SMC பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள் - SPD Proceedings - SMC School Management Committee Meeting to be held on 07.11.2025 - Meeting Agenda - SPD Proceedings
பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 (வெள்ளிக் கிழமை அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum சார்
டமாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.1077/A11/பமேரு/ஒசு/2025, நாள் 24.10.2025.
பார்வை 1இன்படி பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 07.11.2025, வெள்ளிக்கிழமை அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்காண் செயல்முறைகளில் உள்ள கூட்டப் பொருளில் கீழ்க்கண்டவாறு சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை
ஆதார் புதுப்பித்தல்
ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்த தகவல்களைப் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக அனைத்துப் பெற்றோர்களுக்கும் தெரிவித்துத் தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் பயோமெட்ரிக்ஸ் புதுப்பிக்கப்பட்ட ஆதார் பெற்றுள்ளதை உறுதி செய்யத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். இன்றைய சூழலில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை. ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்க வங்கிக் கணக்கு துவங்கும் போதும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போதும் மேலும் அரசு சார்ந்த பல சேவைகளைப் பெறும்போதும் புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக்குடன் கூடிய ஆதார் வைத்திருப்பது கட்டாயமாகிறது. இதில் 5 வயது முதல் 7 வயது வரை மற்றும் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் முதல் முறை இலவசமாக அரசு வழங்கி வருகிறது. மேலும் 2025 நவம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு B முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பயோமெட்ரில் புதுப்பித்தலுக்கு சேவை கட்டணம் இல்லை என்ற தவவலை அனைத்து பெற்றோருக்கும் தெரிவித்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவிகள் இதுவரை ஆதார்பெற விண்ணப்பித்துப் பெறாத மாணவர்கள் டனடியாக விண்ணப்பித்துப் பெற்று ஆதார் நகலை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டுமாறும் மேலும் ஆதார் வைத்துள்ள மாணவ மாணவிகளின் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்காதவர்கள் அருகாமையில் உள்ள ஆதார் மையங்கள் வாயிலாக ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொண்டு அதற்கான பற்றுச்சீட்டை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தகவலை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.
பெற்றோர் செயலியில் புரைப்படம் பதிவேற்றுதல் வழிகாட்டுதல்கள்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தின் போது எடுக்கப்படும் குழு புகைப்படம் மற்றும் தீர்மானப் பதிவேட்டின் புகைப்படத்தை பெற்றோர் செயலியில் உள்ள வருகைப் பதிவு பகுதியில் பதிவேற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் கீழ்க்கண்டவாறு வழக்கப்படுகிறது. நல்ல வெளிச்சம் இருக்கும் இடத்தை / வகுப்பறையினை கூட்டம் நடத்திட தேர்வு செய்யவும்
உறுப்பினர்கள் வட்ட வடிவில் அவர்ந்து கூட்ட நிகழ்வில் பங்கேற்க வேண்டும் உறுப்பினர்கள் அனைவரும் தெளிவாக தெரியும்படி கூட்டத்தின் முழு காட்சியினை (Wide Shotlபுகைப்படம் எடுக்கவும்
உரையாடல் கையெழுத்து முடிவு எடுக்கும் தருணங்கள். தீர்மானங்கள் எழுதப்படும் பதிவேட்டின் புகைப்படங்களை சிறப்பாகப் படம் பிடிக்கவும்
வெளிச்சம் உறுப்பினர்கள் முகம் மீது விழும் இருக்கட்டும் தெளிவாகவும் இயல்பாகவும்
கூட்டம் நடைபெறும் வருப்பறையின் கரும்பலகை பின்புறத்தில் இருக்கும்படி அதில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் நாள் நேரம் உள்ளிட்ட விவரங்க எழுதப்பட்டிருப்பது தெளிவாக தெரியும்படி புகைப்படம் எடுக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தொடர்பான பேனர் (Banner) இருப்பின் அதை பின்புலமாக வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும்
எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிறந்த படங்களைத் தேர்வு செய்து பெற்றோர் செயலியின் வருகைப்பதிவு பகுதியில் குழுப் புகைப்படத்தையும், தீர்மானப்பதிவேட்டின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்
அனுமதி இல்லாமல் எந்தவொரு தனிநபர் மற்றும் கூட்டத்திற்கு தொடர்பற்ற புகைப் படங்களைப் பகிர வேண்டாம்.
கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட நிகழ்வின் மேற்கூறிய இரண்டு புகைப்படங்களை பெற்றோர் செயலியில் உறுப்பினர்களின் வருகைப்பதிவு செய்யும் பகுதியில் பதிவிட அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காண் கூடுதல் கூட்டப் பொருள்களை (Addendum) சேர்த்து பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றிட தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD SMC Meeting 07.11.2025 - Agenda - பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள் - SPD Proceedings PDF
No comments:
Post a Comment