்தன்மை இல்லை என்கின்றனர்.

களப்பணியில் உள்ள ஆசி ரியர்கள் சிலர் கூறியதாவது:

ஒரு பகுதியில் 100 வாக் காளர்களில் 15 பேர், முகவ ரியில் இல்லை எனகண்டறி யப்பட்டால், மீதமுள்ள 85 பேர் மட்டுமே கணக்கில் வர வேண்டும். ஆனால் செயலி, 9 பேர் இருப்பதாக தவறான எண்ணிக்கையைக் காட்டுகிறது.

விவரங்கள், முறையாகப் நாங்கள் சேகரிக்கும் பதிவேற்றம் செய்யப்படுவ தில்லை. இப்பணியில் அர சியல் கட்சியினரின் தலையி டும் இருப்பதால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி யின் நோக்கமே சிதைந்து போகிறது. உடனடியாக கலெக்டர் தலையிட்டு, தரவு உள்ளீட்டு பணிகளை கண் காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment