ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! Joint Director of School Education orders seeking details of non-teaching staff!
பள்ளிக் கல்வி - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி 05 : 122025 முதல் 09 : 122025 வரை நடைபெறுதல் கண்காணிப்பு அலுவலர்கள் கூட்டம் இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் கலந்துக்கொள்ள தெரிவித்தல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணித்தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அறிவுரைகள் வழங்குதல் சார்பு .
அய்யா / அம்மையீர்.
பொருள்:
பள்ளிக் கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி 05.12.2025 முதல் 09.12.2025 வரை நடைபெறுதல் கண்காணிப்பு அலுவலர்கள் கூட்டம் இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் கலந்துக்கொள்ள தெரிவித்தல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணித்தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அறிவுரைகள் வழங்குதல் சார்பு
பார்வை:
1 ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண். 02/2025, நாள். 10.07.2025.
2. சென்னை 06, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கடிதம் 5.5.6.7740/CV3/S1/2025, . 27.112025.
பார்வை 1.இல் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகள் 05:12.2025, 06.12.2025, 08.12.2025 மற்றும் 09:12.2025 தேதிகளில் நடைபெறவுள்ளதாகவும், இச்சான்றிதழ் சாரிப்பார்ப்பு பணிகள் செவ்வனே நடைபெற இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளின் போது பின்பற்றவேண்டி விதிமுறைகள், வழிமுறைகள், நடைமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் இயக்குநர்களால் 0212.2025, செவ்வாய் கிழமை காலை 09.30 மணிக்கு Madras Christian College Higher Secondary School, Chetpet, Chennai-600031இல் நடத்தப்பெறும் கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இணை இயக்குநர்கள் துணை இயக்குநர்கள் கலந்துகொள்ளவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய பள்ளிகளில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கான தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும், தலைமையாசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு, தகுந்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ளும்படியும், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுகொள்ளப்படுகிறார்.
மேலும், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில், மேற்கூறிய சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு தலைமையாசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மேற்கூறிய நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தலைமையாசிரியர்கள் அலுவலகப்பணியாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சென்னை. திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
நகல்
தலைவர்.
ஆசிரியர் தேர்வு வாரியம்.
பள்ளிக் கல்வி இயக்குநர்


No comments:
Post a Comment