*SSTA-காலவரையற்ற ஊதியமீட்பு போராட்டம் அறிவிப்பு SSTA-Indefinite wage strike announcement *
*2009-க்கு பின் நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்குவோம் என திமுக அரசின் தேர்தல் அறிக்கை 311 இல் வாக்குறுதி அளித்து நான்கரை ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.*
*கடந்த செப்டம்பர்-2025 ல் 48 மணி நேர போராட்டம் அறிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் விரைவில் முடிவு செய்வதாக உறுதி அளித்தும் இதுவரை செய்யாமல் தொடர்ந்து கால தாமதம் செய்வதால் SSTA இயக்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.*
_முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களும் டிசம்பர் 1 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வது._
_இரண்டாவது கட்டமாக டிசம்பர் -5 ல் தலைநகரில் பேரணி._
_மூன்றாம் கட்டமாக டிசம்பர் -24 முதல் தொடர் ஊதிய மீட்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது._
_தமிழக முதல்வர் இனியும் காலதாமதப்படுத்தாமல் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக கரம் பற்றி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்._
*தகவல் பகிர்வு*
_SSTA- மாநில தலைமை_ மாண்புமிகு ஐயா,
பொருள்: கழக அரசின் தேர்தல் அறிக்கை எண்-311 ல் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான " சம வேலைக்கு" "சம ஊதிய" கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துதல் சார்பாக.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதிய குழுவில் 31.05.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முறைகளும் அதற்கு ஒரு நாளைக்கு 01.06.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 வது ஊதியக்குழுவில் இருந்த ஊதியத்தில் அடிப்படை ஊதியம் ₹.3170 குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.
அரசாணை எண் 220 நாள்;10.11.2008 ன் படி சுமார் 7500 இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு 2008 லிருந்து பணிகள் தொடங்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஆசிரிய தேர்வு வாரிய TRB நியமன ஆணையில் ஊதிய விகிதம் 4500-125-7000 என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி நியமன அழைப்புக் கடிதத்தில் உள்ள ஊதியத்தையும் வழங்கவில்லை. அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு சுமார் 3 லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதி அதில் 12 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர்.
01.06.2009-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு டிப்ளமோ கல்வி தகுதிக்கான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும் கிடைக்காமல் 16 ஆண்டுகளாக மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
6-வது ஊதியக் குழுவில் ரூபாய் 3170 என ஏற்பட்ட இந்த முரண்பாடு 7 வது ஊதியக்குழுவில் பன்னிரெண்டு ஆண்டு ஊதிய உயர்வு INCREMENT வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.10 ஆண்டு ஊதிய உயர்வினை (INCREMENT) உயர்த்தி உயர்த்தி வழங்க வேண்டுகிறோம்.
இந்தியாவிலேயே மிக மிக குறைந்த அடிப்படை ஊதியம் தமிழகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் உள்ளது போல் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
செப்டம்பர் மாத இறுதியில் 48மணி நேர ஊதிய மீட்பு போராட்டம் எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக நடத்த திட்டமிட்டிருந்தோம்.
அதனையடுத்து கடந்த 27-09-2025 அன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை முடிந்து இரண்டு மாதங்கள் கடந்தும் கோரிக்கை நிறைவேற்ற எவ்வித மேல் நடவடிக்கை இல்லாததால் 27-12-2025 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற மாநில செயற்குழுவில் கீழ்க்கண்ட மூன்று கட்ட போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதை தங்களுக்கு கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
> டிசம்பர் 1 முதல் "சமவேலைக்கு சமஊதியம்' கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லுதல்.
> டிசம்பர் 5 ல் சென்னை கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி.
> டிசம்பர் 24 முதல் சென்னையில் காலவரையற்ற ஊதிய மீட்பு போராட்டம்.
சமவேலைக்கு சமஊதிய ஒற்றைக் கோரிக்கையில் சுமூகமான தீர்வை விரைவில் ஏற்படுத்தி தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
முத்தமிழ் அறிஞர் முதுபெரும் தலைவர் தமிழின தன்மான தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்களின் வழித்தோன்றலில் உருவான சமூகநீதி காக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் விரைவில் இதற்கு நல்லதொரு தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். நன்றி.
: 27-11-2025
பதிவு மூப்பு ஆசிரியர்கள் SSTA
இப்படிக்கு,
ஜே.ராபர்ட்
மாநில பொதுச் செயலாளர் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA)


No comments:
Post a Comment