ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10-11-2025 - TNTeachersTrends

Latest

Saturday, November 8, 2025

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10-11-2025

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு Recruitment for the Home Guard Force

திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 22 ஆண்கள் 7 பெண் கள் உட்பட மொத்தம் 29 ஊர்க் காவல் படையினருக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதில் போளூர் காவல் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் அரசு ஊழியர், தனியார் நிறுவன ஊழியர்கள்.

தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவ ர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவார்கள். நாளொன்றுக்கு 4 மணி நேரம் பணி வழங்கப்பட்டு ரூ. 250 ஊக்கத்தொகை வழங்கப்படும். (சராசரியாக 10 நாட்களுக்கு)

அல்லது நாளொன்றுக்கு 8 மணிநேரம் பணி வழங்கப்பட்டு ஊக்கத் தொகை ரூ. 560 வழங்கப்படும். (சராசரியாக 5 நாட்களுக்கு

போளூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண் ணப்பப் படிவத்தினை பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து அண்மையில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 10-11-2025 அன்று மாலை 5.00 மணிக்குள் போளூர் உட்கோட்ட துணைக் காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.

விண்ணப்பதாரர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் போளூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவி எண் : 94981 00433 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment