SIR 2026 தொடர்பாக பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்திக் குறிப்பு வெளியீடு Tamil Nadu Chief Electoral Officer releases press release amid various rumours circulating regarding SIR 2026
CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்திக் குறிப்பு வெளியீடு PDF
தற்போது நடைபெற்றுவரும் சிறப்பு தீவிர திருத்தம். 2026 தொடர்பாக: இச்சிறப்பு தீவிர திருத்த பணியினை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள். 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7.234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு கட்டத்தில், தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6,23 கோடி காக்காளர்களுக்கு கணக்கீட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டன. படிவங்கள்
மாவட்ட தேர்தல் அலுவகர்களால் அதிக எண்ணிக்கையிலான நியமிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து தன்ணர்வவர்கள் வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க 04.12.2025 வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அணைத்து வாக்காளர்களின் பெயர்களும் 09.12.2025 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அணைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 244,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டு படிவங்களுக்கு மிகாமல் உறுதிமொழியுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி இந்த ஜனநாயக செயல்பாட்டில் தங்கள் பங்களிப்பினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சிறப்பு தீவிர திருத்த நடைமுறையின் பங்கேற்பாளர்களின் நலனுக்காக பின்வரும் முக்கிய தகவல்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன: 1 2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில் 04.12.2025க்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவவர்களிடம் ஒப்படைத்தால் அவ்வாக்காளரின் பெயர் 09.12.2025 வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
2. 04.12.2025க்குள் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அவ்வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. 3. மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
4. வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-16T உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 5. உரிமை கோரல் மற்றும் மறுப்புரை (Claims and Objections) காலம் 09.12.2025 முதல் 08.01.2026 வரை நடைபெற உள்ளது. இக்காலகட்டத்தில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
6. அறிவிப்புக் கட்டம் (Notice Phase) 09.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அவ்வகையான வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டு விசாரணை நடத்தப்படும்.
7. வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரையில் பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும்.
அர்ச்சனா பட்நாயக்
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும்
அரசு செயலாளர்.
CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்திக் குறிப்பு வெளியீடு PDF
No comments:
Post a Comment