Breaking

Saturday, March 21, 2026

‘உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மன்னிக்க மாட்டார்கள்’ - அன்புமணி ராமதாஸ் காட்டம்

தி.மு.க, அரசு செய்த ‘உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மன்னிக்க மாட்டார்கள்’ அன்புமணி ராமதாஸ் காட்டம்

This newspaper clipping features a headline and article quoting Dr. Anbumani Ramadoss regarding the recruitment of assistant professors in Tamil Nadu.

Political Statement: Dr. Anbumani Ramadoss strongly condemned the DMK government for only appointing 5 assistant professors out of the promised 2,708 vacancies, calling it a betrayal.

Recruitment Issue: The article highlights that despite the announcement and examinations, applicants were not hired, leading to a shortage of permanent faculty in government arts and science colleges.

Impact on Education: Due to the lack of teachers, student enrollment has significantly dropped, with only 76.2% of seats filled in the current year.

Future Action: The PMK leader assured that if a new government is formed after the upcoming elections, all answer papers will be evaluated, and eligible candidates will receive appointment orders



தி.மு.க, அரசு செய்த ‘உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மன்னிக்க மாட்டார்கள்’

அன்புமணி ராமதாஸ் காட்டம்

தி.மு.க. அரசு செய்த துரோகத்தை உதவி பேரா சிரியர் பணிக்கு விண்ணப் பித்தவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அன் புமணி ராமதாஸ் காட்டமாக தெரி வித்துள்ளார்.

மூடுவிழா

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதா வது:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரிகளுக்கு 2 ஆயிரத்து 708 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை கொண்டாட்ட மாக வெளியிட்ட தி.மு.க. அரசு, வெறும் 5 பேரை மட்டும் அப்பணிக்கு நியமித்து விட்டு ருப்பது கண்டிக்கத் தக்கது. மூடுவிழா நடத்தியிருக்கிறது. 5 ஆண்டு ஆட்சியில் வெறும் 5 உதவிப் பேராசிரியர்களை மட் டுமே நியமித்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களை தி.மு.க. அரசு சீரழித்தி அரசு கலை கல் லூரிகளில் போதிய எண்ணிக்கையில் நிரந்தர உதவி பேரா சிரியர்கள் இல்லாத தால் மாணவர் சேர்க்கை குறைந் துள்ளது. நடப்பாண்டில் மொத்தம் உள்ள 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங் களில் 96 ஆயிரம், அதாவது 76.2 சதவீத இடங்கள் மட்டும்தான் நிரம்பியுள்ளன. அரசு உயர்க் கல்வி நிறுவனங்களை சீரழித்து புதைகுழியில் தள்ளியதுதான் தி.மு.க. அரசின் சாதனையா கும்.

துரோகம்

தி.மு.க. அரசு செய்த துரோ கத்தால் 2 ஆயிரத்து 708பேருக்கு உதவி பேராசிரியர் பணி கிடைக்கவில்லை. ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட்டு, அவர்களுக்கு ஆசை காட்டி, போட்டித் தேர்வுகளை நடத்தி கடைசியில் பணி நியமனம் செய்யாமல் துரோகம் செய்த தி.மு.க. அரசை உதவி பேராசி ரியர் பணிக்கு விண்ணப்பித்த வர்கள் மன்னிக்க மாட்டார் கள்.

| இதற்காக வரும் தேர்தலில் அவர்கள் தி.மு.க.வுக்கு தண் டனை வழங்குவார்கள். தேர்த லுக்குப் பிறகு புதிய அரசு பத வியேற்றதும், தேர்வு விடைத் தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு தகுதியுடையை தேர்வர்கள் அனைவருக்கும் உதவி பேராசிரியர் பணி நிய மன ஆணைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

No comments:

Post a Comment