காலாண்டு தேர்வில் ‘சறுக்கிய’ மாணவர்களுக்கு சிறப்பு கவனம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல் - Special attention to students who 'failed' in quarterly exams - Education Department instructs teachers
'காலண்டுத் தேர்வில் சறுக்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து அரையாண்டுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுக்க வைக்கும் வகை யில் வகுப்புகள் நடத்த வேண்டும்." என, ஆசிரி யர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரை யாண்டுத் தேர்வு டிச.,10 முதல் டிச.,23 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை கல் வித் துறையினர் துவங்கி உள்ளனர்.
இதனுடன் பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாண வர்கள் பற்றிய விபரங் கள் சேகரிக்கும் பணியும் துவங்கி உள்ளது.
கல்வித்துறை அதி காரிகள் கூறியதாவது: காலண்டுத் தேர்வில் சில மாணவர்கள் மதிப்பெண் குறைந்தும், பாடங்களில் தோல்வியும் அடைந்துள் ளனர். அவர்களும் தேர்ச்சி, கூடுதல் மதிப்பெண் பெறும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்ட மிட்டு உள்ளோம்.
அவர்கள் மீது கூடு தல் கவனம் செலுத்தி வகுப்புகளில் பாடங்கள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்., என்றனர்.

No comments:
Post a Comment