D.A. Hike - Pensionersக்கான தகவல் D.A. Hike - Information for Pensioners
அகவிலைப்படி உயர்வு - ஓய்வூதியர்களுக்கான தகவல்
Dearness Allowance Increase - Information for Pensioners
பேரன்புடையீர், வணக்கம்.
தங்களின் கனிவான கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறோம். இன்றைய தினம் (25.11.2025) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், சென்னை அவர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில், நவம்பர் 2025 மாதத்திற்கு வழங்கப்படவுள்ள ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்துடன், அண்மையில் உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி, (ஜுலை 2025 முதல் அக்டோபர் 2025 முடிய நான்கு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து), அத்துடன் நவம்பர் 2025க்கான 3% அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படும் எனவும், வரும் 28.11.2025 அன்றே அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என PPO அவர்கள் தெரிவித்தார். எனவே தாங்கள் சென்ற மாதம் பெற்ற ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 3% ஐந்து மாதங்களுக்குண்டான தொகையும் சேர்க்கப்பட்டுள்ளதா என கணக்கிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம். (கணக்கீடு உதாரணம் : அடிப்படை ஒய்வூதியம் (அல்லது) குடும்ப ஒய்வூதியம் ÷100×3×4=நான்கு மாதங்களின் நிலுவைத்தொகை உடன் நவம்பர் மாத 3% உயர்வும் சேர்த்து ) அகவை 80க்கு மேலுள்ளவர்கள் பெறும் கூடுதல் ஓய்வூதியத்திற்கும் அகவிலைப்படி உயர்வு உண்டு

No comments:
Post a Comment