டிக்டோ ஜாக் 9.7.26 வியாழக்கிழமை அன்று மாலை வட்டார தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.
நாளை டிக்டோ ஜாக் 9.7.26 வியாழக்கிழமை அன்று மாலை வட்டார தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியரின் வாழ்வாதார பிரச்சனையான டெட் தேர்வு குறித்த கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது*.
கல்வி அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கல்வி அமைச்சருடன் நடக்கவுள்ள பேச்சுவார்த்தைக்கு பின்பு இது குறித்து விரிவான விளக்கம் தெரிவிக்கப்படும் தகவல் கிடைத்துள்ளது
பணி புரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும். ஜூலை 9ந்தேதி டிட்டோஜாக் சார்பில் வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம். Weightage marks must be awarded in the eligibility test for serving teachers – Protest by JITTOJAC at block headquarters on July 9.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளடக்கிய தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ரெ.ஈவேரா உள்ளிட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் பிற மாநிலங்களில் வழங்கப்படுவது போல் அவர்களது பணி காலத்தை கணக்கில் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். தேர்வு எழுதிய ஆசிரியர்களின் உயர்கல்வி தகுதிக்கு சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும்.
நடைபெற்று முடிந்த பணி புரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், உயர் நீதிமன்றம் வழங்கிய ஆலோசனைப்படி இல்லாமல், பாடத்திட்ட வரையறைகளை தாண்டி கேட்கப்பட்ட வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்பதை வலியுறுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தவிர்ப்பு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். இவைகள் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் 9.7.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து, ஆசிரியர்களிடம் எழுந்துள்ள உணர்வுகளை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் எடுத்துக் கூறி கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.


No comments:
Post a Comment