Breaking

Friday, March 20, 2026

1-9 வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு



1-9 வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

சென்னை, மார்ச் 21-

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிக ளில் படிக்கும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 24ம் தேதி வரை, முழு ஆண்டு தேர்வுகள் நடத்த திட்டமி டப்பட்டது.

இந்நிலையில், ஏப்., 23ல் சட்டசபை தேர் தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதை யொட்டி, ஏப்., 1 முதல் 16ம் தேதி வரை தேர்வுகள் நடத்த ஒப்புதல் பெறப்பட்டு, பள் ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று தேர்வு அட் டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 1ம் தேதியி லிருந்தும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 6ம் தேதியிலிருந் தும் தேர்வுகள் துவங்கி, ஏப்., 16ம் தேதி நிறைவடைய உள்ளன.

மேலும், ஒன்று, மூன்று, ஐந்து, ஆறாம் வகுப் புகளுக்கு, காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, எட்டாம் வகுப்புக்கு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை தேர்வுகள் நடக் கும்.

அதேபோல், இரண்டு, நான்கு, ஏழாம் வகுப் புகளுக்கு, மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை, ஒன்பதாம் வகுப்புக்கு மதியம் 2:00 மணி முதல் 4:30 மணி வரை தேர்வுகள் நடக்கும்.

This news report indicates that final exams for students in classes 1 through 9 in Tamil Nadu have been rescheduled due to assembly elections.

Final examinations will now take place from April 1st to April 16th.

Exams for classes 6 to 9 begin on April 1st, while classes 1 to 5 begin on April 6th.

Morning sessions (10:00 AM) are scheduled for classes 1, 3, 5, 6, and 8; afternoon sessions (2:00 PM) are for classes 2, 4, 7, and 9. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.1 முதல் 16 வரை முழு ஆண்டுத் தேர்வு Full year exams for students of classes 1 to 9 from April 1 to 16

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதிநடைபெறவுள்ளது. இதையடுத்து 1 முதல் 9-ம் வகுப்புவரைமுழுஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்றுபள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது


அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6-ல் தொடங்கி 16-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.8 முதல் 16-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

இந்த கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களோடு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். எனினும், பள்ளி இறுதி வேலை நாள் வரை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment